Manjal Mahimai Quotes

Rate this book
Clear rating
Manjal Mahimai (Essay) Manjal Mahimai by தொ. பரமசிவன்
37 ratings, 4.43 average rating, 5 reviews
Manjal Mahimai Quotes Showing 1-28 of 28
“சோறு விற்கக் கூடாது; நெல் விற்கலாம்; அரிசி விற்கலாம். வைதீகம் தமிழ்நாட்டை முழுவதும் வென்றெடுத்த பிறகே சோற்றுக்கட்டியினைச் சத்திரங்களில் விற்க ஆரம்பித்தனர். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தண்ணீர் விற்கக் கூடாத பொருளாக இருந்தது. இது நம் பண்பாடு.”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“சோற்றைக் கொடையாகக் கொடுப்பது (அன்னதானம்)கல்வியைக் கொடையாகக் கொடுப்பது (ஞானதானம்)
மருந்தைக் கொடையாகக் கொடுப்பது (ஔசத தானம்)
அடைக்கலம் கொடுப்பது (அடைக்கல தானம்)”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“இதைத்தான்”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“அறிவு என்பது எழுத்து மூலம் சார்ந்ததாகக் கருதக் கூடாது. அப்படிக் கருத வைத்தது ஐரோப்பிய மெய்காண் முறைமை. அதனால்தான் ஐரோப்பியர், எழுதத் தெரியாதவனெல்லாம் முட்டாள் என்று சொன்னார்கள். எழுதத் தெரியாத நம்”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“பாட்டி வைத்தியம்’ என்ற சொல் ஒரு பண்பாட்டு வன்முறையாகும். ஏனென்றால், பாட்டி எப்படி சமகாலச் சமூகத்தோடு இயங்கிச் செல்ல முடியாதோ, அதுபோல இந்த மருத்துவமும் சமகாலச் சமூகத்தோடு இயங்கிச் செல்ல முடியாது. பாட்டி எப்படிப் பரிவோடு பார்க்கப்பட வேண்டியவளோ, அதுபோல இந்த மருத்துவமும் பரிவோடு பார்க்கப்பட வேண்டியது; அவ்வளவுதான்.”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“ஒரு மக்கள் திரள் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிற முறை. சொல்லாலே, செயலாலே, கருத்தினாலே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிற முறைக்கு பண்பாடு என்று பெயர். நம்முடைய”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“உணவளிப்பதற்குப் பதிலாக இனிப்பு கலந்து ஊறவைத்த ‘காதரிசி’ வழங்கப்படுகிறது. குழந்தை தின்பண்டங்களிலிருந்து அரிசி உணவிற்கு மாறுவதை இது அடையாளப்படுத்துகின்றது”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“அவளைத் திருமணம் செய்யும் உரிமையினை ஆண் மகன் அடைகிறான் என்னும் புராதன கால நம்பிக்கையின் எச்சப்பாடாகும் இது. இன்னும் சில”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“ஸ்மார்த்தப் பார்ப்பனர்களின் வளைகாப்புச் சடங்கு ஒரு போலித் திருமணம் (னீஷீநீளீ னீணீக்ஷீக்ஷீவீணீரீமீ) போலவே நடத்தப்படுகின்றது. அதாவது ஒரு பெண்ணைத் தாயாக்கிய பின்னரே”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“அரசியல் வரலாறும் சமூக வரலாறும் மாற்றங்களைச் சந்திக்கின்றபோது அம்மாற்றங்களின் பண்பாட்டு வெளிப்பாடாக இந்தத் திருவிழாக்களே அமையும்.”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“தீபாவளி நாள் என்பது விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்குப் பார்ப்பனர் வழியாகத் தமிழ்நாட்டுக்கு வந்த திருவிழா ஆகும். வடநாட்டில் இது சமண”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அரண் செய்வதற்கும் பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கிணறுகள் இருப்பதனை இப்பொழுதும் பார்ப்பனத் தெருக்களில் (அக்கிரகாரங்களில்) காண இயலும். இந்த உரிமையினை அரசர்கள் மற்ற சாதியாருக்கு வழங்கவில்லை.”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“தரைக்குக் கீழாக விளையும் கிழங்கு வகைகள் வள்ளி, உள்ளி (வெங்காயம்), பூண்டு போன்றவற்றை ஆசாரப் பார்ப்பனர்கள் இன்றளவும் உண்பதில்லை. எனவே, பெருந்தெய்வக் கோயில்களில் அவை அனுமதிக்கப் படுவதில்லை. அவை ‘பிறப்பினால் கீழ்ப்பட்டவை’ என்ற பார்ப்பனக் கருத்தியலே அதன் குறியீடாகும்.”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“இன்றளவும் கோயில்களில் கீரை தெய்வங்களுக்கு உணவாகப் படைக்கப்படுவதில்லை. ஏனென்றால் தெய்வங்கள் ஏழ்மையானவை அல்ல;”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“ஒன்று, கடுந்துறவு நெறியினை மேற்கொண்ட சமணத் (திகம்பரத்) துறவிகள் நீராடுவதில்லை என்பதும் ஆகும்.”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் பரவியிருந்த சமண மதம் கரைந்து போனதற்குப் பண்பாட்டளவிலான காரணங்கள் பல உண்டு. அவற்றுள்”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“நாழி நறுக்கு மஞ்சள் நன்னாழிப் பச்சை மஞ்சள்
அரைச்சு வழிச்சாளாம் - மீனாள் - அஞ்சுவகைக் கிண்ணத்திலே
தேய்ச்சுக் குளிச்சாளாம் - மீனாள் - தெப்பமெல்லாம் பூமணக்க”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“கோலம் என்பது ஏன் பெண்களுக்கு மட்டுமே உரிய கலை, சடங்கியல் வெளிப்பாடாக அமைகின்றது என்பது எஞ்சிநிற்கும் கேள்வியாகும். மனிதகுல வரலாற்றில் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்பது மானிடவியல் காட்டும்
உண்மையாகும். சங்க இலக்கியங்களில்”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“பால் பலவூறுக பகடு பல சிறக்க’ என்ற ஐங்குறு நூற்றின் வாழ்த்துப் பாடலை வாசித்துக்கொண்டிருக்கும் நள்ளிரவுப் பொழுதில் இராப்பாடி அந்த வாழ்த்தினைப் ‘பட்டி பெருக பால்பானை பொங்க’ என்று தன்னுடைய மொழியில் தெருவெல்லாம் வழங்கிக்கொண்டு போகிறான்.”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“பாயசம் வழங்கப்படுவதுகூட சங்க கால உணவு மரபின்
தொடர்ச்சிதான். அதனை ‘உளுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை’ என்று சங்க இலக்கியம் குறிப்பிடும்.”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“விழாக்களம் என்பதன் முன்னால் புதிய மணலைப் பரப்புவதாகும். ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்’ என்று நெடுநல்வாடை இந்த வழக்கத்தைக்”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“என்பது முத்தொள்ளாயிரப் பாடல் அடியாகும். ‘பழி ஓர்”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“கன்னு”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேய
கழுதை செவி அரிந்தற்றால்”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது’ என்ற வாழ்த்து மரபு கண்ட
மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“என்பது, வேர்களுக்குத் தரும் மரியாதை ஆகும். கண்ணுக்குப் புலப்படாத வேர்களே உயிர்க்கூட்டத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. வெட்டுப்பட்ட”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“முதுமைக்கு மரியாதை தருவது”
தொ. பரமசிவன், Manjal Mahimai
“பூசுமஞ்சளில் புகழ் பெற்றது ‘விறலி
மஞ்சள்’ ஆகும். விறல் என்றால் முகம். விறலி என்றால் முகபாவங்கள் காட்டி நடிக்கிற நடனமாடுகிற பெண்ணைக் குறிக்கும். அன்று கூத்தாடிப் பெண்கள் அன்றைய விளக்கொளியில் நாட்டியமாடினர். அவர்களது முகம் துடிப்பாகத் தெரிய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசிக்கொண்டனர். விறலியர் மட்டும் பூசிய மஞ்சளைக் காலப்போக்கில் குடும்பப் பெண்களும் பூசத் தொடங்கினர். விறலியரை மதியாத நம் சமூகம் விறலி மஞ்சளை மட்டும் கொண்டாடத் தொடங்கியது; இன்றும் கொண்டாடி வருகிறது. விறலி மலை என்பதுதான் இன்று விராலிமலை என்று ஆனது என்பது கூடுதல் செய்தியாகும்.”
தொ. பரமசிவன், Manjal Mahimai