மர்ம நபர் Quotes
மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
by
தேவதச்சன்6 ratings, 4.50 average rating, 1 review
மர்ம நபர் Quotes
Showing 1-5 of 5
“காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
“தப்பித்து
ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து.
அதன் கரையோர நாணலில்
அமர்ந்திருக்கிறது
வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று.
அது இன்னும் இறந்து போகவில்லை
நமது நீண்ட திரைகளின் பின்னால்
அலைந்து திரிந்து களைத்திருக்கிறது
அதன் கண்கள் இன்னும் நம்மைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
பசியோடும்
யாருமற்ற வெறுமையோடும்.
அதைச்சுற்றி, கொண்டாடி கொண்டாடி
பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை.
அதன் சிறகுகளில் ஒளிரும்
மஞ்சள் வெளிச்சம்
காற்றின் அலைக்கழிவை
அமைதியாய் கடக்கிறது
நீ
திரும்பிப் போனால், இப்போதும் அது
அங்கு
அமர்ந்திருப்பதைக்
காணலாம். உன்னால்
திரும்பிச் செல்ல முடிந்தால்”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து.
அதன் கரையோர நாணலில்
அமர்ந்திருக்கிறது
வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று.
அது இன்னும் இறந்து போகவில்லை
நமது நீண்ட திரைகளின் பின்னால்
அலைந்து திரிந்து களைத்திருக்கிறது
அதன் கண்கள் இன்னும் நம்மைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
பசியோடும்
யாருமற்ற வெறுமையோடும்.
அதைச்சுற்றி, கொண்டாடி கொண்டாடி
பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை.
அதன் சிறகுகளில் ஒளிரும்
மஞ்சள் வெளிச்சம்
காற்றின் அலைக்கழிவை
அமைதியாய் கடக்கிறது
நீ
திரும்பிப் போனால், இப்போதும் அது
அங்கு
அமர்ந்திருப்பதைக்
காணலாம். உன்னால்
திரும்பிச் செல்ல முடிந்தால்”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
“துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
“பக்கத்து வீட்டு
பானு வீட்டிலிருந்த
வேப்பமரத்திலிருந்து
குயில் கூவுகிறது
பக்கத்து வீட்டு பானுவின் குழந்தை நிற்காமல்
அழுகிறது
பக்கத்து வீட்டு பானு வீட்டில்
கோழிக்கறி சமைத்திருக்கிறார்கள்.
நேற்று இரவிலிருந்து
அவள் வீட்டில் விளக்கு
எரியவில்லை
சின்னப் பூட்டு ஒன்று
தொங்குகிறது
எங்கள் வீட்டில் கேட்கத் தொடங்குகிறது
நிசப்தம்.
பானு நிசப்தம்.”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
பானு வீட்டிலிருந்த
வேப்பமரத்திலிருந்து
குயில் கூவுகிறது
பக்கத்து வீட்டு பானுவின் குழந்தை நிற்காமல்
அழுகிறது
பக்கத்து வீட்டு பானு வீட்டில்
கோழிக்கறி சமைத்திருக்கிறார்கள்.
நேற்று இரவிலிருந்து
அவள் வீட்டில் விளக்கு
எரியவில்லை
சின்னப் பூட்டு ஒன்று
தொங்குகிறது
எங்கள் வீட்டில் கேட்கத் தொடங்குகிறது
நிசப்தம்.
பானு நிசப்தம்.”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
“இரவின் பொருட்கள் சிலவே போலும்
ஒரு தலையணை
ஒரு எளிய மிருதுவான காற்று
அணைக்கப்பட்ட தொலைக்காட்சி
இது போதும் நம் இரவை,
உறக்கத்தை வாழ்வதற்கு
புலனகளின் இரவில்
வசிப்பவர்கள்
கொஞ்சமாய் சம்பாதித்தால்
போதும் போல.”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு
ஒரு தலையணை
ஒரு எளிய மிருதுவான காற்று
அணைக்கப்பட்ட தொலைக்காட்சி
இது போதும் நம் இரவை,
உறக்கத்தை வாழ்வதற்கு
புலனகளின் இரவில்
வசிப்பவர்கள்
கொஞ்சமாய் சம்பாதித்தால்
போதும் போல.”
― மர்ம நபர்: தேவதச்சன் கவிதைகள் முழுத் தொகுப்பு