அயோனிகன் [Ayonigan] Quotes
அயோனிகன் [Ayonigan]
by
Ramesh Predan3 ratings, 5.00 average rating, 0 reviews
அயோனிகன் [Ayonigan] Quotes
Showing 1-3 of 3
“குளம் பேசும்
மீன்கள் அதன் சொற்கள்
சொற்களற்றுப் பேசும் குளத்தில்
மூழ்கி அடிமண்ணில் புதையவேண்டும்
பிறகு பேசப் பழகவேண்டும்”
― அயோனிகன் [Ayonigan]
மீன்கள் அதன் சொற்கள்
சொற்களற்றுப் பேசும் குளத்தில்
மூழ்கி அடிமண்ணில் புதையவேண்டும்
பிறகு பேசப் பழகவேண்டும்”
― அயோனிகன் [Ayonigan]
“மனித உடம்புபோன்ற உன்னதமான பொருள்
உலகில் வேறில்லை- அதன் வாசனை
கடவுளுக்கே இல்லை
மனித உடம்பின் கலவிச் சுகம்
கடவுளுக்கே வாய்க்காதது- அதன் கவிச்சி
கவித்துவமான கொலை நெடி கொண்டது
மனித மரணம்- மூளை
சிந்திப்பதை நிறுத்திக்கொள்ளும்போது நேர்வது
புதைக்கப்பட்ட உடல் மூலக்கூறுகளாய்ச் சிதையும்போது
மொழிக்கிடங்கு சொற்களாய்ப் புழுத்து நெளிவது
அன்றும் அப்படித்தான் நேர்ந்தது
என்னுடன் நீ நடக்கும்போது
என் நிழலின் தலையை மிதித்துவிட்டாய் நான்
மரித்துப்போனேன்
அவ்வளவே”

“எதுவரை போகுமோ அதுவரை
கால்களின் போக்கில் தலை
ஒரு முட்டுச் சந்தில் என் நிழலை உன் நிழல்
மடக்கிக் கொன்ற அன்று அறிந்தேன்
நிழல்களுக்கும் மரணமுண்டு என்பதை
யாருமற்ற மரணம் பயமற்ற உறக்கம்
தொலைதூரப் பயணி பார்வையிலிருந்து தொலைந்துவிட்டான்
ஆட்களை விடுத்து நிழல்களைக் கொல்லும் மனநோய்க்கு
ஆட்பட்ட நீ வெற்று நிழல் என்பதை
சென்ற நூற்றாண்டின் இறுதியில் அறுதியிட்டேன்
இந்த நூற்றாண்டின் விளிம்பில் நின்றுகொண்டு
சூன்யத்தில் நீளும் உன் நிழலை நீயே கொன்றுகொண்டிருக்கிறாய்
கவிதையைப் போல ஒரு கொலை
வாசிப்பின் திளைப்பு அற்றுப்போதலின் இதம்
உன்னால் மட்டுமே இப்படியான நிகழ்த்துதலைச் செய்ய முடியும்”