பதினெட்டாம் பெருக்கு Quotes
பதினெட்டாம் பெருக்கு
by
ந. பிச்சமூர்த்தி15 ratings, 3.47 average rating, 2 reviews
பதினெட்டாம் பெருக்கு Quotes
Showing 1-1 of 1
“தனிமை என்பதை எல்லோரும் பிரமாதப்படுத்துகிறார்கள். ஆனால் தனிமையை ரசிக்க எல்லோராலும் முடியாது. தனிமையில் வசிக்க ஒரு சிலரால்கூட முடியாது. சொல்லப் போனால், சாதாரண மனிதனுக்கு தனிமை அபாயகரமானது - உடல், உள்ளம் எல்லாவற்றிற்கும். கடிவாளமும் வண்டி யோட்டியும் இல்லாத குதிரை ‘டாக்கார்டை’ இழுத்துப் போவதென்றால் எப்படி இருக்கும்? நாலுபேர் நடுவிலிருந்தால் தான் சாதாரண மனிதன் நேரும் கூருமாய் இருப்பான். தனிமையில் மனது சலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு நொடி பச்சைக்குதிரை தாண்டி அண்ட சராசரங்களுக்கு அப்பால் போய் நிற்கும். மறு நொடியில், பாய்ச்சிய நங்கூரம் போல் மனக்கடலின் அடி மட்டத்தில் போய் நிலைகொள்ளும். ஒருதரம் தன்னலமற்ற தூயவெளியில் நடைபோட்டுப் பழகும். மறுதரம், விலங்கினப் போக்கிலே, வாலை கொண்டைமீது போட்டு நாலுகால் பாய்ச்சலில் போகும். காளைபோல் கட்டற்று ஓடும். பிராண சக்தி நிலைகொள்ளாது பாதரசம் போல் சிதறித் தொல்லை கொடுக்கும். தனிமையைக் கையாளத் தெரிந்தவன் யோகி, ஞானி.”
― பதினெட்டாம் பெருக்கு
― பதினெட்டாம் பெருக்கு
