இந்தியப் பயணம் [India Payanam] Quotes

Rate this book
Clear rating
இந்தியப் பயணம் [India Payanam] இந்தியப் பயணம் [India Payanam] by Jeyamohan
142 ratings, 4.16 average rating, 11 reviews
இந்தியப் பயணம் [India Payanam] Quotes Showing 1-7 of 7
“காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.”
Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]
“அப்பாவால் கொஞ்சப்படாத பெண்கள் மனசில அந்த ஏக்கம் தீரவே தீராது...”
Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]
“நாம் வாழ விதிக்கப்பட்ட நிலம் ஒன்றே. கற்பனையோ நம்மை விதவிதமான நிலங்களில் முடிவிலா வாழ்க்கைகளை வாழச்செய்கிறது. பயணத்தில் ஒவ்வொரு மண்ணிலும் ஒரு கணம் வாழ்ந்தபடியே நாம் செல்கிறோம்.”
Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]
“இந்திய சாதியமைப்பைப் பற்றிய மனநிலைகளை இன்னும் அறிவியல் பூர்வமாக ஆராய வேண்டிய காலம் வந்துவிட்டது என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதை பிராமணர் உருவாக்கிய சதிவேலை என்று நம்பும் வெறுப்புவாத மூடநம்பிக்கையை படித்தவர்களாவது கைவிட வேண்டும். அது இந்தியப்பழங்குடி வாழ்க்கையில் இருந்து பலநூற்றாண்டுகளாக உருவாகி வந்த ஒரு பேரமைப்பு. முரண்பாடுகள் பரஸ்பர ஆதிக்கம் ஆகியவை ஒருபக்கம். அது எந்த சமூகப்பிரிவினையும் தவிர்க்க முடியாமல் உருவாக்கும் விளைவுதான். ஆனால் மறுபக்கம் கலைகளையும் தொழில்களையும் சார்ந்த உள்ளார்ந்த ஞானத்தையும் அனுபவ அறிவையும் பாரம்பரியமாகக் கொண்டுசெல்லுதல்; போரிடும் தன்மை, வணிகபுத்தி போன்ற பிறவிப்பண்புகளை முன்னெடுத்துச் செல்லுதல், ஒருங்கிணைந்து பெரும் அமைப்புகளில் உருவாக்குவதற்கானவை இயல்பான பொது அடையாளமாக அமைதல் என ஜாதிக்கு பல சாதக அம்சங்களும் உண்டு.”
Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]
“காலையில் அழகாக இல்லாத இடமே இல்லை.”
Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]
“இந்தியாவில் ஒருபோதும் பிரிவினைவாதம் பேசக்கூடாதவர்கள் தமிழர்களே. அது பிற மாநிலங்களில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களை அடகு வைத்துச் செய்யப்படும் அதிகாரச் சூதாட்டம்.”
Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]
“வங்காளிகள் மலையாளிகள் இரு சாராரும்தான் இந்தியாவில் அசிங்கமான பிராந்திய உணர்வு கொண்டவர்கள். அதற்குக் காரணம் இடதுசாரி அரசியல் என்பது ஒரு வேடிக்கை.”
Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]