வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல் Quotes
வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
by
Jeyamohan28 ratings, 4.75 average rating, 1 review
வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல் Quotes
Showing 1-30 of 44
“தெய்வங்களுக்கு முன்னால்தான் மானுடர் மிகச்சிறப்பாக நடிக்கிறார்கள்”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“ஆசிரியரே, சிகண்டி தன் முதலெதிரியை நாளும் எண்ணி ஊழ்கம் செய்து பயின்றவர். பெரிய எதிரிகளைக் கொள்பவர் அவரளவுக்கே பெரிதாகிறார் என்பதற்கான சான்று அவர். சில தருணங்களில் எதிர்நின்று பொருதுபவர் பீஷ்ம பிதாமகரேதானோ என உளம் மயங்கினேன். அம்புகளின் விசையும் கோணமும் மட்டும் அல்ல. அந்த ஆணிலியுடலில் பேராண்மை மிக்க பீஷ்மரின் அசைவுகள் எழுவதை என் விழிகளால் கண்டேன்” என்றார். “பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டவர்களிடம் கேட்கவேண்டும், அவரில் சிகண்டி எழுந்த தருணங்கள் உண்டா என” என்றார் சகுனி. பின்னர் திரும்பி கண்களைச் சுருக்கி அஸ்வத்தாமனை நோக்கி “பீஷ்மரில் எழுபவள் அம்பையாகவும் இருக்கக்கூடும்…” என்றார்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“தன் அம்புகளால் அவருடைய அம்புகளை அறைந்து ஒவ்வொரு கணமாக எதிர்கொள்கையில் அவன் அவருடைய வீச்சும் விசையும் மிகுந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். எதிர்நிற்பவரின் விசை மிகுவது நன்று. அது அதில் வீழ்ச்சியும் உண்டென்பதற்கான சான்று. எழுதலும் விழுதலுமின்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வில்திறனே வெல்லற்கரியது. இவர் சினம் கொள்கிறார். எனில் எழும் அம்பை கணக்கிடுகிறார், தவறும் அம்பைக் கண்டு உளம் பதைக்கிறார். நிகழ்வனவற்றில் இல்லை அவருடைய உள்ளம். அது முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழில் நின்றிருப்பதே யோகம். முந்துவதும் பிந்துவதுபோலவே பிழைதான். பிழைகள் ஆற்றலை அழிக்கின்றன. பிழையின்மையே யோகம். வெல்லமுடியாதவன் யோகி மட்டுமே. பிற அனைவரும் வில்லில் இருந்து வானுக்கு எழும் அம்புகள் போல. அவர்கள் எத்தனை விசைகொண்டிருந்தாலும் விழுந்தாகவேண்டும். யோகி ஒளி. அவன் சென்றுகொண்டே இருப்பவன்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“நான் அஞ்சுவது இவரைத்தானா? நான் அவ்வுடலிலிருந்து இவ்வுடலை பெற்றுக்கொண்டிருக்கிறேன். அவ்வுள்ளத்தின் ஒரு துளியையே என் அகமென வளர்த்து வைத்திருக்கிறேன். எனில் இவரும் என்னுள் வாழ்கிறார். ஒரு தருணத்தில் எழுவார், எளிய வஞ்சங்களால் ஆட்டுவிக்கப்படுவார். இவரில் இருக்கும் ஒரு துளி என்னில் அழியாமல் எஞ்சும். அறிவதனைத்தும் அறிந்த பின்னரும் இவ்வுலகை கவ்விக்கொண்டிருக்கும் ஒன்று. அரிய ஆசிரியர்களின் அடிசூடி அமர்ந்து மெய்யறிந்த பின்னரும் இவ்வுலக வஞ்சங்களிலேயே என்றென்றுமென சிக்கிக்கொண்டது. ஒருபோதும் இங்குள பின்னல்களிலிருந்து விடுபட்டு விண்ணிலெழ இயலாதவராக அவரை ஆக்குவது. அவ்வண்ணம் ஒருவன் என்னுள் வாழ்கிறான் எனில் நான் கொண்ட கல்வியும் ஆற்றிய தவமும் எதன் பொருட்டு?”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“இறந்துவிழுந்தவர்கள் இறந்து நெடுநேரம் கடந்தும் தாங்கள் இறந்துவிட்டதை அறியவில்லை. அது தீக்கனவு என்றும் விழித்துக்கொள்ளலாம் என்றும் நம்பினர்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“நீ உன் அன்னையின் மைந்தன்” என்றான் துச்சாதனன். “நீ என்னைப்போல் இல்லை என்பதை எண்ண உளநிறைவே அடைகிறேன்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“ஓசைகள் செவிகளை மூடியிருந்த போர்க்களத்தில் புரவிக்குளம்படிகள் செவிகளை வந்தடைவதில்லை. ஆகவே போர்க்களத்தில் புரவியில் விரைவதென்பது முகில்களின் மேல் செல்வதுபோல தோன்றும். எப்போதும் அந்த விந்தையை அவன் அகம் விழைந்தது. அவனுடைய அந்த எளிய இன்பங்களை துரியோதனன் அவ்வப்போது ஏளனம் செய்வான். அது இளையவன்மேல் துரியோதனன் காட்டும் அன்பின் ஒரே வெளிப்பாடு என புரிந்துகொண்டிருந்த கௌரவர்கள் வெடித்துச் சிரிப்பார்கள். கோப்பைகளை ஒன்றினுள் ஒன்று என அடுக்கி வைப்பது, நீர் எங்கேனும் வழிந்திருந்தால் விரலால் கோடிழுத்து ஓடைகளாக ஆக்குவது, உலோகப் பொருட்களில் முகம் பார்த்தால் பற்களை இளித்து விழிகளை உருட்டி வேடிக்கை பார்ப்பது என துச்சாதனனால் செய்யாமலிருக்க இயலாத பல இருந்தன.
“அவன் கையில் அந்த வெள்ளிக்கோப்பையைக் கொடு… இன்று முழுக்க விளையாடிக்கொண்டிருப்பான். நாம் சென்று வேலையை பார்ப்போம்” என்று துரியோதனன் சொல்ல பிறர் உரக்க சிரிப்பார்கள். துர்மதன் கோப்பையை நீட்ட துச்சாதனன் நாணத்துடன் அதை வாங்குவான். அதை அருகே வைத்தபின் வேறெங்கோ விழிதிருப்பி அமர்ந்திருப்பான். அவர்கள் வெளியே சென்றதும் கோப்பையை எடுத்து தன் முகத்தை அதில் பார்த்து இளித்துக்காட்டுவான். கதவு திறந்து துர்மதன் எட்டிப்பார்த்து “ஆ, மூத்தவர் அசுரராக ஆகிவிட்டார்!” என்பான். அவனுடன் தலைநீட்டும் துச்சலனும் துச்சகனும் விந்தனும் அனுவிந்தனும் நகைப்பார்கள். ஆனால் பின்னர் துச்சகன் அவனிடம் “என்னாலும் கோப்பைகளில் முகம் பார்த்து பல்லிளிக்காமல் இருக்க இயல்வதில்லை, மூத்தவரே. இது நம்முள் வாழும் தெய்வங்களின் இயல்பா?” என்று கேட்டான். “கொன்றுவிடுவேன்… எழுந்து போடா“ என்று துச்சாதனன் கூச்சலிட்டான்.”

“மைந்தரின்பொருட்டே தந்தையர் கோழைகளும், தன்னலமிகளும், சிறுமைகொண்டவர்களும் ஆகிறார்கள். அதை தெய்வங்கள் விரும்புகின்றன.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“பூரிசிரவஸின் உடல் கால்களை மடித்து இடக்கையை மடியில் வைத்து முதுகை நிமிர்த்தி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தது. மடியிலிருந்த அவன் தலை விழிமூடி ஊழ்கம் கொண்டிருந்தது. அருகே வெட்டுண்ட கையில் கட்டைவிரலை சுட்டுவிரல் வந்து தொட்டிருக்க சுழிமுத்திரை காட்டியது. சிலகணங்கள் நோக்கியபோது அவன் உடலில் தலை இல்லாமலிருப்பது எவ்வகையிலும் மாறுபாடாகத் தெரியவில்லை.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“நாம் பிறப்பால் அறிவிலிகள். பற்றால் மேலும் அறிவிலிகளாக ஆகிறோம்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“கொண்டவற்றை கொடுப்பதில்லை தெய்வங்கள்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“பீமன் தன் வெற்றிகளால் ஊக்கம் கொண்டான். களிவெறியுடன் “சூதன்மகனே, இன்று உன் குருதிகொண்டே திரும்புவேன்!” என வஞ்சினம் உரைத்தான். “என் குலமகளை சிறுமைசெய்ததன் பொருட்டு இன்று நீ மண்படிந்து விழுவாய்!” என்று கூவினான். கர்ணன் இகழ்ச்சியுடன் நகைத்து “நன்று! உன் குலமகளின் பெருமைக்காகப் பேசிய விகர்ணனைக் கொன்ற அதே கதையை எடு… அறியட்டும் தெய்வங்கள்” என்றான்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“அத்தனை உறுதியாக ஒன்று கட்டப்படுகையிலேயே அதை இடிக்கும் பொறுப்பை தெய்வங்கள் ஏற்றுக்கொள்கின்றன.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“வெறுமை வளைந்து அமைந்த வான்வெளிக்குக் கீழ் மண் ஒவ்வொரு பருத்துளியும் வஞ்சங்களால் விழிநீரால் ஆனதாக விரிந்திருக்கிறது. வஞ்சின ஈடேற்றத்திற்காக, வஞ்சினத்திலிருந்து தப்புவதற்காக நோன்பிருக்கிறார்கள். நோன்புகளை கேட்கும் தெய்வங்கள் அவ்விண்ணில் வாழ்கின்றன. இப்புவியில் வாழும் கோடானுகோடி மானுடர், பல்லாயிரம்கோடி உயிர்கள், அளவிறந்தகோடி சிற்றுயிர்கள் அனைவரும் கொள்ளும் வேண்டுதல்களை செவிகொள்வதற்கென்று எத்தனை கோடி தெய்வங்கள் விண்ணிலும் மண்ணின் ஆழத்திலும் இருக்கும்!”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“எச்செயலும் அதற்கான மறுசெயலை உருவாக்குகிறது. செய்கை மேல் நமக்கு சற்றேனும் கட்டுப்பாடுள்ளது. அதை நாம் செய்யாமல் இருந்துவிடமுடியும். மறுசெய்கை மேல் நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதை தெய்வங்களிடம் நாம் கொடுத்துவிட்டோம்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“மண்ணில் மறைந்திருப்பதனால் வேர் இல்லாமலாவதில்லை. ஒவ்வொரு இலையின் நீரும் வேரின் கொடையே.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“அருந்தவம் இப்புவியின் எளிய துயர்களை வெல்லவும் இன்பங்களை அடையவும்தான் என்றால் எத்தனை சிறுமைகொண்டது அது! ஆயினும் கேட்ட கதைகளில் அனைவருமே இப்புவியில் பொருள்கொள்ளும் ஒன்றுக்காகவே புவிதுறந்து தவம் இயற்றியிருக்கிறார்கள்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“மானுட உள்ளங்களின் ஆடல் தெய்வங்களுக்கு நிகரான அறியமுடியாமையை சூடியது.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“ஜயத்ரதன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் விழிகள் வெறித்திருந்தன. “காட்டில் இத்தனை நாள் நான் என்ன செய்தேன் என்று அறிவாயா?” தன் ஏளனத்தை திரட்டிக்கொண்டு “தவம் செய்தீர்கள் என்றார்கள். தவம் செய்து எதை ஈட்டப்போகிறீர்கள் என்று நான் எண்ணிக்கொண்டேன்” என்றான் ஜயத்ரதன். “ஈட்டவில்லை, இழந்துகொண்டிருந்தேன். விழைவை, ஆணவத்தை. எஞ்சுவது உன்மேல் நான் கொண்ட இந்தப் பற்று ஒன்றே. இதை என்னால் இழக்க இயலாதென்று கண்டேன். அவ்வறிதலும் ஒரு பேறுதான். ஒருவன் தன் எல்லைகளை உணர்வதுகூட ஒருவகை ஞானம்தான்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“அறிவின்மை எனத் தோன்றும். ஆனால் மானுடர் அவ்வாறுதான் செயல்படுகிறார்கள். எவரிடமோ அடைந்த புண்ணை வேறெவரையோ புண்படுத்தி தீர்த்துகொள்கிறார்கள்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“உங்களுடன் ஊழ் விளையாடுகிறது. அனைவருடன் ஊழே விளையாடிக்கொண்டிருக்கிறது. அதற்கு உங்கள் நல்லியல்பை எதிர்வைத்து ஆடுக! நல்ல ஆட்டத்தை ஆடுபவர்களை ஊழ் வாழ்த்திச் செல்லும்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“துரோணர் “மானுடனுக்கு ஒரு வாழ்க்கை மட்டும்தானே அளிக்கப்பட்டுள்ளது?” என்றார். கிருபி நகைத்துக்கொண்டு அவர் கைகளைப்பற்றி “ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது” என்றாள்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“கர்ணன் அவள் கால்தொட்டு சென்னி சூடி “இங்கே என் வாழ்வு நிறைவடைகிறது, அன்னையே” என்றான். அவள் “ஏன் இப்படி நெடுமரம்போல் ஆனாய் என்று வியக்கிறேன்” என்று அவன் தோளை அறைந்தாள். அவன் வெடித்து நகைத்து “நானும் பல தருணங்களில் அதை எண்ணிக்கொள்வதுண்டு. பெரும்பாலான மானுடரை அவர்களின் தலைமுடியைக் கொண்டே அடையாளம் காண்கிறேன்” என்றான். குந்தி வாய்பொத்தி சிரித்து “கீழிருந்து நோக்கினால் உன் முகவாய் மிகத் தொலைவில் விந்தையாகத் தெரிகிறது” என்றாள். அவன் வெடித்துச் சிரிக்க அவளும் உடன் இணைந்து சிரித்தாள். பலமுறை முயன்றும் இருவராலும் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை. பின்னர் குந்தி கண்ணீர் வழிய ஆடைநுனியால் வாய்மூடி சிரிப்பை அடக்கி “நான் செல்லவேண்டும்” என்றாள். கர்ணன் சிரிப்பின் மூச்சிளைப்புடன் “இவ்வண்ணம் நகைத்து நெடுநாட்களாகின்றது” என்றான். “ஆம், நானும் சிரிப்பதேயில்லை” என்று அவள் சொன்னாள்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“உண்மை மிகச் சிக்கலானதாகவே இருந்தாகவேண்டும் என்பதில்லை. அது மிகமிக எளிதானதாகவே இருக்கலாம். உச்சநிலை மெய்மைகள் மிகமிக உலகியல்சார்ந்ததாக, மிக அன்றாடத்தன்மை கொண்டதாக இருக்கலாம். அது பெண்களுக்கே புரியும். ஆண்கள் அடுமனைக்குச் செல்லவே ஏழுமலை கொண்ட காட்டுப்பாதையை தெரிவுசெய்வார்கள் என நாங்கள் பெண்கள் சொல்லிக்கொள்வதுண்டு.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“என் தோழனின் பிழைகளை கணக்கெடுப்பது என் இயல்பல்ல. பிற அனைவரையும்விட அவனை நான் அறிவேன். மண்விழைவு மிகுந்தவன். அதைவிட தன் தம்பியர் மேல் பற்று மிகுந்தவன். அரசி, என்றேனும் தம்பியர் நூற்றுவரில் எவருக்கேனும் நான் தீங்கிழைத்திருந்தால் அஸ்தினபுரியின் அரசன் என்ன செய்திருப்பான்? ஒருகணமும் தயங்காமல் வாளேந்தி என்னை கொல்ல வந்திருப்பான். என் குருதி கொண்டே அடங்கியிருப்பான். அதை நான் அறியேனா என்ன? இப்புவியில் அவன் உள்ளத்தில் எனக்கு எத்தனை படிகளில் இடம் என்று எந்நிலையிலும் கணக்கெடுக்க மாட்டேன். அன்பை அளவிடுபவர் ஒருபோதும் அன்பை அறிவதில்லை.”
“அவனுக்கு நான் யார் என்பதல்ல, எனக்கு அவன் யார் என்பதே நான் எண்ணுவது. எனக்கு அவனே முதன்மையானவன். என் உடன்பிறந்தாரைவிட, அன்னையைவிட, என் துணைவியரையும்விட, மைந்தரையும்விட, என் குடித்தெய்வங்களையும்விட அவனே எனக்கு வேண்டியவன். அவனை கைவிடும்படி என் தந்தைவடிவான கதிரவனே வந்து கோரினாலும் ஒப்பமாட்டேன். என் கவசத்தையும் குண்டலங்களையும் குருதிவார பிடுங்கி எறியவே துணிவேன். அவன் பொருட்டு களத்தில் உயிர் விடுவதே இப்பிறவியில் நான் ஆற்றக்கூடிய முதற்கடன்” என்றான் கர்ணன்.”

“பெருவிழைவு கொல்லும் நஞ்சு. அடைந்து கடப்பதொன்றே அதை வெல்லும் வழி.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“பெண் மீது கொள்ளும் வஞ்சமும் காமத்தின் பிறிதொரு வடிவே”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“கொடை என்பது ஓர் உளநிலை. கொடுக்கத் தொடங்கியவர் அனைத்தையுமே கொடுத்துவிடுவார். எஞ்சுவது அனைத்தும் சுமையென ஆகும். எஞ்சாது ஒழிவதே விடுதலை எனத் தோன்றும்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“கதைகளிலிருந்து மெய் உருவாகிறது. மெய்யிலிருந்து கதைகள் மீண்டும் பிறக்கின்றன.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
“நாம் நம்மை ஆக்கிய தெய்வங்களால் கைவிடப்பட்டுள்ளோம்.”
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
― வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்