மானுடம் வெல்லும் Quotes
மானுடம் வெல்லும்
by
பிரபஞ்சன்77 ratings, 4.06 average rating, 10 reviews
மானுடம் வெல்லும் Quotes
Showing 1-3 of 3
“அத்தர்! நேரம் நள்ளிரவைத் தாண்டி வெகு நேரமாகி விட்டது. கோட்டை மதிலின் மேல் அமர்ந்து, தீவட்டி வெளிச்சத்தில் இந்தக் கடுதாசியை நான் எழுதுகிறேன். என் வெகு அருகில், என் நிழல் மாதிரி, மரணம் சம்மணம் போட்டுக் குந்தியிருக்கிறது. மரணத்தை ஏற்கனவே தழுவிக் கொண்ட சவார்(வீரர்)கள் - அவர்கள் சொர்க்கத்தில் அமைதி பெறட்டும் - காயங்களில் வலியால் மரணத்தை கூவி அழைக்கின்ற சவார்கள் - அவர்களுக்கு சீக்கிரமே இறைவன் அமைதியை அருளட்டும் - ஆகிய நோக்காடுகளுக்கு மத்தியில் இருந்து இதை எழுதுகிறேன். மனித தசைகளுக்கு வல்லூறுகள் இந்த அர்த்த ராத்திரியிலும் சுற்றி அலைவதை நான் பார்க்கிறேன். நியாயம்தானே! மனிதர்கள் தம் நிலையிலிருந்து இழிந்து போன பின் நாயும் நரியும் கழுகும் காக்கையும் அவர்களின் சதையை பிய்த்துத் தின்ன வேண்டியதுதானே! யுத்தம் என்பதே மனித நிலை தாழ்ந்த பிறகு ஏற்படுகின்ற தொற்றுநோய்தானே?”
― மானுடம் வெல்லும்
― மானுடம் வெல்லும்
“வேளாண்மை ஒரு போகம், சுத்தமாக அழிந்தே போச்சு. செஞ்சி ஆத்துப் படுகையில் சித்திரக்காலி, வாலான், சிறை மீட்டான், மணல்வாரி, செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச் சம்பா, முத்து விளங்கி, மலை முண்டன், பொற்பாளை, நெடுமூக்கன், அரிக்கிராவி, மூங்கில் சம்பா, கத்தூரிவாணன், காடைக்கமுத்தன், இரங்கல் மீண்டான், கல்லுண்டை, பூம்பாளை, பாற்கடுக்கன், வெள்ளை புத்தன், கருங்குறுவை, புனுகுச் சம்பா போல பல மாதிரி நெற்பயிர்களை இந்நேரம் நாற்று விட்டிருக்கணும். எல்லாம் போச்சு. ஜனங்க திரும்ப அவங்க அவங்க ஊருக்குப் போனா, எப்படி ஜீவிக்கும்? எதைத் தின்னும்? சோத்துக்குக் கஷ்டம் வந்துடும். ஏழைப்பட்ட ஜனம், பஞ்சம் பொழைக்க நாடு நகரம்னு நகரும்!”
― மானுடம் வெல்லும்
― மானுடம் வெல்லும்
“கற்றது கைமண்ணளவு. மாடுகள் அந்தக் காலத்தில் என்ன சிரேஷ்டமாக இருந்தன. எங்கள் தாத்தா காலத்தில், எத்தனை வகை மாடுகள்? குடைக் கொம்பன், செம்மறையன், குத்துக் குளம்பன், மோழை, குடைச் செவியான், குற்றாலன், கூடு கொம்பன், மடப்புல்லை, கரும் போரான், மயிலை, சுழற்சிக் கண்ணன், மட்டைக் கொம்பன், கருப்பன், படைப்புப் பிடுங்கி, கொட்டைப் பாக்கன், கரு மறையன், பசுக் காத்தான், அணில்காலான், படலைக்கொம்பன், பூண்டுப்பூ நிறத்தான், வெள்ளைக்காரன் என்று எத்தனையோ வகை இருந்ததே. என் காலத்தில் எல்லாம் மறைஞ்சு போச்சு..”
― மானுடம் வெல்லும்
― மானுடம் வெல்லும்
