கொமோரா [Gomorrah] Quotes
கொமோரா [Gomorrah]
by
லக்ஷ்மி சரவணகுமார்102 ratings, 3.99 average rating, 21 reviews
கொமோரா [Gomorrah] Quotes
Showing 1-3 of 3
“நாம் யாராய் இருக்கிறோமென்பது நமது விருப்பத்திலும் இயல்பிலும் இருக்கிறது. தேவைகள் இதைத் தீர்மானிக்கத் துவங்குகிற நாளில் நாம் தொலைப்பது தன்மானத்தையல்ல, ஒரே ஒரு துளி சுயநேர்மையை. மனிதன் குறைந்தபட்ச சந்தோசத்தோடேனும் வாழவேண்டுமாயின் பாதுகாக்க வேண்டியது ஒன்று மட்டுந்தான். இருப்பதிலேயே எளிதாகக் கிடைக்கக் கூடியதும் அது ஒன்றுதான், சுயநேர்மை. நான் யாரைவிடவும் மேலானவனுமில்லை, கீழானவனுமில்லை. ஆனால் யாரைவிடவும் சுயநேர்மை கொண்டவன். ஏதோவொரு கனத்தில் மற்றவர்களை ஏமாற்றியிருக்கலாம். ஒருபோதும் என்னை ஏமாற்றிக் கொண்டிருந்ததில்லை”
― கொமோரா [Gomorrah]
― கொமோரா [Gomorrah]
“சாலைகள் மனிதர்களைக் கைவிடுவதில்லை. ஒதுங்குவதற்கான நிழலை மட்டுமல்ல, எல்லாத் திசையிலும் ஒரு மனிதனுக்கான கதவுகள் அடைக்கப்பட்ட பின்னாலும்கூட நம்பிக்கையோடு தேர்ந்தேடுக்கும் ஏதாவதொரு சாலையின் பயணம் வாழ்வை மாற்றப் போதுமானதாய் மாறிவிடுகிறது.”
― கொமோரா [Gomorrah]
― கொமோரா [Gomorrah]
“மன்னிக்கத் தகுதியற்ற மனிதர்களை சகித்துக்கொண்டு வாழ்வது மாதிரியான மன அவஸ்த்தியில் புழங்கிச் சாகத்தேவையில்லை என்னும் எண்ணமே அவனை முழுமையானவனாய் உணரச் செய்தது.”
― கொமோரா [Gomorrah]
― கொமோரா [Gomorrah]
