வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல் Quotes

Rate this book
Clear rating
வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல் வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல் by Jeyamohan
33 ratings, 4.61 average rating, 2 reviews
வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல் Quotes Showing 1-3 of 3
“தன் குஞ்சுகளைக் காக்க சிறுதாய்க்குருவி கருநாகத்தை கொத்தி துரத்துவதை தாங்கள் கண்டிருக்கலாம். இது அன்னையரில் தெய்வங்கள் எழுந்தளிக்கும் ஆற்றல்”
Jeyamohan, வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல்
“ஆனால் அம்பையன்னை கொண்ட அச்சினத்தின் வேர் எது என இளமையில் அவளுக்கு புரியவில்லை. பிறிதொரு அரசரை மணம்கொண்டு மைந்தரீன்று சிறந்திருந்தால் என்ன? ஷத்ரியப் பெண்ணுக்கு கருவறையில் வீரமைந்தர் எழுவதே சிறப்பு. கணவர்கள் அவளுக்கு ஒரு பொருட்டேயல்ல என்றுதான் அவளுக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. அதை அவள் முதுசெவிலியிடம் கேட்டபோது “அரசியருக்கான அறம் அது, காதல்மகளிருக்கானது அல்ல” என்று செவிலி சொன்னாள். பின்னர் விறலி ஒருத்தியிடமும் அதையே கேட்டாள். “தன் காதலை தானே அறிதல் பெண்ணுக்கு தெய்வங்கள் அளிக்கும் நற்கொடை, அரசி. அறிந்தபெண் அதற்கு அடிமை” என்றாள். அம்மறுமொழியும் அவளுக்கு புரியவில்லை.”
Jeyamohan, வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல்
“சற்றே சரிந்த துலாத்தட்டு அளிக்கும் பொறுமையின்மையுடன் அன்றி அவரை பார்க்க முடிவதில்லை. படையாழியும் வேய்குழலும் நிகர்கொள்ளலாகுமா? குழல்சூடிய அப்பீலி ஒரு துலாமுள்.

திகைப்புடன் அவர் குழலில் சூடிய பீலியை நோக்கினாள். அதுவும் அவளுக்கு நோக்களிக்கவில்லை. படபடக்கும் உள்ளத்துடன் அவள் அவர் புன்னகையை, ஒற்றைக்கல்லாரம் துவண்ட மார்பை நோக்கினாள். பின்னர் காலடிகளுக்கு நோக்கு தழைந்தாள். அறிந்தவை, அணுக்கமானவை. அவள் உளக்கொந்தளிப்பு அடங்கியது. அவள் அவர் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தாள்.”
Jeyamohan, வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல்