இளையராஜா Quotes

Rate this book
Clear rating
இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும் (Illyaraja: Philosophy and Aesthetics of Music) இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும் by Ramesh Predan
18 ratings, 3.56 average rating, 4 reviews
இளையராஜா Quotes Showing 1-7 of 7
“புதிய வெளிப்பாடுகள் உருவாவதற்குக் காரணமே உள்ளவற்றிற்குள் போதாமையை உணர்வதும் புதிது புதிதாக உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் படைப்புச் சுதந்திரமும்தான். விதிமுறைகளுக்குள், சூத்திரங்களுக்குள் மட்டும் அடங்கி இருந்தால் பிறகு புதியவை படைப்பது எப்படி சாத்தியம்?”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“மனதைத் தொந்தரவு செய்து, அதன் விழிப்பற்ற நிலையை அதிர்வு உண்டாக்கி மாற்றுவது என்பது நடக்கத்தான் வேண்டும்”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“திருப்தியின்மை, புதிய படைப்புக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அதே சமயம் முழுமையான அதிருப்திதான் படைப்பை உருவாக்கும் என்றும் கூறிவிட முடியாது. ஏனெனில், இசை என்பது தன்னளவில் இன்பம் தரக்கூடிய ஒரு கலை.”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“பீத்தோவன் சொன்னான் Rules are my humble servents என்று. ஏனென்றால் He was tharough with the rudiments.”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“ஒரு படைப்பு என்பது தானாக நிகழ வேண்டும். அது நிகழும்போது அடுத்தவரின் மனதைத் தொட வேண்டும். அறிவைத் தொட்டால் அது வித்வமாக மட்டுமே இருக்கும். அந்த நிகழ்வு இயல்பாக இருக்க வேண்டும். வலிந்து செய்ததாக இருக்கக்கூடாது.”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“இந்தியாவில் தோன்றிய பாடல்களோ சங்கீதங்களோ எல்லாமே பக்தியின் அடிப்படையில் தோன்றியவைதான். மொகலாயர்களின் வருகைக்குப் பிறகே இசை என்பது கேளிக்கைக்கான ஒன்றாகவும் அரண்மனைக்கானதாகவும் கஸல் போன்ற வடிங்களில் உருவானது.”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்
“எப்பொழுது ஒரு இசை இன்பத்துய்ப்பின் ஒரு வடிவமாக மாறுகிறதோ அப்பொழுதே அது இறைமை நீக்கம் செய்யப்பட்டுப் புலன்தன்மை பெறுகிறது”
பிரேம் - ரமேஷ் Prem - Ramesh, இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்