வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு Quotes
வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
by
Su. Venkatesan625 ratings, 4.54 average rating, 90 reviews
வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு Quotes
Showing 1-21 of 21
“எது சரி, எது தவறு, என்று ஏன் வரையறுக்க நினைக்கிறீர்கள்? காலத்தை ஒருபோதும் வரையறுக்க முடியாது. தட்டின் மீது உட்கார்ந்துகொண்டு தராசை எப்படி எடைபோடுவீர்கள்?”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

“ஓடும் நீருக்குள் உறங்கும் நதி” என்று மனதுக்குள் ஒரு வரி தோன்றியது. அதுதான் பெண் எனவும் தோன்றியது”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“நம்பிய பிறகு ஒருவனைச் சந்தேகப்படுவது எளிது அல்ல”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“அரசர்கள் நாட்டை ஆள்கிறார்கள், வணிகர்கள் அரசர்களை ஆள்கிறார்கள்”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும்தாம் போரை விரும்புகிறார்கள். வாழ நினைப்பவர்கள் வேறு வழியின்றி அந்தப் போரை எதிர்கொள்கின்றனர்”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“போர் என்பது, நிகழும் இடம், தன்மை, சூழல் இவற்றைக்கொண்டு நடத்தப்படுவதுதானே தவிர, வீரர்களைக்கொண்டு மட்டும் நடத்தப்படுவதல்ல. எனவே, அந்தக் கணத்தில் எடுக்கவேண்டிய முடிவை முன்கூட்டி எடுப்பது அறியாமையாகும்”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லா கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும்போது மனிதன் பொறி கலங்கிப்போவதைத் தவிர வேறு வழி என்ன?”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“தீமையைக் கணப்பொழுதில் நன்மையாக மாற்றமுடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு. வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“படைவீரர்கள் தாம் தோற்றவுடன் வீழ்வார்கள் . குலம் காக்கும் போராளிகள் ஒருபோதும் வீழ மாட்டார்கள் ; கடைசிக் கணத்திலும் வெகுண்டெழுவார்கள்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“ஆனால், அறம் எனப்படுவது விருப்பத்தின்பாற்பட்ட செயலன்று; அது இயல்பின்பாற்பட்டது; அன்பின்பாற்பட்டது. ”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“முடிவுறாத வேட்டையை எந்த உயிரினமும் நடத்தாது. மனிதன்தான் `போர்’ என்ற பெயரில் அதை நடத்திக்கொண்டிருக்கிறான். இரக்கமற்ற அந்தக் காட்சிகளைப் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போலக் கொடுமையானது வேறில்லை. கண்களைத் திறப்பதை விடக் கடினமானது மூடுவது. மனத்துக்குள் விழுந்துகிடக்கும் கொடூரங்களை எதைக்கொண்டு அப்புறப்படுத்த முடியும்?”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“முடிக்கமுடியாத ஆட்டத்தை யார் தொடங்கினால் என்ன?” என்றார் கபிலர்.
“ஆட்டம் என்றால் அது முடியத்தான் வேண்டுமா?” எனக் கேட்டான் காலம்பன்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“ஆட்டம் என்றால் அது முடியத்தான் வேண்டுமா?” எனக் கேட்டான் காலம்பன்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“மன ஈடுபாடின்றிச் சொல்லும் ஒற்றைச்சொல்கூட ஒருவரைக் காட்டிக்கொடுக்கும்; இன்னொருவரால் கண்டறியப்படும்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“கதைகள் உருவாக்கி வைத்திருக்கும் பகை ஒருபோதும் அழியாது”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“காலத்துடனும் காதலுடன் விளையாடிப் பார்க்க விருப்பமில்லா மனிதன் யார்? மனிதனின் அடிப்படையான விருப்பம் இவை இரண்டும் தானே. அதனால்தான் எல்லோருக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“காதல்கொண்டு நெருங்க முடியாத ஒரு மானுடனை என்ன செய்வது எனத் தெரியாமல் அவள் திகைத்துக்கிடந்தாள். பெரும் வனத்தை சிறு பூ ஒன்று காதல்கொள்வதைப் போல் அவளுக்குத் தோன்றியது.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“சிந்தப்பட்ட குருதி, கதைகளின் வழியே தலைமுறைகளுக்குக் கைமாறி வந்துகொண்டே இருக்கிறது. கதைகள்தான் மனித நினைவுகளில் இருந்து, குருதிவாடை அகலாமல் இருக்கக் காரணமா?”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும்போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
― வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
“காதலை மனிதனால் அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதனை அழைத்துவரும்”