நினைவுப் பாதை Quotes

Rate this book
Clear rating
நினைவுப் பாதை (Ninaivu Pathai) நினைவுப் பாதை by நகுலன்
32 ratings, 4.06 average rating, 3 reviews
நினைவுப் பாதை Quotes Showing 1-6 of 6
“எங்கு போனாலும் இங்கு தான் வருகின்றேன். ‘நவீனன்’ என்கின்றேன்; ‘நகுலன்’ என்கின்றேன். ஆனால், நான் யார் யாரைச் சந்திக்கின்றேனோ நான் அவர் அவர் ஆகின்றேன் - ராமநாதன், சச்சிதானந்தம் பிள்ளை, சாரதி, கேசவமாதவன், சுசீலா இன்னும் இப்படியாக இப்படியாக. அதனால்தான் இக்கணம் பச்சைப் புழு, மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி.”
நகுலன், நினைவுப் பாதை
“ஆனால் அவள் பெயர் சுசீலா இல்லை! பெயருக்கும் அது சுட்டப்படுவதற்கும் என்றுமே ஒரு பொருத்தம் இருப்பதில்லை. நமது சௌகரியத்திற்கு, இனம் பிரித்து அறிந்து கொள்வதற்கு, பெயர்களைச் சங்கேதமாக உபயோகப்படுத்துகிறோம் அவ்வளவுதான்.”
நகுலன், நினைவுப் பாதை
“சாதாரணம், சாதாரணம் என்று எதையுமே ஒதுக்கி விடப் பார்க்கின்றோம். ஆனால், சாதாரணம் என்று இப்படி நாம் ஒதுக்கி வைப்பதெல்லாம் கடைசியில் அசாதாரணத்தில்தான் கொண்டு விடுகிறது.”
நகுலன், நினைவுப் பாதை
“எந்தக் கலைஞனும் தன் வெற்றிகரமான சிருஷ்டியை வெறுக்கிறான்.”

“ஏன்?”

“தான் அதற்கு ஜவாப்தாரி இல்லை என்பதை அறிந்தும் அது அவனைவிடப் போற்றப்படும்பொழுது அவனுக்குப் பல பிரச்சினைகள்.”
நகுலன், நினைவுப் பாதை
“எறும்புப் புற்றுக்கு அரிசி போட்டுக்கொண்டிருக்கும் மனிதன், எறும்பு கடித்தால் ஏன் முகஞ்சுளிக்க வேண்டும்?”
நகுலன், நினைவுப் பாதை
“மரம் வளர்த்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது பத்தாம் பசலிக் கொள்கையாக இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் அடிப்படையும் நம்பிக்கைதானே?”
நகுலன், நினைவுப் பாதை