கதாநாயகி [Kadhaanayagi] Quotes

Rate this book
Clear rating
கதாநாயகி [Kadhaanayagi] கதாநாயகி [Kadhaanayagi] by Jeyamohan
31 ratings, 4.13 average rating, 7 reviews
கதாநாயகி [Kadhaanayagi] Quotes Showing 1-8 of 8
“கோரனிடம் “யார் வந்திருக்கிறது?” என்று கேட்டேன்.

கோரன் “ஆ” என்று சொல்லி கைவிரித்தான்.

அவனுடைய ஆ ஒரு அழகான சைகை. யாருக்குத் தெரியும் என்பது போலிருக்கும் அது. அவர்கள் புறத்தார்கள் கேட்கக்கூடிய பெரும்பாலான கேள்விகளுக்கு அந்த ஓசையைத்தான் பதிலளிக்கிறார்கள். யாருக்குத் தெரியும்! தெரிந்து என்ன ஆகப்போகிறது! எனக்கெப்படி தெரியும்! நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்! அதைப்போன்ற எத்தனையோ அர்த்தங்கள் அதற்கு வரும். தெரிந்துகொள்ள நான் யார் என்பது கூட சில சமயங்களில் தோன்றும்.”
Jeyamohan, கதாநாயகி [Kadhaanayagi]
“இந்த மொழி முதலில் சிக்கலான முடிச்சுகளான ஒரு கூடை போல முறுக்கமாக இருக்கிறது. பிறகு எப்படியோ அந்த முடிச்சுகளை அவிழ்க்க நம் அகம் பழகிவிடுகிறது. அதன்பின் நாம் உள்ளே செல்கிறோம். எங்கோ நாம் வாசித்துக் கொண்டிருப்பதை மறந்துவிடுகிறோம்.

அப்படி மறக்கும்போதுதான் புத்தகத்தின் பக்கங்களில் இருந்து மனிதர்கள் மெய்யாக எழுந்து வரத்தொடங்குகிறார்கள். புத்தகங்களில் எழுத்துக்களாக, சொற்களாக அவர்கள் கட்டுண்டிருக்கிறார்கள். அந்த கண்ணிகள் உடைய வேண்டியிருக்கிறது. அதன்பின் அவர்கள் கண்முன் நின்றிருக்கிறார்கள். முழுமையான மனிதர்களாக.”
Jeyamohan, கதாநாயகி [Kadhaanayagi]
“நான் உங்களை மன்னிக்கிறேன். ஏனெனில் நான் என்னை மன்னிக்க வேண்டியிருக்கிறது. உங்களை தண்டிக்க வேண்டும் என்றால் நான் என்னை தண்டித்துக் கொள்ளவேண்டும். நாம் எளிய பகடைகள். எவராலோ ஆட்டுவிக்கப்படுபவர்கள். நாம் சிறியவர்கள் என்பதை ஒத்துக்கொள்வோம். நமக்கு வேறு வழியில்லை என்பதை நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம். இந்த அவல நாடகத்தை இங்கே முடிப்போம்”
Jeyamohan, கதாநாயகி [Kadhaanayagi]
“நான் கோரனைப் பார்த்தேன். கோரன் என்னிடம் ”அவிடே” என்றான். திருத்திக்கொண்டு “அங்கே” என்றான்.

“என்ன?” என்று நான் அவனிடம் கேட்டேன்.

“அங்கே ஆரோ நிக்குணு எந்நு தோந்நி” என்றான்.

“யார் நிக்கிறா?” என்றேன்.

“அதாணு கோரன் நோக்கியது…” என்றபின் அவன் சுட்டிக்காட்டினான் “கதவு சிரிக்குந்ந வெளிச்சம்.”

”ஓ” என்று நான் நினைத்துக் கொண்டேன். கதவு காற்றில் திறந்து கிடந்தது. அதன் வழியாக செங்குத்தான ஒளி முற்றத்தில் விழுந்திருந்தது. அதைத்தான் நான் அசைவாக பார்த்திருக்கிறேன்.

கதவு சிரிப்பது. கோரன் மட்டுமல்ல அவர்கள் அனைவருமே எளிதாக ஒரு சொல்லாட்சியை கண்டடைந்து விடுகிறார்கள். அந்த வரி என்னை மீண்டும் இயல்பான புன்னகைக்குக் கொண்டு சென்றது.”
Jeyamohan, கதாநாயகி [Kadhaanayagi]
“அவர்களிடம் இருந்த கற்பனைத் திறன் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. அவர்கள் பொய்யை உருவாக்கவில்லை. யானைக்கு மனித குணத்தை கொடுக்கவில்லை. எந்த நீதியையும் அந்தக் கதைக்குள் கொண்டு வரவில்லை. ஆனால் யானையின் உடல்மொழியையும் அறிவையும் செயல்பாடுகளையும் மிகக்கூர்ந்து கவனித்திருந்தார்கள். யானையின் துதிக்கையை பாம்பு என்று ஒருவன் சொன்னான். யானைக்குட்டியை பெரிய பனங்கொட்டை என்று ஒருவன் சொன்னான். இன்னொருவன் அதை வண்டு என்று சொன்னான்.”
Jeyamohan, கதாநாயகி [Kadhaanayagi]
“இந்தப்பிள்ளைகளிடம் நாம் சொல்வதை மீறிச் செல்லும் வழக்கமே இல்லை. அதட்டி சொல்லும்போது அவர்கள் அஞ்சுகிறார்கள். நட்பாக சொல்லும்போது எதையுமே உடனடியாக செய்கிறார்கள் என்பதை கண்டு கொண்டேன். ஏனென்றால் அவர்களுடைய பெற்றவர்களோ பெரியவர்களோ அவர்களை அதட்டுவதில்லை. குழந்தைகளை அதட்டும் வழக்கமே அங்கே இல்லை.

அவர்கள் குழந்தைகளிடம் செயற்கையான குரலில் பேசுவதில்லை. பெரியவர்களிடம் பேசும் அதே குரல்தான். கொஞ்சலும் இல்லை, அதட்டலுமில்லை. அவர்கள் அக்குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் தான் சொல்கிறார்கள். அவற்றை மீறவேண்டும் என்ற எண்ணமே குழந்தைகளுக்கு வருவதில்லை. தாங்கள் அவற்றை செய்வதற்காகவே இருப்பதாகத்தான் எண்ணிக் கொள்கிறார்கள். ஒருபோதும் குரலை உயர்த்தி அவர்களை அதட்டவோ தண்டிக்க முற்படவோ கூடாதென்று தெரிந்து கொண்டேன்.”
Jeyamohan, கதாநாயகி [Kadhaanayagi]
“ஏனெனில் மனம் சிதைந்தவர்கள் நம்முடைய உள்ளத்தின் ஒரு பகுதியும் சிதைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறார்கள். நாம் அதைக்கொண்டே அவர்களை புரிந்து கொள்கிறோம். அத்தனை உள்ளங்களிலும் ஒரு பகுதி சிதைந்திருக்கிறது. எஞ்சும் பெரும்பகுதி சிதைய வாய்ப்பு கொண்டதாக இருக்கிறது. மெல்லிய கோடு ஒன்றின் மேல்நடந்து செல்வது போல ஒவ்வொரு கணமும் சமநிலையை தேடியபடி சென்று கொண்டிருக்கிறோம். அந்த தரிசனம் திகிலூட்டுவது.”
Jeyamohan, கதாநாயகி [Kadhaanayagi]
“மனிதர்கள் புதைத்து வைத்தவற்றை தோண்டி எடுக்கும் ஓநாய்கள் நல்ல எழுத்தாளர்கள். தெய்வங்கள் புதைத்து வைத்தவற்றையே தோண்டி எடுப்பவர்கள் மகத்தான எழுத்தாளர்கள்.”
Jeyamohan, கதாநாயகி [Kadhaanayagi]