வாசிப்பது எப்படி? Quotes

Rate this book
Clear rating
வாசிப்பது எப்படி?: vasippathu eppadi? வாசிப்பது எப்படி?: vasippathu eppadi? by Selventhiran
1,021 ratings, 4.36 average rating, 206 reviews
வாசிப்பது எப்படி? Quotes Showing 1-14 of 14
“உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே. மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்.”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“1.​கல் மேல் நடந்த காலம் – சு. தியோடர் பாஸ்கரன் 2.​அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம் 3.​தென்னாப்பிரிக்காவில் காந்தி 4.​Rich Dad Poor Dad – Robert Kiyosaki 5.​The Art of War - Sunzi 6.​Steal Like an Artist - Austin Kleon 7.​என் இளமைக்கால நினைவுகள் - ஓஷோ 8.​புதுமைப்பித்தன் சிறுகதைகள் 9.​ஜெயகாந்தன் சிறுகதைகள் 10.​அசோகமித்திரன் சிறுகதைகள் 11.​ஓலைப்பட்டாசு சிறுகதைத் தொகுதி, கற்றதும் பெற்றதும் – சுஜாதா 12.​புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம் நாவல்கள் 13.​Ogilvy David Advertising Books 14.​இன்றைய காந்தி, சங்கச் சித்திரங்கள், இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், அறம் சிறுகதைத் தொகுப்பு – ஜெயமோகன் 15.​திருடன் மணியன்பிள்ளை - ஜி. ஆர். இந்துகோபன் 16.​சு. தியோடர் பாஸ்கரனின் சூழியல் நூல்கள் 17.​அன்னா கரினீனா, போரும் வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் 18.​குற்றமும் தண்டனையும், அசடன் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி 19.​The Magic Mountain – Thomas Mann 20.​ரேமண்ட் கார்வர் கதைகள் 21.​ஆண்டன் செகாவ் கதைகள் 22.​என் சரித்திரம் – உ. வே. சாமிநாதய்யர் 23.​The 7 Habits of Highly Effective People – Stephen R. Covey 24.​Nudge – Richard Thaler 25.​மூதாதையரைத் தேடி - சு.கி.ஜெயகரன் 26.​இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு – ராமச்சந்திர குஹா 27.​எமதுள்ளம் சுடர் விடுக – பிரபஞ்சன் 28.​தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன் 29.​ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் – ஸ்டீபன் ஹாக்கிங் 30.​உருவாகி வரும் உள்ளம் - விளையனூர் எஸ். ராமச்சந்திரன் 31.​சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி 32.​ஹோமோடியஸ் - யுவால் நோவா ஹராரி 33.​கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் 34.​அ. முத்துலிங்கம் சிறுகதைகள் & வியத்தலும் இலமே 35.​சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டேர் 36.​வந்தார்கள் வென்றார்கள் – மதன் 37.​குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி 38.​இந்தியப் பயணங்கள் – ஏ. கே. செட்டியார் 39.​காலை எழுந்தவுடன் தவளை – பிரையன் டிரேசி 40.​சுதந்திரத்தின் நிறம் – லாரா கோப்பா 41.​கொங்குதேர் வாழ்க்கை – 2 (நவீன தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு) 42.​மோக முள் – தி.ஜானகிராமன் 43.​பொன்னியின் செல்வன் – கல்கி 44.​எட்டுத் திக்கும் மதயானை, கம்பனின் அம்பறாத்தூணி – நாஞ்சில்நாடன் 45.​புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி 46.​சிலப்பதிகாரம் 47.​காவல் கோட்டம் – சு. வெங்கடேசன் 48.​வேலையைக் காதலி – ஆர். கார்த்திகேயன் 49.​அப்பம் வடை தயிர் சாதம் – பாலகுமாரன் 50.​யேசு கதைகள் – பால் ஸக்காரியா நீங்கள் வாசிப்பிலும் வாழ்க்கையிலும் உயர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! [1] நூல்: புன்னகைக்கும் பிரபஞ்சம். மொழிபெயர்ப்பு: செங்கதிர்”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது. வாழ்வில் உக்கிரமான தருணங்களில் மனதின் அடியாழத்திலிருந்து எழுந்து வருவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு மேலும் நுண்ணிய அர்த்தங்களைச் சேர்ப்பது. இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் வழிகாட்டுவது.”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“செய்யும் ஒன்றை முழுதாய்ச் செய். எல்லாம் செய்தவனாவாய். இருக்கும் எல்லாவற்றையும் செய்ய நினைத்தால் அந்த ஒன்றையும் இழந்திடுவாய். பூக்களும் பழங்களும் தேவையெனில் நீ நீருற்ற வேண்டியது வேருக்கே.[”
Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“உய்த்துணரும்”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன; சாமர்த்தியசாலி மட்டுமே அதை சுவாசிக்கிறான்?”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய முதன்மையான பதில்: “கூமூட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்துதான் ஆகவேண்டும் ராஜா!”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“தனக்கென ஒரு ஆளுமை இல்லாதவர்கள். இல்லாத ஒரு போலி பிம்பத்தை நண்பர்கள் மத்தியில் கட்டமைக்கவே ஷேரிங் பெருமாள்களாக மாறுகிறார்கள் என்கிறார்கள் உள நிபுணர்கள். நான் எப்படியாப்பட்டவன் தெரியுமா? எப்படியாப்பட்ட விஷயங்கள் எனை வந்து சேர்கின்றன தெரியுமா? உங்களுக்கு இதை தெரியப்படுத்தி வழிநடத்தவேண்டிய பொறுப்பு எனக்குதான் இருக்கிறது என ரியல் செல்ஃபுக்குப் பதிலாக ஒரு சோஷியல் செல்ஃபை உருவாக்கும் முயற்சிதான் இது.”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“நீங்கள் நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள். வாசித்ததைச் சொல்லுங்கள். போதும்.”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“முயலைப் பிடிக்க நினைத்தால் அதன் பின்னால் ஓடாதே… முயல் எங்கே ஓடும் எனக் கணித்து அங்கே காத்திரு!”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“இன்று ஓரொரு நாளும் தன்னை மேம்படுத்திக்கொள்ளாத ஒரு மனிதன் எந்த அமைப்பிலும் நீடிக்க முடியாது. அன்றாடம் கல்விக்கூடங்களுக்குச் செல்வது சாத்தியமல்ல. தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள மனிதனுக்கு இன்றிருக்கும் ஒரே சாதனம் வாசிப்புதான். அன்றாடம் தொடர்ச்சியாக வாசிப்பதொன்றே வழி. மாவீரன் நெப்போலியனின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லும் ஒரு கர்ண பரம்பரை கதை உண்டு. நெப்போலியன் சிறுவனாக இருந்தபோது கட்டாய ராணுவப் பயிற்சிப் பள்ளியில் இருந்தார். பயிற்சி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் அவரது நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து நகர்வலம் சென்றுவிடுவார்கள் அல்லது மைதானத்தில் திரண்டு அரட்டை அடிப்பார்கள். நெப்போலியனோ தனது அறையில் இருந்து வாசித்துக்கொண்டே இருப்பார். அந்த முகாமிற்கு தயிர் ஊற்ற வரும் கிழவி ஒருத்தி, “எப்போதும் அறைக்குள் அமர்ந்து படித்துக்கொண்டே இருக்கிறாயே, நீ என்ன கோச்சா பெண்ணா?” என்று கேலி செய்வாளாம். அன்று பிரான்ஸில் பெண்கள் முக்காடிட்ட வீட்டுக்குள் இருப்பார்கள். வெளியாட்களுக்கு முகம் காட்டும் வழக்கம் இல்லை. நெடுநாட்கள் ஓடின. நெப்போலியன் ராணுவத் தளபதியாக உயர்ந்து பல நாடுகளைக் கைப்பற்றி மாபெரும் பேரரசனாக ஆனார். ஒருநாள் தன் ராணுவப்பயிற்சி பள்ளி இருந்த நகரத்திற்கு படைகளுடன் வந்தார். தயிர்க்கார கிழவியை அழைத்துவரச் சொன்னார். மன்னன் எதற்காகத் தன்னை அழைக்கிறார் என பதைபதைத்தபடி வந்தாள் கிழவி. குதிரையிலிருந்த நெப்போலியன் சொன்னார், “நீ என்ன கோச்சா பெண்ணா எனக் கேலி செய்தாயே… என் நண்பர்கள் கேளிக்கையில் ஆழ்ந்திருந்தபோது நான் நாடுகளின் வரலாற்றை, யுத்த தந்திரங்களை, மகத்தான வெற்றியாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை வாசித்தேன். அன்று விளையாடிய என் நண்பர்கள் படைவீரர்களாக, அதிகபட்சம் சிறிய படையணியின் தலைவர்களாக உள்ளனர். நான் இன்று சக்கரவர்த்தியாக உலகை ஆள்கிறேன்” என்றாராம்.”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் அடிக்கடி சொல்வார் “சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன; சாமர்த்தியசாலி மட்டுமே அதை சுவாசிக்கிறான்?”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“இருவரிடமும் போதிய அளவு பணம் சேர்ந்ததும் வீடு கட்ட முடிவெடுத்தார்கள். ஒரு ஆர்க்கிடெக்டை தெரிவு செய்தார்கள். நீங்கள் வீட்டை எப்படி கட்டுவீர்களோ தெரியாது. வாசல் கேட்டைத் திறந்ததும் வீட்டு முற்றத்தில் எனக்கு மிகப்பெரிய ஒரு பவுண்டெய்ன் (செயற்கை நீருற்று) வேண்டுமென்றார் ஷீலா. நீங்கள் வீட்டை எப்படி கட்டுவீர்களோ தெரியாது; எனக்கு இரண்டாயிரம் சதுர அடியில் நூலகம் வேண்டுமென்றாராம் ஜெயலலிதா. அதுதான் வேதா இல்லம்.”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“தகவல்களை ஒன்றோடு ஒன்றை தொடர்புப்படுத்தி நமக்குள் நாமே அடுக்கிக்கொள்கிறோம். இது ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. உதாரணமாக ‘போரும் அமைதியும்’ (டால்ஸ்டாய்) வாசித்துவிட்ட ஒருவனின் மூளைக்குள் அனிச்சையாகவே ரஷ்யா மற்றும் பிரான்ஸின் வரலாறு இன்ஸ்டால் ஆகிவிடுகிறது. பிறகு உலக வரலாற்றின் மையப்புள்ளியாக அந்நாவலை வைத்துக்கொண்டே முன்னும் பின்னும் ஊஞ்சலாட முடியும்.”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?