Nadaga Sinthanaigal Quotes
Nadaga Sinthanaigal
by
Tamil Virtual Academy12 ratings, 4.25 average rating, 1 review
Nadaga Sinthanaigal Quotes
Showing 1-1 of 1
“ஒப்பற்ற இசை மேதையாக விளங்கிய திரு.எஸ்.ஜி. கிட்டப்பா அவர்களை நாடக மேடையிலே பார்த்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். அந்நாளில் அவர் பாடிய தமிழ்ப் பாடல்கள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இனி அந்த இசை மேதையைப் போல் ஒருவர் தோன்ற முடியுமா என்றே ஏக்கம் உண்டாகிறது. 1931ஆம் ஆண்டு. அப்போது நாங்கள் கும்பகோணத்தில் நடித்துக் கொண்டிருந்தோம். திரு. எஸ், ஜி. கிட்டப்பா எங்கள் அரங்கிலேயே எங்கள் நாடகக் காட்சி அமைப்புகளைக் கொண்டே நடிக்கக்கூடிய வாய்ப்பு நேர்ந்தது. "நந்தனார்' நாடகம் நடைபெற்றது. ஏராளமான கூட்டம். நாதசுரக் கலையில் கைதேர்ந்த வித்துவான்கள் பலர் முன் வரிசையிலே அமர்ந்திருந்தனர். கதா காலட்சேபக் கலையில் அந்நாளில் தலை சிறந்து விளங்கிய ஹரிகேசவ கல்லூரி முத்தையா பாகவதர் அவர்கள் ஆர்வத்தோடு வந்திருந்தார் வெளியே சிறிதும் இடமில்லாததால் அரங்கின் உட்புறம் அவருக்கு நாற்காலி போடப்பட்டது. அவரைச் சுற்றி நாங்கள் பலர் உட்கார்ந்திருந்தோம். அன்று எஸ். ஜி. கிட்டப்பா இசை மழை பொழிந்தார் என்றே சொல்ல வேண்டும். "நாளைப் போகாமல் இருப்பேனோ" என்ற பாடலில் மேல் ஸ்தாயியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்; அருகில் அமர்ந்திருதை பாகவதரை நாங்கள் பார்த்தோம். அவர், மெய்மறந்து. ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். மேலே போர்த்தியிருந்த "சாதரா'வை எடுத்து விரித்துப் பிடித்துக்கொண்டு "ஆஹா! போடப்பா போடப்பா; அப்படிப் போடு, நல்ல வேளை, நீ எங்கள் துறைக்கு வராமல் நாடகத்தோடு நிற்கிறாயே நாங்கள் பிழைத்தோம். ஈஸ்வரன் உன்னைக் காப்பாற்றட்டும்" என் றெல்லாம் சொல்லி, பலவிதமாகப் பாராட்டியதை நாங்கள் பக்கத்திலிருந்து கேட்டோம். திரு' எஸ். ஜி. கிட்டப்பா நாடக மேடையை விட்டு இசைத் துறைக்கு வராமல் இருக்க வேண்டுமே என்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்த வித்துவான்கள் சிலரையும் நான் அறிவேன். நாடக மேடையில் பிரபலமாக விளங்கிய நடிகர் ஒருவருக்கு இசை உலகப் பெரியோர்களெல்லாம் இவ்வளவு பெருமதிப்புக் கொடுத்திருக்தது வியப்புக்குரியதல்லவா”
― Nadaga Sinthanaigal
― Nadaga Sinthanaigal
