ஜே ஜே சில குறிப்புகள் Quotes

Rate this book
Clear rating
ஜே ஜே சில குறிப்புகள் ஜே ஜே சில குறிப்புகள் by Sundara Ramaswamy
640 ratings, 4.10 average rating, 66 reviews
ஜே ஜே சில குறிப்புகள் Quotes Showing 1-25 of 25
“இன்றைய இத்தாலிய எழுத்தாளனைத் தெரிந்தவனுக்கு இன்றைய கன்னட எழுத்தாளனைத் தெரியவில்லை. 'அமெரிக்க இலக்கியத்தின் புதிய போக்குகள்' பற்றி ஆங்கிலத்தில் ஆராய்ச்சி கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்ற இந்தி எழுத்தாளன் 'தமிழில் புதக்கவிதை உண்டா?' என்று கேட்கிறான். காஃப்கா என்கிறோம். சிமோன் த பூவா என்கிறோம். போர்ஹே என்கிறோம். குட்டிக்கிருஷ்ண மாராரைத் தெரியாது என்கிறோம். கோபாலகிருஷ்ண அடிகாவைத் தெரியாது என்கிறோம். எப்படி இருக்கிறது கதை?
ஒவ்வொரு மொழி இலக்கியத்தையும், அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தையும், அடுத்த மொழிகளில் அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் தனித்தனிப் பத்திரிகைகள் இந்திய மொழிகள் அனைத்திலும் துவக்கப்பட வேண்டும் என இரண்டு பத்தாண்டுகளாக நான் நண்பர்களிடம் சொல்லிவருகிறேன்.”
Sundara Ramasamy, ஜே.ஜே: சில குறிப்புகள் [J.J: Sila Kurippugal]
“இவர்கள் சொந்தம் பாராட்டிகொள்வது அனைத்தையும் நான் மறுக்கிறேன்”
Sundara Ramasamy, ஜே.ஜே: சில குறிப்புகள் [J.J: Sila Kurippugal]
“இவர்கள் கொண்டாடும் வெற்றி மீது நான் வெறுபடைகிறேன்”
Sundara Ramasamy, ஜே.ஜே: சில குறிப்புகள் [J.J: Sila Kurippugal]
“உண்மை பயங்கரமானது. அது மனிதனைத் தனிமைப்படுத்திவிடுகிறது. உறவுகளை ஈவிரக்கமின்றித் துண்டித்துவிடுகிறது.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“உள்ளொளி தோய்ந்த வாக்குகள் என் நரம்பில் புது ரத்தத்தைப் பாய்ச்சுகின்றன.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“மனித மனம் போலிகளின் திறமையான குரலை இனங்கண்டு ஒதுக்கத் தெரிந்ததாகவே இருக்கிறது.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“மௌனம் உன்னதமானது. அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது. கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக்கொள்கிறது. பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்துவிடுகின்றன. சப்பி உருக்குலைத்து விடுகின்றன. சரியான கேள்விகள் அபத்தமான விடைகளின் குவியல்களில் அகப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய்ப் போய்விட்டன.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொள்ள முற்படும் போது தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“விளையாட்டுகளில் தோல்வி என்பது தோல்வியுமல்ல. வெற்றி என்பது வெற்றியுமல்ல. விளையாட்டே ஒரு வெற்றி. தீவிரமாக, ஆத்மார்த்தமாகத் தன்னை மறந்து விளையாட வேண்டும்.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“தனக்கு ஏற்படக்கூடிய பெரும் பாதிப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஒருவன் எதிர் நிலையிலிருந்து பேச முற்படும்போது அவன் பேச்சை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“மன மாற்றம் நிகழாத தலைமை, நேற்றைய சரித்திரக் கொடுமைகளை அம்பலப்படுத்தி, அதன் மூலமே நற்பெயர் பெற்று அதே கொடுமையை இன்று செய்து, பதவியை உறிஞ்சிக்கொண்டு கிடக்கும்”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“விடைகளைத் தேடிப் போகலாம். தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கலாம். நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவை வெளிப்பட்டு நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தக்கூடும். ஆனால் முன்தீர்மானங்கள் பயணத்தைத் தொடர விடுவதில்லை. காத்திருக்க விடுவதில்லை. தேட விடுவதில்லை.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“போதையில் அல்ல; மயக்கங்களில் அல்ல; சுய விருப்பம் சார்ந்த கற்பனைகளில் அல்ல; தன்னை முற்றாக அழித்துக்கொண்டு சிந்திக்கத் திராணி கொண்ட மூளைகளே உண்மைகளை ஸ்பரிசித்துக்கொண்டுவந்திருக்கின்றன.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும். சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“நீ ஏற்கலாம். அல்லது மறுக்கலாம். அது உன் பார்வையைப் பொறுத்தது. சரியைச் சொல்வது அல்ல, என் மனம் சரியென்று நம்புவதைச் சொல்லிவிடுவது. இதுதான் எழுத்தின் அடிப்படை.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“பாதைகள் என்று எதுவுமில்லை. உன் காலடிச் சுவடே உன் பாதையை உருவாக்குகிறது”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“வர்ணத்தை வீசிவிட்ட ஓவியன் இங்கு வார்த்தைகளால் வரைகிறான்.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“நெருக்கடியில் எப்படி எழுதினான் ஜே. ஜே. என்று கேட்டால், நெருக்கடியால் எழுதினான் என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“இவை இப்படியிருக்க, என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக் கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக்கூடும். காகங்கள் சிரிக்கக்கூடும் சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புத்தான். அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.”
Sundara Ramaswamy, ஜே ஜே சில குறிப்புகள்
“சகல மேன்மைகளும் இதிலிருந்து தோன்றுபவைதாம். இல்லாத இந்த 'இல்லை'யை, இல்லை என்று மனிதன் எப்போது யோசிக்க ஆரம்பிக்கிறானோ அன்று மனிதன் மிருகங்களுக்குச் சமானமாகிவிடுகிறான்.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“நகரவாசியின் போலித்தனமான நாகரிகம், இயற்கையை அனுசரித்து இயங்கும் கிராமவாசியையும் கெடுத்துவிடுகிறது”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“விமர்சனத்திற்கு ஆளாகும்போது எதிராளியின் முகத் திரையைக் கிழிப்பது அல்ல, என் மனத் திரையைத் தூக்கிப் பார்த்துக்கொள்வதுதான் என் முதல் வேலை என்று நினைக்கிறேன்.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“டிமிட்ரி ருஷ்ய பாஷையில் பேசுவான். நான் முழிக்க வேண்டும். எனக்கு மூன்று பாஷைகள் தெரியும். தனக்கு அவை தெரியவில்லையே என்று டிமிட்ரிக்குத் தோன்றவே செய்யாது. நான்தான் வெட்கப்பட வேண்டும் அவன் பாஷை தெரியாததற்கு. இதுதான் இந்திய எழுத்தாளனின் விசித்திரத் தலைவிதி.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“சத்தியத்தைத் தேடிக்கொண்டு போகிறவனுக்குத் துக்கத்தின் பரிசுதான் எப்போதும் கிடைத்திருக்கிறது. புறக்கணிப்புகள். மன முறிவுகள். ஓட ஓட விரட்டல். ஒதுக்கி அவமானப்படுத்தும் கேவலங்கள்.”
Sundara Ramaswamy, J J Sila Kuripugal
“ஒவ்வொரு மொழி இலக்கியத்தையும், அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தையும், அடுத்த மொழிகளில் அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் தனித்தனிப் பத்திரிகைகள் இந்திய மொழி அனைத்திலும் துவக்கப்பட வேண்டும் என இரண்டு பத்தாண்டுகளாக நான் நண்பர்களிடம் சொல்லிவருகிறேன்.”
Sundara Ramasamy, ஜே.ஜே: சில குறிப்புகள் [J.J: Sila Kurippugal]