விட்டுவிடு கருப்பா Quotes
விட்டுவிடு கருப்பா
by
Indra Soundar Rajan320 ratings, 4.14 average rating, 27 reviews
விட்டுவிடு கருப்பா Quotes
Showing 1-2 of 2
“அதிலும் நள்ளிரவில்…! அண்ணாந்தால் வானத்தில் நிலா வட்டம்! மாசமோ ஐப்பசி, காலமோ அர்த்தஜாமத்தைத் தொடப்போகும் பன்னிரண்டை நெருங்கும் நிமிடப் போது…இந்த வேளையில் இந்த மணியின் சப்தமா? வீட்டுத் தாழ்வாரம், வாசற்புறத்து கிட்டித் திண்ணை, களத்துமேடு என்று கட்டிலில் புரண்டு கொண்டிருக்கும் தோட்டக்கார மங்கலத்து பெருசுகள் எல்லாம் தூக்கம் கலைந்து நிமிர்ந்து அமர்ந்து மணிச்சப்தம் கேட்டு விதிர்க்கத் தொடங்குகின்றனர்! பட்டி மாடுகள், அடைப்புக் கோழிகள்கூட விடைத்துப் போய் சற்றே சிலிர்க்க, மச்சக்காரன் தெருவில் பால் குடிக்க அழுத ஒரு தூளிக் குழந்தைகூட ஆத்தாளின் முலைக்காம்பை உதட்டால் ஒதுக்கிவிட்டு, அந்த சப்தம் கேட்டு, தன் குட்டி மணிவிழியில் மிரட்சியைத் தூக்கிக் காட்டுகிறது… "ஆரது இந்த ராத்ரியில மணி அடிச்சிகிட்டு…?" "என்னா தெகிரியம்--கருப்பு கோயில் மணிய இந்த ராத்ரில இந்த அடி அடிக்க…?”
― விட்டு விடு கருப்பா!
― விட்டு விடு கருப்பா!
“அழுவாத தம்பி… அழுவறதால போன உசுரு திரும்பிடவா போவுது? நாங்கள்ளாம் இருக்கோம்ல— எழுந்திரி--இனி ஆக வேண்டியத பார்ப்போம். கருப்பு வாள் பட்டா கணத்துல மோட்சம்பாங்க. எழுந்திரி… நல்ல காரியம பண்ணித்தானே செத்திருக்காரு வாத்தியார் வரதராஜன்!”
― விட்டு விடு கருப்பா!
― விட்டு விடு கருப்பா!
