கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai] Quotes
கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
by
Nanjil Nadan112 ratings, 4.18 average rating, 6 reviews
கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai] Quotes
Showing 1-7 of 7
“மழை நின்று பெய்தது. மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சர மழை, அடை மழை, பெரு மழை. சிறு தூறலை, நெசவாளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள். நூலின்”
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
“முன்னால் போனால் கடிக்கும்... பின்னால் போனால் உதைக்கும் என்பதால், ‘சட்டம் ஒரு கழுதை’ என்றானாம் அறிஞன் ஒருத்தன். ஆனால், மேதைகள் வடிவமைத்த இந்தியச் சட்டம் இல்லாப்பட்டவனைத்தான் கடிக்கும், உதைக்கும்.”
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
“எல்லோருக்கும் காலம் போய்க்கொண்டு இருந்தது. எல்லோரும் காலம் போக்கிக்கொண்டு இருந்தனர். அல்லது காலம் என்பதுவே ஓர் கற்பனையோ?”
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
“பூசாரி வாழ்க்கைக்கு ஆடையிலும் கோடையிலும் சினப்படக் கூடாது. ரௌத்திரமும் பழக இயலாது. சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி. எதற்கும் திளைத்துச் சிரிக்க வேண்டும். தொழில் தர்மம். ஊசியால் குத்தினாலும், கோடரியால் வெட்டினாலும், வெட்டாங்கல்லால் எறிந்தாலும். ‘கல்லால் ஒருவன் அடிக்க, காண்டீபம் எனும் வில்லால் ஒருவன் அடிக்க’ என்று என்.சி.வசந்தகோகிலம் பாடிய நிந்தாஸ்துதியைப் போல. மறு கன்னத்தையும் குதூகலத்துடன் காட்ட வேண்டும்.”
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
“முதுமை எப்போதுமே அச்சுறுத்துவது. ஆசைப்பட்டு அவனவன் கட்டிய மூட்டை. அவனவன்தான் சுமந்து திரிய வேண்டும்.”
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
“மனசிருந்தால் புளியிலையில்கூட மூன்று பேர் புரண்டு படுக்கலாம்.”
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
“சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்...”
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]
― கொங்குதேர் வாழ்க்கை [Konguther Vazhkai]