யதி [Yathi] Quotes
யதி [Yathi]
by
Pa Raghavan103 ratings, 4.38 average rating, 10 reviews
யதி [Yathi] Quotes
Showing 1-30 of 37
“தவமென்பது வாழ்வது. வாழ்வென்பது நிறைகுறைகளின் சரி விகிதக் கலவை. நிறைகள் சார்ந்த அகங்காரமும் குறைகள் சார்ந்த குற்ற உணர்வும் தவிர்க்க முடியாதவை. இதில் எதைத் தவிர்க்க நினைத்தாலும் தோற்கத்தான் வேண்டும்.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“பறவைகள் நடப்பதற்கு ஹட யோகம் பயில்வதில்லை. ஒரு முழு வாழ்நாளைப் பரீட்சைகளில் தொலைப்பதில்லை”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“மனிதனல்லாத அனைத்துப் பிறப்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏதோ ஒரு சாமர்த்தியம் இருக்கும் என்று தோன்றியது.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“பூரணத்துவத்துக்காக அலைவது வீண். இந்த உலகில் எதுவும் பூரணமடைந்ததல்ல. எச்சங்களில் இருந்து கற்றுக்கொள்வதே நமக்கு விதித்தது”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“ஜபம் ஒரு சுய இன்பம். வெறும் சக்தி விரயம்.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“சன்யாசம் ஒரு தருமம் என்றால் பாசம் ஒரு தருமம். உயர்வென்ன தாழ்வென்ன.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“குற்ற உணர்வற்று இருப்பதே துறவு.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“நகரும் எதுவும் நதியே. துர்நாற்றம் நீரின் பிழையல்ல.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“ஆண், பெண், நபும்சகம் என்பது போலத் தாய் என்பவள் ஒரு பிறப்பு.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“ஞானமடைந்தவனின் முதல் அடையாளம் அவன் வெளிப்படையாக இருப்பான் என்பது.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“தோல்வியின் ருசி முதல் முதலில் தட்டுப்பட்டபோது புத்தி உடனே உணவில்தான் சென்று ஒளிந்துகொள்ளச் சொன்னது.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“உணவு நுழையாத உடலுக்குள் நோய்களும் நுழையாது”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“உண்மையில் பசியென்பது வயிற்றில் அல்ல; நினைவில் பிறப்பது”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“சிறகை அசைக்காமல் நடு வானில் மிதக்கும் ஒரு கழுகினைப் போல அவர்கள் பேசும் சொற்களின் ஒலி இங்குமங்கும் நகராமல் இருவர் உதடுகளுக்கு இடையிலேயே மிதந்துகொண்டிருக்கும்”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“ஒரு துப்பாக்கி இருந்தால் மட்டும்தான் வாழமுடியும் என்றிருந்தால் இயற்கை நம்மைப் படைக்கும்போதே ஒரு துப்பாக்கியுடன் படைத்திருக்கும். இடையில் வந்து சேரும் எதுவும் நிரந்தரமல்ல”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“உலக சரித்திரத்தில் எந்த ஒரு துறவியும் தன் உறக்கத்தில் வரும் கனவுகளை உண்மையாக எடுத்துச் சொன்னதாக நான் அறிந்ததில்லை.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“ஒழுக்கம் என்பதே அடுத்தவர் அபிப்பிராயம்தானே? அதற்கொரு பெயர் கொடுத்தால் தெய்வமாகிவிடுகிறது. எனக்கு அடுத்தவர் அபிப்பிராயம் முக்கியமாக இல்லை என்பதால் தெய்வமும் என்னிடத்தில் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“பிழைப்பது அல்லது வாழ்வது என்பது வேறு. வாழ்வுக்கு அப்பால் உள்ளவற்றின் அடிப்படைகளை அறிவது வேறு. சன்னியாசம் அதற்கான அடிப்படை சௌகரியம். அதை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்த நினைப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் தொடக்கப்புள்ளி”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“உணர்ந்தவனுக்கு உருவம் அநாவசியம். உணரும் வரை எல்லாமே அவசியம்”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“சுதந்தரம், அதன் முதல் விதியே அடுத்தவனை நினைக்காதிருப்பதும் அவன் சொற்படி வாழாதிருப்பதும்தான்.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“சன்னியாசம் என்பது இறுதிவரை முயற்சியும் பயிற்சியும் மட்டுமே.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“சித்தர்கள் தமது மரணத்தைக் காரண காரியங்களுடன் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். இருந்தது போதும் என்பதல்ல; இல்லாமல் இருப்பதன் அவசியம் உணரப்படும்போது மட்டுமே அவர்கள் மறைகிறார்கள்.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“முட்டாள்கள் நிறைந்த உலகத்தில் நான் வாழ விதிக்கப்பட்டிருப்பது என் துரதிருஷ்டம். அதற்காக நான் முட்டாளாகிவிட முடியாது. என் சுதந்தரம் என்பது முட்டாள்த்தனத்தை அனுமதிக்காதது. அபத்தங்களுக்கு அங்கு இடமில்லை. அற்பத்தனங்களுக்கு இடமில்லை.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“சராசரி மனிதர்களிடம் ஆத்மாவைக் குறித்துப் பேசுவது வீண்”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“வாழ்நாளில் மதத்தையோ கடவுளையோ மருந்துக்கும் தொட்டுப் பாராமல் உன்னால் மக்களுக்கு நாலு நல்ல விஷயங்களைச் சொல்ல முடியுமானால் உன்னைக்காட்டிலும் உயர்ந்த ஜீவன் வேறில்லை.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“சராசரிகளால் நுழையவே முடியாத ஒரு பேருலகின் வாசல் கதவு வரை சென்று தட்டாமல் திரும்பிவிட்ட பரிதாபம் அவனது ஒவ்வொரு சொல்லிலும் தொனித்தது.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“பணத்தைத் தொடாமல் ஒரு மணி நேரம் இருப்பதும் ஒரு வித தியானம்தான்”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“வாழ்வுக்கு ஒரு தாளகதி உண்டு. அதில்தான் அனைத்தும் இயங்கியாக வேண்டும். காலம் பெரிதென்றாலும் ஒவ்வொரு நாள் வாழ்வின் மூலமாகத்தான் அதனைக் கடக்க வேண்டும்.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“பாவனைகள் சக்தி மிக்கவை. மின்சாரம் நிகர்த்த வீரியம் கொண்டவை. ஆனால், சரியான இடத்தில், சரியான அளவில் கையாளத் தெரிந்திருப்பது அவசியம். மேதைமை என்பது அதில் அடங்கிய சங்கதி.”
― யதி [Yathi]
― யதி [Yathi]
“குற்ற உணர்வற்று இருப்பதே துறவு. ஒரு குழந்தையிடம் அதனைக் காணலாம். கடவுளிடமும் அது உண்டு”
― யதி [Yathi]
― யதி [Yathi]
