ஆதலினால் [Aadhalinaal] Quotes
ஆதலினால் [Aadhalinaal]
by
S. Ramakrishnan75 ratings, 4.20 average rating, 8 reviews
ஆதலினால் [Aadhalinaal] Quotes
Showing 1-10 of 10
“உலகம் எண்ணிக்கையற்ற கதவுகள் கொண்டது.”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
“யானையைப் பார்த்து வியப்படைவர்களில் ஒருவர் கூட எறும்பைப் பார்த்து வியப்படைவது கிடையாது. ஆனால் யானை எந்த அளவு வியப்பானதோ அதே அளவு எறும்பும் வியப்பானதே!”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
“விதையைத் துப்பி எறிவது மிகச் சுலபம். ஆனால் விதையிலிருந்து ஒரு விருட்சத்தை உண்டாக்கிக் காட்டுவது மிகப்பெரிய செயல் என்று சொல்வான்.”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
“இப்படி ஒவ்வொரு நாளும் நம் வாழ்வோடு நூற்றுக் கணக்கானவர்களின் வாழ்வு பின்னப்பட்டிருக்கிறது.அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு மனிதருக்குக் கூட நன்றி சொல்வதில்லை.”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
“உலகில் மாறாத இயக்கங்களில் ஒன்று எறும்பின் அலைச்சல்.”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
“நம்மை இந்தப் பிரபஞ்சத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஏதோ ஒரு மருத்துவச்சியோ அல்லது பெண் மருத்துவரோதான். நம் உடலில் அவரது விரல்களின் ஸ்பரிசம் கண்ணுக்குத் தெரியாமல் படிந்திருக்கிறது.”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
“படகில் பயணம் செய்கின்றவர்களில் ஒருவர்கூட அதைச் செய்த மரத் தச்சனை நினைப்பதில்லை. இது, நாம் மேற்கொள்ள வேண்டிய கவனம்.”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
“மனிதர்கள் இயற்கையைப் புரிந்துகொள்ள தவறியதோடு இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தவறியிருக்கிறார்கள்.”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
“ஒரு விதையைக் காணும்போது அதனுள் ஒடுங்கியுள்ள விருட்சம் நம் கண்ணில் தெரிவதில்லை.”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
“செல்ல முடிந்ததைப் போல பல மடங்கு எடையைத்தான் எப்போதும் இழுத்துக் கொண்டு போகின்றன. அது பேராசையல்ல. மாறாக உழைப்பின் மீதான பெரிய நம்பிக்கை. தன்னால் செய்ய இயலும் என்ற உத்வேகம்.”
― ஆதலினால் [Aadhalinaal]
― ஆதலினால் [Aadhalinaal]
