ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele Quotes

Rate this book
Clear rating
ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele by Kota Shivarama Karanth
223 ratings, 4.43 average rating, 31 reviews
ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele Quotes Showing 1-10 of 10
“இந்த மலைநாடு என்னைவிடச் சோம்பல் மிகுந்த மக்கள் நிரம்பிய ஒன்று. மக்களுடைய போக்குக்கும் இங்குள்ள கன்று காலிகள் போக்கிற்கும் ஒற்றுமை மிகுதி. அதிலும் மலை நாட்டின் எருமைகள்! மழைகாலம் வந்தால் மேய்ச்சலுக்குக் குறைவேயில்லை. ஏழைக் குடியானவனின் வற்றிய எருமைகள், அந்தப் பசுமையை மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொண்டு எங்கே குட்டை தென்படுகிறதோ அங்கே விழுந்துப் புரண்டு 'ஜலஸ்தம்பனம்' செய்கின்றன. சுறுசுறுப்பில்லா எருமை நம்மைப்போலவே ஜடமான வாழ்க்கை நடத்துகிறது. ஆனால் அவைகளின் மனமும் கூட ஜடமாய் இருக்குமா? இல்லாமலும் இருக்கலாம். அவற்றிற்கும் இன்பமும் அமைதியும் தேவை. நீரைக் கண்டால் அவைகளுக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி! அதில் இறங்கி, தலையை மட்டும் தூக்கி, மிதந்தபடியே நெடுநேரம் கழிப்பதென்றால் அவையும் கூட இரசிக்கும் தன்மையுடையனவாகவே இருக்க வேண்டும். அதிலும் வெயில் மிகுதியானால் அவை இறங்கியுள்ள குளமோ, குட்டையோ அவற்றிற்கு மிகவும் இன்பமயமாகத் தோன்றுகின்றன. மேய்ச்சலோ, தீனியோ எதுவுமே வேண்டாமென்று நீரிலே புரளுகின்றன. நெடுநேரம் கண்ணை மூடி உறங்குகின்றன. 'இதுவே இன்பம்' 'இதுவே இன்பம்' என்று நினைத்து 'நிர்விகல்ப சமாதி'க்குச் சிறிதும் குறைவில்லாத ஆனந்தத்தை அனுபவிக்கின்றன.”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele
“மறதி நிரம்பி வாழ்க்கை மிகவும் இன்பமயமானது. கசப்பை மறக்க முடிந்தால்தான் வாழ்க்கை வாழக்கூடியதாகும்.”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele
“அன்பு வழி தவறினால் புளித்து, நஞ்சாகிவிடும்.”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele
“இளமை என்பது இதுதான்! இளமையில் தன்னைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படுவதில்லை. உயர்ந்து வளர்ந்திருக்கும் மரத்துக்கு அதன் வேர் கண்ணுக்குத் தெரியுமா?”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele
“காண்டாலாவில் எங்கள் வீட்டுக்கு எதிரில் பசும்புல் நிறைந்த மேய்ச்சல் நிலம் ஒன்று இருக்கிறது. அங்கே நாள்தோறும் பல பசுக்கள் மேய்வதற்காக வருகின்றன. அவைகளுக்கு முன்னும் பின்னுமாக, உண்ணியைத் தின்பதற்காக ஊரில் உள்ள மைனாக்கள் எல்லாம் எப்போதும் தயாராக இருக்கும். கொக்குகளும் வருவதுண்டு. அவைகளுக்கு இடையே நெருங்கிய நட்பு! அவை பறவைகள், இவை பசுக்கள். இவற்றிற்குத் தீனி புல்; அவற்றிற்குத் தீனி புழு. பசு, கன்று காலிகளுக்கு இந்த உண்ணி ஒரு பெரும் தொல்லை. அந்தத் தொல்லையைப் போக்கும் காட்டு மைனா இயற்கையாகவே நண்பனாகிறது. அநாதி காலம் தொட்டே வருகிற நட்பு அது.”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele
“பெயரை உடைய மனிதன் இறந்த பிறகு அந்தப் பெயர் வெறும் சொல் மட்டுமேயாகும்.”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele
“சிந்தனையும் ஒரு வேலைதான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால், அது சிந்தனையா, அல்லவா என்பதை யார் தீர்மானிப்பது? மற்றவர்கள் கண்களுக்குச் சிந்திக்கிறவன் சோம்பேறியாகப் படுவான். சோம்பேறியும்கூடத் தான் சிந்தனையில் காலம் கழிப்பதாகக் கூறிக்கொள்ளலாம்.”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele
“உலகத்திலிருந்து தூர விலகிப்போய் அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஓர் அழகு, இல்லையா?”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele
“சாவைப் பற்றிய அச்சம் எனக்கு இல்லவே இல்லை. ஆனால் நான் வாழ்ந்து யாருக்கு என்ன பயன் ஏற்பட்டது - என்னும் மதிப்பீடு எனக்கு மிகவும் தொல்லை தந்தது. சுருக்கமாக, சில நாட்களாக என்னை வாட்டிவந்த ஒரே ஒரு சங்கதி என்னவென்றால் - வாழ்க்கைக் கணக்கேட்டில் நான் பெற்றதைவிடக் கொடுத்தது குறைவாக இருக்கக் கூடாது என்னும் எண்ணம்தான். இது வெறும் பணத்தைப் பற்றிய கணக்கு அல்ல. மனித வாழ்க்கையின் வரவு செலவு. மனிதன் சமுதாயத்துக்குப் கடன்பட்டவனாகப் பிறக்கிறான், அந்தக் கடனிலேயே வளர்கிறான். இறக்கும்போது தான் பெற்றதைவிட அதிகமாகத் திருப்பித் தராவிட்டால் அவனுடைய பிறவி பயன்ற்றதாகிறது. அவன் பிறந்ததால் சமுதாயத்திற்கு இழப்பே என்பது என் கருத்து.”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele
“எனக்குக் கூட்டத்தைக் கண்டாலே பிடிக்காது. கூட்டம் மிகுதியானாலும், பேச்சு அதிகமானாலும் முழு ஊமையாக மாறிவிடுவது என் இயல்பு.”
Kota Shivarama Karanth, ಅಳಿದ ಮೇಲೆ | Alida Mele