இதுவே சனநாயகம் [Ithuve Sananaayagam] Quotes

Rate this book
Clear rating
இதுவே சனநாயகம் [Ithuve Sananaayagam] இதுவே சனநாயகம் [Ithuve Sananaayagam] by தொ. பரமசிவன்
35 ratings, 3.97 average rating, 4 reviews
இதுவே சனநாயகம் [Ithuve Sananaayagam] Quotes Showing 1-26 of 26
“வேர்களைப்பற்றிய அறிவு என்பது, விஞ்ஞானத்தின் ஒரு பகுதிதான். பண்டைக்காலத் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வது ஐரோப்பியக் கொடும்பிடியிலிருந்து இத்தருணத்தில் நம்மை விடுவிக்க உதவும் என்பது இடதுசாரி ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“சைவத்திலும் வைணவமே வீச்சுடைய நெறியாக வாழ்ந்ததும் தெரிய வருகின்றது. இந்நிலைமைக்கான காரணங்கள் என்ன? மறுபுறத்தில் சமணத்தின் தொன்மை சுட்டும் சான்றுகள் ஒப்பீட்டளவில் நெல்லை மாவட்டத்தில் மிகுதியாக உள்ளன. குறிப்பாகக் கழுகுமலை, வள்ளியூர், மறுகால்தலை, சிங்கிகுளம் ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம்.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“சைவ நாயன்மார் அறுபத்து மூவரில் மதுரைக்குத் தெற்கிலுள்ள நிலப்பகுதியிலிருந்து யாரும் இடம்பெறவில்லை என்பது ஆய்வுக்குரிய செய்தியாகும். அதேநேரத்தில் இப்பகுதியில்”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“அரங்கேறியிருக்கின்றது. ஆனந்தவிகடன், தினமணி, சுஜாதா, ஐராவதம் மகாதேவன், அமெரிக்கன் கான்சலேட், ஆல் இண்டியா ரேடியோ, தூர்தர்சன், வெளிநாட்டுப் பிராமணர் ஆகியோருக்காகவும் கிரியாவின் தற்காலத்திற்காகவும், அரைப்பார்ப்பனர்களாலும் புதிய பார்ப்பனர்களாலும் (Neo Brahmins) தயாரிக்கப்பட்டுள்ள அகராதி இது. “சர்வ ஜனாஉற் சுகினோ பவந்து”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“சுருக்கமாகச் சொன்னால் தற்காலம், எழுத்துத்தமிழ் என்னும் இரண்டு போர்வைகளில் தமிழன் கையைக்கொண்டே தமிழன் கண்ணைக்குத்தும் அவலம் மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“அரசு அல்லது அதிகாரம் சார்ந்ததாகச் சொற்பொருள் தருவதில் அகராதி தனிக்கவனம் செலுத்தியிருக்கிறது. எடுத்துக் காட்டாக ‘அவைத்தலைவர்’ என்ற சொல் சட்டமன்ற மக்களவைத் தலைவரை மட்டுமே குறிப்பதாக அகராதி சொல்கிறது. சாதாரணக் கூட்டத்தின் தலைவர் அவைத்தலைவர் ஆகமாட்டாரா? ‘சீர்மரபினர்/முன்னாள்”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“தெரியும். இது Neo Brahminismத்தின் முகங்களில் ஒன்று.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“இது போல். எனவே ஒரு ‘பொதுஎழுத்து மொழி’ என்பது பன்முகமான பண்புகளைக் குலைத்தும் அழித்தும் மேலெழுகிற ஆதிபத்தியம் ஆகும்.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்க துளிக்க என்
குட்டன் வந்தென்னைப் புறம் புல்குவான்”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“கருத்தியலுக்கு மாறான தடயங்களை ஒவ்வொரு கட்டத்திலும் பெருவாரியான மக்களின் வாழ்வியற் சடங்குகளிலிருந்து காட்ட முடியும். வீட்டுச் சடங்குகள், சாதிச் சடங்குகள், கோயிற் சடங்குகள், நடைமுறைகள், பழமொழிகள் எனச் சொல்லாடலுக்கு வெளியிலும் உள்ளுமாகத் தமிழ்ச் சமூகம் வெளிப்படுத்தும் கருத்தியலுக்கும் அறிவுச் சொல்லாடல்களுக்கும் இடையிலுள்ள வெளி தனியாக அளந்தறியப்பட வேண்டிய பெரும் பரப்பாகும். அவ்வெளியினை”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“வைதீகம் இங்கே பார்ப்பனியத்தின் காவல் கோட்பாடாக மட்டுமே இருந்தது. வருணாசிரமமே (விசயநகரப் பேரரசர்களால்) இங்கே இந்துத்துவத் திற்குக் கால்கோள் இட்டது என்பதே வரலாற்று உண்மை.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“வேதத்தின் தலைமையைக் கொள்கையளவில் ஒத்துக்கொண்டவர்கள் மீதெல்லாம் திணிக்க இயலாது. வைதீகம் என்பது வேதத்தை மட்டுமே ‘சுத்த சுயம்பு’வாகக் கொண்டு பொருண்மை நிராகரிப்பையும் பார்ப்பன மேலாண்மையினையும் ஒருசேர முன்வைக்கும் தத்துவமாகும். பார்ப்பனர்களின் சந்தியா வந்தனம் என்ற அடிப்படையான வைதீக வழக்கத்தைப் பார்ப்பனருடன் நின்றுகொண்டே அப்பர் கண்டிக்கிறாரே? அதனை எப்படிப் பொருள் கொள்வது?”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“ஆண்டாள் பாடல்களில் குமுறும் உணர்வு சோகம்தான்” (ப. 182) என்பது மறுபொருள்கோடலுக்குச் சரியான எடுத்துக்காட்டாகும். கீழ்ப்படிதல் என்ற”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“நெறிகளில் குறுக்குவெட்டாகப் பாய்ந்து தனக்கென நிலையான ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டது.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“ஈஸ்வரனது இருப்பை மறுத்துவிட்ட காரணத்தால் சமண - பௌத்தர்கள் கழுவாயினை உலகியலுக்கு உரியதாக ஆக்கி வைத்திருந்தனர். ஆனால் அதைத்”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“புதுமைப்பித்தன். இந்தக் கதையைப் படித்துவிட்டுப் புராணக் கதைகளைத் தம் விருப்பப்படி மாற்றக்கூடாது என்ற ‘நீதி’யை வலியுறுத்தக் கலைமகளில் ‘அகலிகை கதை’ என்ற சிறுகதையை இராஜாஜி எழுதினார் என்பது நூலாசிரியர்கள் தரும் புதிய செய்தியாகும்.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றம் ஒன்றைக் கலைநயமும் சொல்லழகும் கொண்டதாகச் சித்திரித்தால் அதுவே சிறந்த சிறுகதையாகிறது” என்கிறார் ராஜம் கிருஷ்ணன்.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“ஒரு நூற்பா, கல்வியூரி, கல்லூரியாகும் என்கிறது. ஆறாவதான பல்பொருள்”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“நெருக்கமாக இருந்தபொழுது ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் குரல் கலகக் குரல்தானே. அது போல ‘அந்தணர்’ என்ற சொல்லைப் பார்ப்பனர்கள் தமக்கு வழங்கிய காலத்தில், வள்ளுவர் அச்சொல்லுக்கு ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்ற எதிர்மறை வரைவிலக்கணம் தர முற்படுகின்றார்.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“கல்கட்டு இடையர் (Kalkat Ideiyar) பற்றி இப்போது அறிய இயலவில்லை; அஞ்சாலி”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“அறுப்புச் சுகம்’ (கட்டிக்கொண்ட”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“விதவை, கைம்பெண், கைம்பெண்டாட்டி (கம்மனாட்டி), அறுத(ா)லி, முண்டை, வெள்ளைச் சேலைக்காரி என்பன தமிழில் கைம்பெண்ணைக் குறிக்க வழங்கும் இழிவான சொற்கள். இவை வசைச்”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“கிருஷ்ணனையே கொண்டாடுகின்றது என்பதே நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய செய்தியாகும்.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“தமிழ்நாட்டுப் பக்தி இயக்கத்தின் முக்கியமான மற்றொரு கூறாகப் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் இன்றளவும் அதிர்ச்சி தரும் ஒரு செய்தியினை முன்வைக்கின்றார். ‘பிராமணனாக இருக்கும் ஒருவன் பக்தனாக முடியாது. பக்தனாக இருக்கும் ஒருவன் பிராமணனாக முடியாது. எனவே, நான் எனது பிராமணத் தன்மையினை விட்டு விடுகிறேன்’ என்று பிராமணனான தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகின்றார். குளித்து மூன் றனலை யோம்பும் குறிகொளந் தண்மை தன்னை”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“ஆழ்வார்’ என்ற சொல்லிற்கு ‘அரச மரபில் பிறந்த பெண்’ என்பதே பொருளாகும். அரச குடும்பத்துப் பெண்களும் அரசனின் மனைவியும் மற்றவர்களால் ‘ஆழ்வார்”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam
“அதிகார மையங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக உணர்வுகளே (அதிலும் குறிப்பாக எளிய மக்களின், பெண்களின்) இந்த நாட்டில் சமயத்தையும் சமயச் சார்பின்மையினையும் ஒருங்கே பாதுகாத்து வருகின்றன.”
தொ. பரமசிவன், Ithuvae Sananaayagam