கம்பாநதி Quotes

Rate this book
Clear rating
கம்பாநதி (Kambanadhi) கம்பாநதி by Vannanilavan
65 ratings, 3.74 average rating, 7 reviews
கம்பாநதி Quotes Showing 1-5 of 5
“சீட்டு விளையாட்டில் பேச்சு என்பது ஒரு விசித்திரமான அம்சம். விளையாட்டுக்கு நடுவே பேசுகிறவன் அக்கறையோடு பேசுகிறானா, கேட்கிறவன் அக்கறையோடு கேட்கிறானா, என்பதை யாராலும் முடிவு செய்யவே முடியாது.”
வண்ணநிலவன், கம்பா நதி: நாவல்
“மழைக்குள் பேச எதுவுமே இல்லை. யாரும் மழை பெய்கிறபோது பேசுகிறதே இல்லை. மழை பெய்கிற சத்தம் எல்லோரையும் பேசவிடாமல் அடக்கி விடுகிறது.”
வண்ணநிலவன், கம்பா நதி: நாவல்
“எவ்வளவுதான் துயரமான சம்பவங்கள் நடந்தாலும் அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன.”
வண்ணநிலவன், கம்பா நதி: நாவல்
“நல்லவேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாய் அது நகரத் தெரிந்து வைத்திருக்கிறது. இது ஒரு பெரிய விஷயம்தான்.”
வண்ணநிலவன், கம்பா நதி: நாவல்
“மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மழைக்குள் பேச எதுவுமே இல்லை. யாரும் மழை பெய்கிறபோது பேசுகிறதே இல்லை. மழை பெய்கிற சத்தம் எல்லோரையும் பேசவிடாமல் அடக்கிவிடுகிறது. கோமதியும் தான் அவனிடம் புதிதாக என்ன பேசிவிடப் போகிறாள். ஏற்கனவே பேசினது போலத்தான் இனிமேலும் கூட எப்போதும் பேசமுடியும்.. ‘நான் உன்னைப் பார்க்க வேண்டும். பார்வை அயர்ச்சி தரவில்லை. மீண்டும், மீண்டும் நான் சந்திக்கும் அன்றாடக் காரியங்களும், அல்பமான தின அலுவல்களும் இமைப்பொழுதில் என்னை சலிப்பிற்கு இட்டுச் சென்றுவிடுகின்றன. எதுவும் புதிய ஒளியைத்தர முயற்சிக்கவில்லை. ஆனாலும் பேசுவதிலும் நான் கேட்பதிலும் என்ன இருக்கிறது. அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அமைதியாகச் சந்தித்துக்கொள்வது பற்றி நான் உனக்குச் சொல்லித்தர முடியும். இதெல்லாம் யாரும் உன் வீட்டிலும், என் வீட்டிலும் விரும்புவதில்லை. நீண்ட பெருமூச்சுக்களை விட்டுக்கொண்டு உன்னை இமைக்காமல் பார்த்தால் என் துன்பங்களை மறக்கமுடிகிறது. இது தவிர, இந்த சின்ன வயசில் படும் துன்பத்தை மாற்ற வேறு வழி தெரியவில்லை.”
வண்ணநிலவன், கம்பாநதி