வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம் Quotes
வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம்
by
Jeyamohan90 ratings, 4.40 average rating, 7 reviews
வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம் Quotes
Showing 1-1 of 1
“உடலசைவு காலத்தை அலகுகளாகப் பிரித்து அளவிடுவது. அளவிடப்படும் காலம் மீது ஏறி நெடுந்தூரம் செல்லமுடியாது. செய் செய் என்று அது ஆணையிடும். ஏதும் செய்யாதபோது எடைகொண்டு ஒவ்வொரு உடல்கணுமேலும் ஏறி அமரும். ஒவ்வொரு எண்ணத்துடனும் பின்னி முயங்கி இறுக்கி நெரிக்கும். 'உடலசைவுகளால் மானுடன் காலத்தை சமைத்துக் கொண்டிருக்கிறான்’ என்று துரோணர் சொல்வதுண்டு. ‘அசைவற்ற உடல் காலத்தை அசைவற்றதாக்குகிறது. அசைவற்ற உடலை அசைக்க உள்ளம் கொள்ளும் முயற்சியை வென்றால் அதுவும் அசைவிழந்து உடல்மேல் படிவதைக் காணலாம். கற்சிலைமேல் படியும் ஆடை போல. பின்னர் வெறும் வண்ணப்பூச்சாக ஆகிவிடுகிறது. உள்ளத்தை வெல்ல உள்ளத்தால் முயல்பவன் யோகி. அவர்களின் வழிகள் பல.”
― வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம்
― வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம்
