வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை Quotes

Rate this book
Clear rating
வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை by Jeyamohan
22 ratings, 4.68 average rating, 0 reviews
வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை Quotes Showing 1-17 of 17
“பழி சூடாத எவர் புவியில் தெய்வத்தை நினைக்கப் போகிறார்கள்?”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“இசைக்குமாறு கைகாட்டி அர்ஜுனன் மல்லாந்து படுத்தான். அவனைச் சூழ்ந்து குழலிசை எழுந்து பரவியது. அது ஐந்தாம் வேதத்தின் சொற்களில் பரவியிருப்பதை அவன் அறிந்தான். அவ்விசையில் ஐந்தாம் வேதத்தின் சொற்கள் ஊடுருவியிருந்தன. கண்ணீர் வழிய புன்னகைத்தபடி அவன் அதை கேட்டுக்கொண்டிருந்தான். பெருநதியில் சிறு துரும்பென அதில் மிதந்து சென்றுகொண்டிருந்தான்.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“அஞ்சுவதற்கு என்ன உள்ளது இங்கே? மறம் ஓங்கி அறம் அழிகையில் நான் நிகழ்ந்துகொண்டே இருப்பேன் என்று பரம்பொருள் மானுடனுக்கு ஒரு சொல்லளித்திருக்கிறது அல்லவா?”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“பேருருவர்கள் எழுந்து எழுந்து மறைய இப்புவி இவ்வண்ணமே இருக்குமெனில் அவர்கள் பேருருவர்கள்தானா?”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“அவருக்கு எவ்வகையிலும் எதிர்வினையாற்றக் கூடாது. நமது எதிர்வினைகளினூடாகவே அவர் செயல்படுகிறார். அசைவில்லாத உயிரை வேட்டையாட முடியாத பல்லி போன்றவர் அவர்.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“மென்மையான தளிர்க்கொடிக்கு இடமளிக்கும் பெருமரம் தன்னை அது சுற்றி இறுக்கி நெரித்து உண்ணப்போவதை அப்போது உணர்வதே இல்லை.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“அவர்கள் எவருமே விழிப்புள்ளம் கொண்டிருக்கவில்லை. “கொல்லுங்கள்! அந்தகர்களை கொல்லுங்கள்!” என்று அந்தகர்களே கூவிக்கொண்டிருந்தனர்.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“வாயை மூடு!” என்று கிருதவர்மன் கூவினார். சாத்யகி “மூடாவிட்டால் என்ன செய்வாய்? நான் தூங்கும்போது தீ வைப்பாயா? தூங்குபவர்களை எரிக்கும் மாவீரன்! எவரும் தூங்கவேண்டாம், இவர் எரித்துவிடுவார்! அஹஹஹஹா!” என்று கூவிச் சிரித்தார்.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“சாத்யகியும் கிருதவர்மனும் அருகருகே அமர்ந்து தங்களுக்குள் மெல்லிய குரலில் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் உள்ளம் இணைந்திருப்பதை அவர்கள் சற்றே தொட்டுக்கொண்டிருப்பது காட்டியது. அவர்கள் அவ்வப்போது கைகளாலும் தோள்களாலும் ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டனர். அவர்கள் மைந்தரின் விளையாட்டைக் கண்டு மகிழ்ந்திருக்கும் தந்தையரின் முகம் கொண்டிருந்தனர். அங்கு நிகழும் ஒவ்வொன்றையும் கிருதவர்மன் களியாடுகிறார் என்றும் சாத்யகி மகிழ்ந்து நகைக்கிறார் என்றும் தோன்றியது. சில சமயங்களில் சாத்யகி போதும் என்று பொய்யான சீற்றத்துடன் சொல்லி கிருதவர்மனின் கையில் அடித்தார்.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“கள் என்பது என்ன? மரம் கொண்ட காமம். இனிமையை காய்ச்சி குறுக்கி எடுக்கும் மது என்னும் பித்து இப்புவி கொண்ட காமத்தின் உச்சம் அன்றி வேறென்ன?”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“இந்தக் காடு தன்னைத்தானே பற்றவைத்துக்கொள்ளவும் அணைத்துக்கொள்ளவும் பயின்றிருக்கிறது.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதுகொண்டிருந்தனர். பலர் தங்களின் உற்றாரைத் தேடி ஒவ்வொரு முகமாக பார்த்தபடி அவர்களின் பெயர்களை கூச்சலிட்டபடி சென்றுகொண்டிருந்தனர். பெற்றோரைப் பிரிந்த குழந்தைகள் கதறி அழுதபடி அலைந்தனர். ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொருவரும் முகம் தூக்கிப் பார்த்து அது தங்கள் குழந்தையல்ல என்று விட்டுச்சென்றனர். விட்டுச்செல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் விட்டுச்செல்பவர்களின் ஆடையை பற்றிக்கொண்டு “தந்தையே!” என்றும் “அன்னையே!” என்றும் கதறி அழுதன. அவர்கள் பிரிந்த பின் நிலத்தில் விழுந்து கைகால்களை உதறி கூச்சலிட்டன.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“என் புரவிக் குளம்படி கேட்டு விழுந்து கிடந்தவர்களில் சிலர் கைநீட்டி “தண்ணீர்! தண்ணீர்!” என்றோ “உதவுங்கள்! உதவுங்கள்!” என்றோ கூவினர். அவர்களின் உடல்களின் மீதாக புரவியைச் செலுத்தி மேலே சென்றேன்.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“நாம் தீயவர்களல்ல என்று நாமே உணர்வதைப்போல் மகிழ்வும் நிறைவும் அளிப்பது பிறிதொன்றில்லை.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“இவர் கையால் ஒருநாள் களத்தில் நான் கழுத்தறுபட்டு விழுவேன் என எண்ணினேன். அப்போது இவர் என் தலையைப் பற்றி தூக்குவார் என்று கற்பனை செய்தேன். அதன்பொருட்டே இந்நீள்குழல் வளர்த்தேன்.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“வஞ்சத்தைவிட பெரியது தனிமை. சிறு தனிமை வஞ்சத்தை பெருக்குகிறது. பெருந்தனிமை அழிக்கும். தனிமை பேருருக் கொள்ளுமெனில், நெடுநாள் நீளுமெனில் அது அனைத்தையும் சிறிதாக்கி தான் மட்டுமே எஞ்சும், தனிமைக்கு மறுபெயரே மெய்மை”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
“வெயிலில் மலர்கள் அழகுகொள்வதுபோல அவர் வெறுப்பு பொழியப்படும்போதே உள்ளம் மலர்கிறார்.”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை