எழுத்துக் கலை Quotes

Rate this book
Clear rating
எழுத்துக் கலை எழுத்துக் கலை by விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan
10 ratings, 3.70 average rating, 1 review
எழுத்துக் கலை Quotes Showing 1-15 of 15
“ஒருநாள் திரும்பிப் பார்க்கயில் நீ மரங்கொல்லியாக மட்டுமே எஞ்சி நிர்பதை உணர்வாய். அரிதாரம் பூசி இன்னும் கொஞ்சம் இளமையாய் எழுத இன்னொருவன் கிடைத்துவிட்டால் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட விதி முற்றிய விபச்சாரி போல் உணரத்தொடங்குவாய். வந்துபோன எந்த வாடிக்கையாளனுக்கும் உன்னை அடையாளம் தெரியாது. காமம் கலக்காத தனிமையின் தவிப்பு.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“காதலில் தோற்றவன் கவிஞனாகிறான் கவிஞனாவதற்காக வேண்டி காதலிப்பவன் காதலிலும் ஜெயிப்பதில்லை கவிஞனாகவும் ஆவதில்லை – கண்ணதாசன்”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“சுற்றிப்பார் சோதி பார்வைதெளி சுடர்ந்தெழுவாய்.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“மனிதர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அசைக்கப் படுகையில் பிடித்துக்கொள்ள ஏதுமற்று காப்பாற்ற வந்தவனின் கழுத்தையே நெருக்குவது போல”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“புதிர் போட்டு விடை கண்டுபிடித்தால் இண்டலெக்ச்சுவல் என்கிற சுய சன்மானம் வழங்கிக் கொள்ள மிடில் கிளாசுக்கு ஒரு சோவும் பாலச்சந்தரும் போதாதா.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாகில் வாக்கினிலே ஒளியுண்டாகும் இதைச் சொன்னவனைவிடவா ஒரு பெரிய கலகக்காரன் இனிமேல் பிறக்கப் போகிறான்.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு முதல் காவு என்னை சுற்றி இருக்கும் மனிதர்கள்தான். புலம்பியே அமைதி காணவும் விளம்பியே கூர்மையடையவும் பேசியே எழுதாமல் போகவும் நான் சபிக்கப்பட்டிருக்கிறேன்”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“எழுதமுடியாமல் இருக்க முடியாததால் எழுத வருபவனுக்குப் பெயர்தான் எழுத்தாளன். எழுத வருகிறது என்பதற்காக எழுதுபவனுக்கு பெயர் கேளிக்கையாளன்.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“எழுதமுடியாமல் இருக்க முடியாததால் எழுத வருபவனுக்குப் பெயர்தான் எழுத்தாளன்.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“தயவுசெய்து ‘ஹரியுடன் நான்’ நிகழ்ச்சியைப் பாருங்கள். எத்துனை நுட்பங்கள். எப்படியாகப் பயிற்றுவிக்கப்படுகின்றனர். கேள் கவனி பயிற்சிசெய் பாடு.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“பின்னாளில்  பெரும்  சாதனைபுரியப் போகிறவன், முதல் பிரசுரத்திலேயே தெரிவான். ஏனெனில் அது அவன் எழுதிய முதல் எழுத்தன்று எழுதி பார்த்தது  ஏராளம். எழுதுகோலை  தாளில்  வைக்கும்  முன்பாக, வாக்கியங்களை மனதிற்குள் உருட்டிக்கொண்டு இருந்தது, எப்போதிருந்து என்பது,  அவன்  மட்டும அறிந்த  ரகசியம். விந்து  உள்ளே  விழும் முன்பாகவே விருதுக்கு அணிகிற கோட்டுக்கு அளவுகொடுக்க தயாராகும் அவசரயுகம்.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“உடற்பயிற்சி சாதனங்களை வாங்கி வைத்தாலே உடல் இளைத்துவிடும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்பது மிக தாமதமாகவே புரிந்தது.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“கிடாவை  வளர்த்துதான்  வெட்டவேண்டும் – கோணங்கி  சொன்னதாக வலையத்தில் படித்தது. கிடைக்கும் முதல் தருணத்தில் ஒரே போடு. போட்டுத்தள்ள, தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். யார் கிடா யார் வெட்டுக்கத்தி என்பதைக் காலம்தான் தீர்மானிக்கப்போகிறது”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“மனிதர்கள் தம்மை எதுவாக நம்புகிறார்களோ அதுவாக ஆகின்றனர். எனக்கு இது சாத்தியமில்லை என்கிற நினைப்பே என்னை இயலாதவனாக ஆக்கிவிடுகிறது. ஆனால் என்னால் முடியும்  என்கிற  நம்பிக்கையால் அதற்கான  ஆற்றலை  அடைகிறேன், தொடக்கத்தில்  அது  என்னிடம் இல்லாதிருந்த போதிலும் – மஹாத்மா”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை
“நெருக்கடிகளே   நம்மை    நமக்கு   அறிமுகம்    செய்கின்றன.  நமது  சாத்தியங்களை  விரிவுபடுத்துகின்றன.”
விமலாதித்த மாமல்லன், எழுத்துக் கலை