மோகமுள் [Moga Mul] Quotes
மோகமுள் [Moga Mul]
by
Thi. Janakiraman967 ratings, 4.17 average rating, 94 reviews
மோகமுள் [Moga Mul] Quotes
Showing 1-30 of 34
“அபிப்ராயம் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு என்று ஆகிவிட்ட காலம் இது. சொல்லுகிற மண்டை சூன்யமா, கனமா, சரக்கு உள்ளதா என்று நாம் தெரிந்துகொண்டு, வாங்குகிறதையோ தள்ளுகிறதையோ செய்யணும், இவன் கிடக்கான்”
― Moga Mul
― Moga Mul
“சாலியமங்கலம் ரஸ்தாவின் இரு மருங்கிலும், நரைக்கப்போகும் கூந்தலைப்போல நெற்கதிர்கள் கண்ணுக்கெட்டியவரை முதிர்ந்து பழுத்துச் சாய்ந்துக் கிடந்தன.”
― Moga Mul
― Moga Mul
“அலட்சிய புத்தி, அகம்பாவம், இடை வெட்டுப் பேச்சு இதுதான் ஜாஸ்தியாகப் படிகிறது. படிப்பும் புத்தியும் வரதோ என்னமோ, அதுக்கு இருக்கற அகம்பாவம் வந்துடறது.”
― Moga Mul
― Moga Mul
“ஒரு நல்ல காரியத்திலே ஈடுபட்டோமானால், மோகினி மயக்குமாதிரி நம்ம கவனத்தை அந்தண்டை இழுத்துண்டு போறதுக்கு எவ்வளவோ வந்து சேரும். ஸ்நேகிதம், காதல், பணம் சம்பாதிக்கிற ஆசை -இப்படி ஏதாவது ஒரு பேர் வச்சுண்டு வரும் அதெல்லாம். அதுக்கெல்லாம் இடம் கொடுத்தா காரியம் கெட்டுப் போயிடும். பின்னால் வருத்தமாயிருக்கும்.”
― Moga Mul
― Moga Mul
“வெறும் இன்பத்தை விட, துன்பத்திலிருந்து விடுதலையை உடலும் மனமும் அனுபவிப்பது அதிகம்தான்.”
― Moga Mul
― Moga Mul
“துக்கம் வரும்போது சகித்துக்கொள்ள சக்தி கொடுக்கும். ஆனந்தம் வரும்போது நிதானமாக அனுபவிக்கச் சொல்லும். சுயநலத்தை அறுத்தெறியும். ஐச்வர்யம் கிடைக்கும்போது, அதைப் பொதுசொத்தாகக் கருதி பிறரோடு பகிர்ந்துகொள்ளும் மனுஷத் தன்மையைக் கொடுக்கும். நாட்டில் பார்க்கும் பெண்களை எல்லாம் நடமாடும் தெய்வங்களாகப் பார்க்கச் செய்யும். அகந்தையை அறுக்கும். மனதைச் சுத்தம் செய்யும்.”
― Moga Mul
― Moga Mul
“குருகுல வாசம் செய்கிற வித்தை, காலம் மாறிவிட்டது. பள்ளிக்கூடம் வைத்துவிட்டார்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மற்ற பள்ளிக்கூடம் மாதிரியே இதையும் பண்ணிவிட்டான்களே.”
― Moga Mul
― Moga Mul
“சாமி கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் குரு கவனிக்க வேண்டும், பரம நாஸ்திகனும்கூட குருவை விடமாட்டான்”
― Moga Mul
― Moga Mul
“இந்த மந்த்ர ஷட்ஜமத்தைப் பிடித்து உலுக்குவதானால் சரீரத்தை, சூட்சும பலத்தைக் காப்பாற்றினால்தான் முடியும். அதுவும் உமக்குக் கிடைத்திருக்கிறது. பிரம்மசாரியாக இருக்கிறது பெரிய அதிர்ஷ்டம் ஐயா.”
― Moga Mul
― Moga Mul
“நீர் பரம பாக்கியசாலி அய்யா. மந்த்ர ஷட்ஜமத்திலே போய் இப்படி மதயானை மாதிரி எவ்வளவு தீர்மானமாக நிற்க முடிகிறது! எப்பேர்ப்பட்ட சாரீரம்! எவ்வளவு சாதகம் வேண்டும் இதற்கு!”
― Moga Mul
― Moga Mul
“தன்னைப் பற்றிய நினைவே ஒழிந்தது போன்ற ஒரு தூய்மையின் பிரகாசம் அந்த சாய்விலும் கம்பீர வடிவத்திலும் ஒளிர்வது போலிருந்தது.”
― Moga Mul
― Moga Mul
“ஆண்களோடு சேர்ந்து சேர்ந்து, போட்டிப் போட்டுப் போட்டு இவர்களுக்கும் ஆண்தன்மை வந்துவிட்டதோ என்னவோ? அரும்பு மீசையும் வீச்சு நடையுமாகப் போகிற பெண்களைப் பார்க்கும்போது . . . இது என்ன இழவு? . . . பெண்மைக்கும் சுருதிக்கும் எவ்வளவு நகச் சதை உறவு! அதனால்தான் பெண்மையோடு அதுவும் போய்க்கொண்டிருக்கிறேதோ என்னவோ?”
― Moga Mul
― Moga Mul
“ஆமாம்! நல்லதா ஒண்ணை அனுபவிச்சதுக்கப்பறம் உசிரோட இருக்கலாமா? மறுபடியும் மண்ணிலேதானே வந்து புரள வேண்டியிருக்கு.”
― Moga Mul
― Moga Mul
“இவ்வளவு நல்லாப் பாடினா, எனக்குப் பயமாயிருந்தது. மாரை மாரை வந்தடைச்சுது. அழுகை அழுகையா வந்தது, அவர் நிறுத்தினதால்தானோ என்னவோ. நிறுத்தாம பாடிட்டே இருந்திருந்தா நானும் அங்கேயே உட்கார்ந்து பிராணனை விட்டிருப்பேன்" என்றாள் யமுனா.”
― Moga Mul
― Moga Mul
“மகா புண்யசாலிகள். சங்கீதம் சங்கீதம்னு ஒரு வித்தைக்காகவே ஆயுஸ் முழுக்கக் கழிக்கிறார்கள். உடம்பிலேயும் தெம்பு இருக்கு. எந்த ஊராயிருந்தாலும் சரீரம் ஈடு கொடுக்கிறது . . . என்னடா சாரீரம்! இப்படியா பாடுவன்! அமிர்தமாப் பொழியறானே!”
― Moga Mul
― Moga Mul
“அவர் சாமான்யமான ஆசாமி இல்லை, பெரிய வித்வானென்று சொல்லிக்கொள்ளவும் இல்லை. மற்றவர்களுக்கு அளித்த ஸ்தானம் தனக்குக் கொடுக்கப்படவில்லையே என்று அழவும் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் பாடிக்கொண்டிருந்தார். அந்த மனிதனின் முகத்திலும் நெஞ்சுரப்பும் அழுத்தமும் உறுதியும் அசைக்க முடியாதபடி வேரூன்றிக் கிடந்தன. அதனால் அவருக்குக் கோபமே வரவில்லை போலிருக்கிறது. நிதானம் இழக்காமல் எதற்கும் புன்சிரிப்புப் பூக்க முடிகிறது அவரால்.”
― Moga Mul
― Moga Mul
“ஓரிரண்டு இடத்தில் நாலைந்து மத்தாப்புக்கள் பிசுபிசுவென்று எரிந்துகொண்டிருந்தன. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஊர் இப்படி இராது. காது செவிடுபடும். இப்போது தெருக்களை அதிரவைக்கும் இடிகள் யுத்தகளத்துக்குப் போய்விட்டன. இங்கிலாந்தின் குழந்தைகள்மீதும் கட்டிடங்கள்மீதும் மனிதர்கள்மீதும் விழுந்துகொண்டிருந்தன.”
― Moga Mul
― Moga Mul
“ஊரெங்கிலும் இருட்டு. மின்சார விளக்குகளைச் சுற்றிக் கறுப்பு போட்டிருந்தது. யுத்த காலத்து இருள். எங்கு பார்த்தாலும் போர்வை போர்த்திக் கழுத்தை நெறிப்பது போல விளக்குகளைக் கறுப்பு அமுக்கிக்கொண்டிருந்தது.”
― Moga Mul
― Moga Mul
“அவரோடு பழகியதிலிருந்து இந்தக் குணம் பாபுவையும் பற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். சின்ன சின்ன பொருட்கள், நிகழ்ச்சிகள் எதைப் பார்த்தாலும் அவருக்கு வியப்பாகத்தானிருக்கும். மழைக் காலத்தில் கொல்லை வாழைகள் மீது டப்டப்பென்று மழை சொட்டும் ஒலியை மெய்மறந்து கேட்டுக்கொண்டு நிற்பார். இலை நுனியிலிருந்து நின்று நின்று நழுவி விழும் பளிங்கு போன்ற தீர்த்துளியை. இலையிலிருந்து தரை வரை பார்த்துக்கொண்டே நிற்பார். வாழை மரத்தின் அடியில் ஊரத் தொடங்கிவிட்ட மரவட்டைகளைப் பார்த்துக்கொண்டே நிற்பார்.”
― Moga Mul
― Moga Mul
“பாபு, இதைப் பார்த்தியாடா? . . . இதைப் பாரேன். என்னமோ தம்புரா, வீணைங்கிறானேடா இந்தச் சோற்றிலே இருக்கிற துவாரத்தைப் பாரு. லக்ஷக்கணக்கிலே இருக்கும் போலிருக்கு, எங்கேயாவது ஒரு கோணல் மாணல் இருக்கா பாத்தியா? பத்து வாத்தியத்தைச் சுருதி சேர்த்துண்டு, ஒருத்தனே ஏகக்காலத்திலே வாசிக்கிறப்பல இருக்கு . . . இத்தனை அழகாக ஒரு பாட்டுப் பாட முடிஞ்சாப் போரும். இல்லாட்டா இந்த மாதிரி ஒரு வாத்யம் எங்கேயாவது தேவலோகத்திலே இருக்குமோன்னு தோண்றது.”
― Moga Mul
― Moga Mul
“பாபுவுக்கு இந்த அடைசல் வேண்டியிருந்தது, பயமில்லாத பத்திரமான காப்பில் இருப்பது போலிருந்தது. இங்கு இந்த வீட்டுக்கு வந்தது முதலே அந்த விடுதலையை உணரமுடிந்தது”
― Moga Mul
― Moga Mul
“காலேஜிலே பிள்ளைகளைப் படிக்கவைக்கிறவர்கள், உயர்ந்த மனுஷனாக ஆக்கணும்கறத்துக்காக வைக்கலெ. நாலு காசு கூடச் சம்பாதிக்கிறதுக்கு அஸ்திவாரமாயிருக்கும்னு செய்யறா, அவ்வளவுதான்”
― Moga Mul
― Moga Mul
“வேறு சிந்தனையின்றி நாதத்தையே பரம் பொருளாக எண்ணி, அதன் அருவியின் கீழ் ஓயாமல் நனைந்து கொண்டிருப்பவரின் உணர்வும் அறிவும் குளிர்ந்திடாமல் எப்படியிருக்கும்?”
― Moga Mul
― Moga Mul
“ரங்கண்ணா மனதையே, உடலையே சங்கீத மயமாக ஆக்கிக் கொண்டிருந்தார். தம்புராவை மீட்டிக்கொண்டே இருக்கும்போது, கிழவி உள்ளே அண்டாவில் நீர் எடுக்கச் செம்பால் மொள்ளும்போது ஞண் என்று ஒலித்தால், "என்னடா ஸ்வரம் அது!”
― Moga Mul
― Moga Mul
“உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார சுருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும் ஸ்வரங்களாகவும் கேட்கின்றன”
― Moga Mul
― Moga Mul
“ஆற்று வெள்ளத்தின் பச்சை கலந்த காவி, மாலை வெயில், ஒரு சொட்டு மேகம் இன்றி ஒரே நீலமாகக் கவிந்திருந்த வானம், அதில் அங்குமிங்கும் உயரத் திரிந்த கழுகுப் புள்ளிகள், ஆற்றோரத்து அடர்ந்த பச்சை - எல்லாம் இருவரையும் சிறிது நேரம் பேச்சோயச் செய்தன.”
― Moga Mul
― Moga Mul
