நாற்காலி Quotes

Rate this book
Clear rating
நாற்காலி: [ கி.ரா. 40 சிறுகதைகள் ] (Tamil Edition) நாற்காலி: [ கி.ரா. 40 சிறுகதைகள் ] by கி. ராஜநாராயணன்
67 ratings, 4.13 average rating, 6 reviews
நாற்காலி Quotes Showing 1-3 of 3
“பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் பால்நுரைமீது பால் பீச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல் மெல்லிய குறட்டை ஒலி. அவள் தூங்கும் வைபவத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.”
கி. ராஜநாராயணன், நாற்காலி: [ கி.ரா. 40 சிறுகதைகள் ]
“எல்லோரும் கீதாரியைச் சுற்றிக்கொண்டு மழை வரும் அறிகுறி ஏதாவது கிடையில் தெரிகிறதா என்று கேட்டார்கள். “நேத்துலேயிருந்து ஆடுக சரியா மேயாமெ கூடிக்கூடி அடையுது மழை வராமப் போகாது” என்றார். பால் கறந்துகொண்டு வர விடலைப் பனையில் குருத்தோலை வெட்டப் போனபோது தூக்கணாங்குருவிகள் வேகமாய் கூடுகள் கட்டி முடிப்பதைப் பார்த்திருந்தார். தரைப் புற்றுகளிலிருந்து தேங்காய்ப்பூப் போன்ற வெண்ணிறத்தில் தங்களின் முட்டைகளை ‘அள்ளிக்கொண்டு’ மொலோர் என்ற எறும்புக் கூட்டங்கள் கிளம்பிப் போவதையும் அவர் பார்த்திருந்தார். மூணாம்நாள் காலையில் மஞ்சள் வெயில் அடித்தது.”
கி. ராஜநாராயணன், நாற்காலி: [ கி.ரா. 40 சிறுகதைகள் ]
“கடவுளே, ஐப்பசி மாசமாவது நீ மழையாக வரமாட்டீயா? பிறாந்துகளே நீங்கள் எங்கே போய்த் தொலைந்தீர்கள்? இட் வானத்தின் உச்சியில் நூற்றுக்கணக்காய்ப் பறந்து வட்டமிட்டு மழை வரப்போவதைச் சொல்லுவீர்களே. சிறிய நங்கூர வடிவத்தில் பறக்கும் சலங்கைப் பறவைகளையும் காணோமே. சாயந்திரங்களில் மேகங்கள் ‘நீர்வாய்க்கால்’ இடவில்லையே, சந்திரன் எட்டத்தில் கோட்டை கட்டவில்லையே, டொர்க் டொர்ர்க் என்று எங்காவது ஒரு தவளை கூப்பிடாதா. மோசம் போயிட்டோம்! மோசம் போயிட்டோம் என்று சம்சாரிகள் ஒருவருக்கொருவர் மாறிமாறி சொல்லிக்கொண்டார்கள்.”
கி. ராஜநாராயணன், நாற்காலி: [ கி.ரா. 40 சிறுகதைகள் ]