இந்திய ஞானம் Quotes

Rate this book
Clear rating
இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal] இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal] by Jeyamohan
66 ratings, 4.36 average rating, 3 reviews
இந்திய ஞானம் Quotes Showing 1-5 of 5
“நாயில் நன்றியாக, பறவையில் வேகமாக, பாம்பில் விஷமாக, மரத்தில் உயிராற்றலாக, அலைகடலில் கொந்தளிப்பாக, அதிகாலையில் சிவப்பாக, இரவில் இருளாகத் தெரிவதெல்லாமே பிரம்மம்தான். எல்லாமே தெய்வம்தான்.”
Jeyamohan, இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]
“சிருஷ்டி கீதம் அப்போது அசத் இருக்கவில்லை சத்தும் இருக்கவில்லை உலகம் இருக்கவில்லை அதற்கப்பால் வானமும் இருக்கவில்லை ஒளிந்து கிடந்தது என்ன? எங்கே? யாருடைய ஆட்சியில்? அடியற்ற ஆழமுடையதும் மகத்தானதுமான நீர் வெளியோ? மரணமிருந்ததோ மரணமற்ற நிரந்தரமோ? அப்போது இரவு பகல்கள் இல்லை ஒன்றேயான அது தன் அகச் சக்தியினால் மூச்சு விட்டது அதுவன்றி ஏதுமிருக்கவில்லை இருட்டால் போர்த்தப்பட்ட வெளி வேறுபடுத்தலின்மையால் ஏதுமின்மையாக ஆகிய வெளி அது நீராக இருந்தது அதன் பிறப்பு வெறுமையால் மூடப்பட்டிருந்தது! தன் முடிவற்ற தவத்தால் அது சத்தாக ஆகியது அந்த ஒருமையில் முதலில் இச்சை பிறந்தது பின்னர் பீஜம் பிறந்தது அவ்வாறாக அசத் உருவாயிற்று! ரிஷிகள் தங்கள் இதயங்களைச் சோதித்து அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர் அதன் கதிர்கள் இருளில் பரந்தன ஆனால் ஒருமையான அது மேலே உள்ளதா? அல்லது கீழே உள்ளதா? அங்கு படைப்பு சக்தி உண்டா? அதன் மகிமைகள் என்ன? அது முன்னால் உள்ளதா? அல்லது பின்னால் உள்ளதா? திட்டவட்டமாக யாரறிவார்? அதன் மூல காரணம் என்ன? தேவர்களோ சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்! அப்படியானால் அது எப்படிப் பிறந்தது? யாருக்குத் தெரியும் அது? அதை யார் உண்டு பண்ணினார்கள் அல்லது உண்டு பண்ணவில்லை? ஆகாய வடிவான அதுவே அறியும் அல்லது அதுவும் அறியாது!”
Jeyamohan, இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]
“பக்தி அளிக்கும் விவேக ஞானம் ஒருவரை வேதாந்தம் நோக்கிக் கொண்டுசெல்லும். ஞானம் அளிக்கும் கனிவு ஒருவரை பக்தி நோக்கிக் கொண்டுசெல்லும்.”
Jeyamohan, இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]
“இன்று நாம் நம் மொழியைக் கூர்ந்து பார்க்கும்போது எத்தனை சொற்கள் வழியாகச் சென்றுகொண்டிருக்கிறோம். ‘அவரு சொன்னா அது வேத வாக்கு’ என்கிறோம். வேதங்களின் சொல் மாற்ற முடியாத அடிப்படை என்ற பொருளில், ‘யோகம் இருந்தா நடக்கும்’ என்கிறோம். ‘அதில ஒரு நியாயம் வேண்டாமா?’ என்கிறோம். இந்தச் சொற்களுக்கான பொருள் நமக்குத் தெரியுமா? இவற்றின் ஊற்று மூலம் தெரியுமா?”
Jeyamohan, இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]
“முனிகளில் நான் கபிலன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான்”
Jeyamohan, இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]