குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye] Quotes

Rate this book
Clear rating
குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye] குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye] by Jeyamohan
25 ratings, 4.08 average rating, 1 review
குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye] Quotes Showing 1-12 of 12
“எண்பதுகளில் உண்மையிலேயே பட்டினி இருந்தது, நானே கண்டிருக்கிறேன். அது தமிழகத்திலும் இருந்தது. இந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் வந்த மாற்றம் என்னவென்றால் உடலுழைப்புக்கான சந்தை மிகமிக விரிவடைந்திருப்பதுதான். எங்கும் உடலுழைப்புக்கான ஆட்களுக்கான தேவை இருப்பதைக் காணலாம். கூலி பலமடங்கு ஏறியிருக்கிறது. மறுபக்கம் தானியத்தின் விலை மிகவும் குறைவாக ஆகியிருக்கிறது. வட இந்தியாவில் கோதுமை மிக மலிவான ஒரு பொருள் இன்று. ஆகவே பட்டினி இல்லை. இன்று பீகாரில்கூட எந்த ஒரு கிராமவாசியிடம் பேசினாலும் நம்மை அவர் சாப்பிட அழைப்பார். இன்றைய வறுமை என்பது வேறு. அடிப்படைத் தங்குமிடம், மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கான தேவைதான் இன்றுள்ளது. அது இல்லாததன் வறுமைதான் இன்று உள்ளது.”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“நமக்கெல்லாம் மேல்நோகாமல் புரட்சி பேசப் பிரியமிருக்கிறது. அதற்காக எங்காவது எளிய மக்கள் போராடிச் செத்தால் சந்தோஷம்தான்.”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“ஆனால் மண்ணில் எல்லா நிழல்களிலும் பாதாளம் உள்ளது. நெடுங்காலம் முன்பு பஞ்சத்தில் வாடிய ஒரு நாடார் சாதிப்பெண் தன் பிள்ளைகளைத் தூக்கி கிணற்றில் போட்டாள் என்று ஒரு கதை உண்டு. அந்தக் கிணறு ஒரு பாதாள வாய். குழந்தைகள் நேராக பாதாளத்திற்குச் சென்று விழுந்தன. கடைசியாக அவள் குதிக்கவிருக்கையில், பிள்ளைகளுடன் பாதாள நாகராசன் வெளியே வந்தான். என்ன என்று கேட்டான். பஞ்சத்தின் துயரத்தை அந்தப்பெண் எடுத்துச் சொன்னாள். அவன் இரண்டு பாதாள மூர்த்திகளை மண்ணுக்கு மேலே அனுப்பினான். அவர்கள் மண்ணில் பெருகினார்கள். அவர்களால் நாடார் சாதி பஞ்சத்தில் இருந்து கரையேறியது. எருமையும் பனையும். திரும்பிப் பார்த்தபோது இருட்டை ஒரு அருளாக, அணைப்பாக உணர முடிந்தது.”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“நெடுங்காலம் முன்பு பஞ்சத்தில் வாடிய ஒரு நாடார் சாதிப்பெண் தன் பிள்ளைகளைத் தூக்கி கிணற்றில் போட்டாள் என்று ஒரு கதை உண்டு. அந்தக் கிணறு ஒரு பாதாள வாய். குழந்தைகள் நேராக பாதாளத்திற்குச் சென்று விழுந்தன. கடைசியாக அவள் குதிக்கவிருக்கையில், பிள்ளைகளுடன் பாதாள நாகராசன் வெளியே வந்தான். என்ன என்று கேட்டான். பஞ்சத்தின் துயரத்தை அந்தப்பெண் எடுத்துச் சொன்னாள். அவன் இரண்டு பாதாள மூர்த்திகளை மண்ணுக்கு மேலே அனுப்பினான். அவர்கள் மண்ணில் பெருகினார்கள். அவர்களால் நாடார் சாதி பஞ்சத்தில் இருந்து கரையேறியது. எருமையும் பனையும்.”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“கலை மனிதனின் முழுமை அல்ல. முழுமைக்கான விழைவு மட்டுமே.”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“எல்லா தெய்வங்களும் நம்மை நோக்குகின்றன. எல்லா சிலைகளும் பார்வை கொண்டவை. புத்தர் நம்மை பார்ப்பதே இல்லை. அவர் கண்கள் அவரை மட்டுமே நோக்குகின்றன. அவருக்குள் உறையும் அகண்ட காலத்தை, பெருவெளியை. அதனால்தான் அவர் முகத்தில் அந்த பேரமைதியா? அந்த மெல்லிய துக்கமா? பேரமைதி என்றால் மெல்லிய துக்கம் அதில் ஊடாட வேண்டுமா என்ன?”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியல் பொருளியல் ஆதிக்கத்துடன் போராடியே தலித்துகளும் பழங்குடிகளும் வளர முடிகிறது. இது வெறும் மோதல் அல்ல. அப்படிச் சித்தரிப்பதே பிழை. அது மோதலும் ஒத்துப்போதலும், ஒருவரை ஒருவர் வென்றெடுத்தலும், பயன்படுத்திக்கொள்ளலும் கலந்த ஒரு பெரிய ஆட்டம்.”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“கொலை கொலையா முந்திரிக்கா’ என்று கிராமக்குழந்தைகள் பாடும் பாடல், அவர்கள் கூட்டம் கூட்டமாக செய்த கொலைகளின் நினைவு என்று எழுதிய அமெரிக்க மானுடவியல் ஆய்வாளரைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் ஒருமுறை எழுதியிருந்தார். என்னுடைய குமரி மாவட்ட கிராமங்கள் பற்றி ஆய்வாளர்கள் எழுதிய எல்லாமே அப்பட்டமான பொய்களும் குளறுபடியான புரிதல்களும்தான்”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“ஒரு நகைச்சுவை உண்டு. ‘சார் ஓடுங்கள். உங்கள் வீடு தீப்பிடித்து எரிகிறது’ என்று சொன்னால், ‘தொந்தரவு செய்யாதே. நாளைக்கு இதை இண்டுவிலே படித்துக்கொள்கிறேன்”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“இந்திய யதார்த்தம் என்பது நேரடியாக இந்தியாவில் சுற்றியலைவதன் மூலம் மட்டுமே கிடைப்பது. இந்தியாவை அலைந்து கண்டுபிடித்த எழுத்தாளர்கள்தான் இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகள். வைக்கம் முகமது பஷீர், சிவராம காரந்த், பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய...”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“இனிய மாலை. முற்றிலும் அன்னிய ஊரில் சூரியன் மிகமிக அறிமுகமானவனாக இருக்கிறான்.”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]
“இந்து மதத்தின் அடித்தளம் பழங்குடிப்பண்பாடு என்பதே. இன்று இந்துக்களாக இருக்கும் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் தெய்வங்களுடன் வந்து சேர்ந்துகொண்ட பழங்குடிகளே. மிகச்சமீபகாலமாக கிறித்தவ மதமாற்ற உத்தியின் ஒரு பகுதியாக, அவர்களிடம் நிதிபெறும் ஆய்வாளர்களால் பழங்குடிகள் இந்துக்கள் அல்ல என்றும் அவர்களின் பண்பாடு இந்துப்பண்பாட்டுக்கு நேர் எதிரானது, இந்துக்களால் ஒடுக்கப்பட்டது என்றும் சொல்லும் ஒரு தரப்பு உச்சகட்டப் பிரசாரம் வழியாகப் பரப்பப்படுகிறது. கல்வித்துறைகளில் பணபலத்தால் நிறுவப்பட்டும் வருகிறது.”
ஜெயமோகன் / Jeyamohan, குகைகளின் வழியே [Kugaigalin Vazhiye]