நான் சொல்ல வந்ததே வேறு Quotes

Rate this book
Clear rating
நான் சொல்ல வந்ததே வேறு (Tamil Edition) நான் சொல்ல வந்ததே வேறு by பேயோன் (Payon)
13 ratings, 3.38 average rating, 1 review
நான் சொல்ல வந்ததே வேறு Quotes Showing 1-30 of 50
“என் கல்லறை வாசகம்: "உங்களையெல்லாம் திருத்தத்தான் இப்படி ஒரு நாடகம் போட்டேன்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“எனது கல்லறை வாசகம்: நான் சொல்ல வந்ததே வேறு.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“வீட்டை விட்டுக் கிளம்புகையில் "பத்திரமாகப் போங்கள்" என்று மனைவி சொல்லும்போதுதான் விபத்துக்குள்ளாகும் உந்துதல் ஏற்படுகிறது. மனித உளவியல்!”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“காலையில் தருமம். ஒருவர் காசு கேட்க, தந்தேன். எதிர்க் கடையில் எலுமிச்சை, வெற்றிலை, குங்குமம் வாங்கி என் வாசலிலேயே புதைத்துவிட்டு போய்விட்டார்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“மூட்டுவலிக்கு "மூட்டுவல்லி" என்று பெண் பெயரே வைத்துவிடலாம். அவ்வளவு இம்சை.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ? வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ? இவள் ஆவாரம்பூதானோ, நடை தேர்தானோ? சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?" மனசுக்குள் இவ்வளவு சந்தேகங்களை வைத்துக்கொண்டு எதற்கொருவன் காதலிக்க வேண்டும்?”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“பெண்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்' என்கிற கருத்தாக்கம் ஆண்கள் மத்தியில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஒரு சமயத்தில், குறிப்பாக எந்தப் பெண்களை, எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழவே, 'கிழவியைத் தூக்கி மணையில் வை' என்ற சொலவடை பிறந்தது.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“ராபர்ட் பிரெஸ்ஸனின் Pickpocket உலக சினிமாவின் உச்சங்களுள் ஒன்று எனவே நான் எப்போதும் கருதிவந்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பல முறை பார்ப்பதினால் திரைப்படம் என்ற கலையை ஒருவன் நன்கு புரிந்துகொள்ள முடியும். ஆனால் அவன் நானல்ல.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“குழந்தைகளை கராத்தே, செஸ், பர்சனாலிட்டி க்ளாஸ், ஓவியம், நீச்சல், இசை என்று எல்லா வகுப்புகளிலும் சேருங்கள். கூடிய விரைவில் அவர்கள் சட்டையைக் கிழித்துக்கொண்டு தெருவில் அலறியபடி ஓடும்போது வேடிக்கை பார்க்கும் கூட்டத்தோடு நின்றுகொண்டு "என் புள்ளதான். நல்லா ஓடுவான்" என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“கஜுராஹோ பார்த்திருக்கிறீர்களா? அங்கே மர்மஸ்தானம் எல்லாம் தேவஸ்தானம்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“புத்தகங்கள் படிக்காதிருப்பதும் ஒரு பழக்கம்தான். நிறுத்த முயன்றுபாருங்கள், மிகக் கடினமாக இருக்கும்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“எந்த ஊர் என்றவனே" பாட்டைக் கேட்டால் தமிழ்நாட்டை ஒரு சுற்று சுற்றி வந்த மாதிரி இருக்கிறது.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“உலகிலேயே மிகச் சிறியது ஞாயிற்றுக்கிழமை.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். அவள் லேசுப்பட்டவளில்லை.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“அறிவின் இடத்தை அன்பு எடுத்துக்கொள்ளட்டும்" என்று ஒரு புதுமணத் தம்பதியை வாழ்த்தினேன்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“ஆக்கபூர்வ விமர்சனம் அன்பை முறிக்கும்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“மற்ற ஆண்களோடு பேசும்போது அடிக்கடி புடவைத் தலைப்பை சரிசெய்யும் பெரிய பெண்கள், என்னோடு பேசும்போது தாலியை வெளியே எடுத்து விட்டுக்கொள்வதோடு சரி.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“சாம்ஸ்கிக்கு பீன்ஸ் பிடிக்குமாம். எனக்கு பீன்ஸ் பிடிக்காது. சாம்ஸ்கியுடன் முரண்படுகிறேன்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“ஆட்டோவுக்குப் பின்னால் எழுதியிருக்கும் "Jesus loves you"வைப் பார்த்து வயதுப் பெண் போல் முகம் சிவக்கிறேன்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“அதிர்ஷ்டம் உன் காயங்களை ஆற்றும்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“நம் நிறைகள் என்று நாம் நினைக்கும் குணங்களை நம் மனைவிகள் குறைகளாகக் கருதுகிறார்கள். "அவரு எங்க வீட்டு மனுசங்களோட பழகவே மாட்டாரு.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“உண்மை சில சமயங்களில் தன்னை மறைத்துக்கொள்ளும், ஆனால் ஒருபோதும் பொய் சொல்லாது.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“என் வீட்டில் என் மனைவிதான் டெசிசன் மேக்கர். நான் வெறும் டெசிசன்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“சும்மா வாய்க்கு வந்த மாரி பேசாதெங்கோ. 'ங்கோத்தா இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது?'-ன்றத ஸ்வாமிகள் ஆறு லாங்வேஜ்ல சொல்வார்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் மடத்துக்குப் போய் மந்திரம் சொல்லுமாம்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“சகமனிதர்களை நிபந்தனையின்றி நேசிக்க வேண்டும். ஆனால் விதிமுறைகள் இருக்கலாம்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“தஸ்தயெவ்ஸ்கியின் நோட்ஸ் ஃப்ரம் தி அண்டர்கிரவுண்ட் குறிப்பிடத்தக்க நாவல். ஏனெனில் அது முழுக்க முழுக்க 'மைண்ட்வாய்ஸ்' உத்தியில் எழுதப்பட்டது.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“குழந்தைகள் வளர்ந்த பின்பு பெற்றோர் அவர்களை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அதாவது குழந்தைகள் வளர்ந்ததும் யோக்கியர்கள் ஆகிவிடுகிறார்களாம்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“சிலரிடம் நல்லவர்கள் என்பதைத் தவிர உருப்படியாக வேறு எந்த அம்சமும் இல்லை. தாவரங்களைப் போல் வாழ்கிறார்கள்.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு
“ஒரு தெருச் சண்டையைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றேன். "கண்ட எடத்துல கமா போடுறவன்தானடா நீயி!" என்ற வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தன.”
Payon, நான் சொல்ல வந்ததே வேறு

« previous 1