வெண்முரசு – 12 – நூல் பன்னிரண்டு – கிராதம் Quotes

Rate this book
Clear rating
வெண்முரசு – 12 – நூல் பன்னிரண்டு – கிராதம் வெண்முரசு – 12 – நூல் பன்னிரண்டு – கிராதம் by Jeyamohan
52 ratings, 4.54 average rating, 7 reviews
வெண்முரசு – 12 – நூல் பன்னிரண்டு – கிராதம் Quotes Showing 1-18 of 18
“உயிருடன் உறவுகொண்ட நண்பனே அப்படி உட்புகுந்து அறியமுடியும். உயிர்துடிக்கும்படி நரம்புமுடிச்சில் கைவைத்துக் கொல்லமுடியும்.”
ஜெயமோகன் [Jeyamohan], கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“காட்டில் நீர் கண்டடைய ஒரு வழி செய்வதுண்டு. குரங்குக்கு உப்பு அள்ளி ஊட்டி விடாய் கொள்ளச்செய்வார்கள். அது செல்லும் வழியில் தாங்களும் சென்று சுனையையோ ஊற்றையோ அடைவார்கள்.”
Jeyamohan, வெண்முரசு – 12 – நூல் பன்னிரண்டு – கிராதம்
“நீங்கள் ஆண்கள். உங்கள் உலகில் நின்றபடி இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. நான் என்னை முற்றளித்துவிட்டவள்” என்றாள். “அப்படி முற்றளிக்க எவராலும் முடியாது. அறிவிலிபோல் சொல்லெடுக்காதே. உளம்கொண்டு உடல்கொண்ட எவரும் தனிமையின் ஒரு துளியேனும் உள்ளே எஞ்சவைத்தவர்களே” என்றான் இந்திரன். “இல்லை, காதல்கொண்ட பெண்ணின் இயல்பு அது. காதலின் பெருநிலையை வாழ்நாளெல்லாம் நீட்டித்துக்கொண்டவளுக்கு அது இயல்வதே” என்று அவள் சொன்னாள்.

இந்திரன் சலிப்புடன் தலையசைத்து “வீண் சொல்” என்றான். “தந்தையே, அவ்வண்ணம் கணம் முறியாது காதலில் வாழ்ந்தவள் ஒருத்தியேனும் இருந்தாள். அவள் பெயர் ராதை” என்றாள். அவை முழுக்க வியப்பின் கார்வை எழுந்தது. “நான் இக்கணம் எனக்கு அணுக்கமானவளாக உணர்வது அவளை மட்டுமே. என்னை அறியக்கூடுபவளும் அவள் ஒருத்தியே” என்றாள்.”
Jeyamohan, வெண்முரசு – 12 – நூல் பன்னிரண்டு – கிராதம்
“தந்தையே, சற்று முன் ஒன்றை உணர்ந்தேன். ஒரு பொருந்தா எண்ணத்திவலையென வந்துசென்றது அது. உண்மைகள் அவ்வண்ணமே நம்மை எண்ணியிராப்பொழுதில் ஏதென அறியாது தொட்டுச்செல்லும் போலும். அவரை நான் ஒருநிலையிலும் பிரியமுடியாதென்று என் ஆழம் முதலில் உணர்ந்தது நான் அவருடன் போரிட்டபோது” என்றான் அர்ஜுனன். “அப்போரை நான் எனக்குள் நிகழ்த்துவது என்றே என் அகம் உணர்ந்தது. என்னருகே எழுந்த அவர் விழிகள் என் விழிகளென்று திடுக்கிட்டேன். அவர் எழுந்தகன்றபோது அர்ஜுனன் விழுந்துகிடப்பதை இளைய யாதவர் என நின்று நான் கண்டேன்.”
Jeyamohan, வெண்முரசு – 12 – நூல் பன்னிரண்டு – கிராதம்
“செயலும் விளைவும் மறுசெயலும் என பின்னிச் செல்லும் இப்பெரு வலையில் ஒரு கண்ணியை உணர அனைத்தையும் உணர்ந்தாக வேண்டும் என்பர்”
ஜெயமோகன் [Jeyamohan], கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“உவகையினூடாக அறிவது அறிவின் ஒருபக்கம் மட்டுமே. கடுந்துயரும் கசப்பும் வலியும் கொண்டு கணம் கணமென வதைபட்டு அறியும் அறிவும் ஒன்றுண்டு. அவ்வறிவாலும் இவையனைத்தையும் அறிந்தவனே மெய்யறிவன்.”
ஜெயமோகன் [Jeyamohan], கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“நீராடும் ஆற்றுக்கு உடலை அளிப்பவனே விண்ணிழிந்து மலைதழுவி மண்விரிந்து பெருகும் ஆற்றை அறிகிறான். தன் சிறு கொப்பரையில் அதை அள்ளி வருபவன் கையிலிருப்பது ஆறல்ல. அவன் சிறுமை மட்டுமே. அதை அவன் ஆறென காட்டத் தொடங்குகையில் வேதமறுப்பெனும் பெரும்பழி சூழ்கிறது அவனை.”
ஜெயமோகன் [Jeyamohan], கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“மருந்தை அருந்துபவன் அதை முற்றறிந்துவிட்டு உட்கொள்வதில்லை. மருந்து உள்ளே என்ன செய்கிறதென்பதை மருத்துவனும் சொல்லிவிடமுடியாது. வேதமே சொல்லில் எழுந்த மருந்து.”
ஜெயமோகன் [Jeyamohan], கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“கோழைகளுக்குரியதல்ல மெய்மை!”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“இவ்வருமணியின் சிறப்பென்ன?” என்றார். அது ஒரு விழிமணி போலிருந்தது. “யாதவனே, நீ நோக்கியறிந்த ஒவ்வொன்றிலும் மறைந்துள்ள பிறிதொன்றுள்ளது. அதை இது காட்டும்” என்றபடி அவள் புன்னகைத்தாள். “இதன் ஒளியில் ஒவ்வொன்றும் நிலைமாறும். உன்னைச் சூழ்ந்துள்ள இப்புடவி முற்றிலும் திரிந்து உருமாறும்.”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“முன்பொருமுறை நான் காட்டுமரத்தின்மேல் அமர்ந்து தூங்கிவிட்டேன். விழித்துக்கொண்டு சப்புக்கொட்டியபடி எச்சில் துப்பினேன். கீழே அவ்வேளையில் இரு அந்தணர்கள் வந்து அமர்ந்திருப்பார்கள் என யார் கண்டது? அவர்கள் தங்கள் மூட்டையைப் பிரித்துவைத்து பலநாள் பசியுடன் விரைந்து வேதச்சொல்லுரைத்து அள்ளி உண்பதற்காகக் கையெடுத்த வேளை. தீச்சொல்லிட்டுவிடுவார்கள் என்று திகில்கொண்டதும் நான் கிளிபோல ஓசையிட்டுக்கொண்டு மேலே ஒடுங்கிக்கொண்டேன். மூத்த அந்தணன் ‘தாழ்வில்லை, அது கிளியின் எச்சமே’ என்றான். இளையவன் ‘இருந்தாலும் எச்சமல்லவா?' என்றான். மூத்தவன் ‘அக்கிளி உண்ட உயர்வான கனிகளை எண்ணுக’ என்றான்”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“வழிகளில் செல்பவர் மூவர். அந்தணர், சூதர், வணிகர். அந்தணர் எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள். சூதர் எங்கிருந்தோ வந்துகொண்டிருக்கிறார்கள். வணிகர் வழிகளிலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள்”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“ஊழ் பணம் கொடுத்தால் தராசைத் தூக்கும் வணிகனா என்ன? அது கள்ளுண்ட குரங்கு அல்லவா?”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“செயல்கள் அனைத்துக்கும் இங்கேயே நிகரான விளைவுண்டு என நம்புபவர்கள் எளியவர்களன்றி எவர்?”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“வழிபட்டு இறையெழுப்பி அருள்கொள்ளவேண்டிய தெய்வச்சிலைகளை நீங்கள் வயல்கொல்லையில் காவல்பாவைகளாக நிறுத்திக்கொள்கிறீர்களோ என்று ஐயம் கொள்கிறேன்”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“விழைவின் ஊற்றை அறியாமல் விழைவை வெல்ல முடியாது.”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“வேதங்கள் விழைவை நிறைவுசெய்கின்றன என்கிறீர்கள், ஆசிரியரே. விழைவை அறிய அவை உதவுகின்றனவா?” அவர் அவனைப் புருவம்சுளிக்கக் கூர்ந்து நோக்கி “நீ கேட்பது என்னவென்று உணர்கிறாயா?” என்றார். “விடாய்க்கு நீரே நிறைவளிக்கும். விழைவுக்கு விழைபொருளே விடையாகும். தத்துவம் அல்ல.”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)
“என்றோ ஓர் இடத்தில் நாம் நம்மை நம் முன்னோரைவிடப் பெரியவர்களாக எண்ணிக்கொண்டோமா? அதன் விளைவைத்தான் சுமக்கிறோமா?”
Jeyamohan, கிராதம் / Kratham (வெண்முரசு / Venmurasu Book 12)