சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam] Quotes

Rate this book
Clear rating
சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam] சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam] by Indra Soundar Rajan
46 ratings, 4.37 average rating, 1 review
சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam] Quotes Showing 1-7 of 7
“சைவமென்றால் சிவன், வைணவமென்றால் விஷ்ணு, சாக்தம் என்றால் பராசக்தி, கௌமாரம் என்றால் முருகன், காணாபத்யம் என்றால் கணபதி, சௌரம் என்றால் சூரியன்.”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]
“ஒன்றை அறிய ஒருவர் விரும்புகிறார் என்றால், அவர் மாணாக்கர். அறிவுறுத்த வேண்டியவர் குருநாதர். குருவைத் தேடி மாணாக்கன்தான் வர வேண்டும்; குருவல்ல!”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]
“வாக்கொடு மனமிறந்த மன்னவனெங்கு மாகி நீக்கற நிறைந்தானேனு நிகழ்தரா ததனான் முத்தி போக்கெளிதல்ல வென்றப் புனிதனே புந்தி செய்தேம் பாக்கிய வகையா வெண்ணில் பதிமிகு பாரில் வைத்தான் -எனும் அந்தப் பாடலின் பொருள், உருவ வழிபாட்டுக்கே இலக்கணம் சொல்கிறது. சிவபெருமான் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. விறகுக்குள்ளே தீயாக, பசுவின் பாலுக்குள் நெய்யாக, எள்ளுக்குள் எண்ணெயாக இருப்பது எல்லாமும் அவன்தான். ஆனால், இந்த உண்மையை ஞானத்தாலேயே உணர முடியும். மாயை மிகுந்த உலகில், அறிவதாகிய அறிவே முன் தோன்றி செயலாற்றும். அதனால், அறிவதற்கே இங்கே முதலிடம். உணர்வது என்பது இரண்டாம் பட்சமே!”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]
“அன்பெனும் பிடிக்குள் மட்டுமே நான் அகப்படுவேன்; மற்றபடி என்னை அறிவதும் புரிந்துகொள்வதும் பெரும்பாடு”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]
“மனத்துக்குப் பஞ்ச பூதச் சிறை கிடையாது. உடம்புக்கு அது உண்டு.”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]
“சித்தர்கள் ரசவாதம் செய்தது, கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது, நவபாஷாணத்தில் விக்கிரகம் செய்தது, ஆகாயத்தில் பறந்தது, சீன தேசத்துக்கு நொடியில் சென்றது போன்ற அதிசயங்களை எழுதியிருக்கிறார்”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]