கடமை கண்ணியம் கட்டுப்பாடு Quotes
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
by
Ravishankar Ayyakkannu82 ratings, 4.28 average rating, 17 reviews
கடமை கண்ணியம் கட்டுப்பாடு Quotes
Showing 1-9 of 9
“ஒரு வண்டியின் பின்புறம் ஒரு கயிற்றில் நாயைக் கட்டி இழுத்துச் செல்கிறார்கள். அந்த நாய் எவ்வளவு முயன்றாலும் அந்த வண்டியோடு தான் செல்ல முடியும். இந்த இயல்பைப் புரிந்து கொண்டு, நாய் தானாக அதனோடு நடந்து சென்றால், இலகுவாக நடக்கலாம். இல்லை, நான் வேறு பக்கம் தான் போவேன் என்று அடம் பிடித்தால், தர தரவென்று இழுத்துச் செல்லப்படும். இது தான் விதி. அதாவது இயற்கை விதி. இந்த விதியைப் புரிந்து கொள்ளுங்கள். காதலியுங்கள். Amor Fati! அதாவது Love your fate என்கிறார்கள்.”
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
“ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு, அதில் தேர்ச்சி பெற உழையுங்கள். கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக”
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
“ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டே இருக்காதீர்கள். அந்த நல்ல மனிதனாக வாழத் தொடங்குங்கள். இன்னும் சிறந்த மனிதராகத் திகழ்வதற்கு இன்னும் எத்தனைக் காலம் தான் காத்திருப்பீர்கள்?”
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
“எது சரி இல்லையோ, அதைச் செய்யாதீர்கள். எது உண்மை இல்லையோ, அதைச் சொல்லாதீர்கள்”
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
“இன்பம் துன்பம் என்று எதுவும் இல்லை. ஒரு நிகழ்வை நாம் எப்படி மனதில் ஏற்றிக் கொள்கிறோம் என்பதில் தான் துன்பம் நேர்கிறது.”
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
“யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தானம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192) பொருள் எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம் ஆதலினால்,பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.”
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
“இன்று தான் உன் வாழ்க்கையின் கடைசி நாள் போல் வாழ்க”
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
“The best revenge is not to be like your enemy" - Marcus Aurelius”
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
“பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள், பகைவர் முயற்சியில்லாமலேயே தமக்குத் தாமே குழி வெட்டிக் கொள்வார்கள்" என்கிறார் கலைஞர்.”
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
― கடமை கண்ணியம் கட்டுப்பாடு
