Chikaveera Rajendra Quotes
Chikaveera Rajendra
by
Masti Venkatesha Iyengar112 ratings, 4.35 average rating, 24 reviews
Chikaveera Rajendra Quotes
Showing 1-3 of 3
“அரண்மனைகளில் எப்போதும் அபின் முதலானவை இருக்கும். அரண்மனை வாழ்வில் ஆகாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவே விஷமும் முக்கியமானது. பதம் தவறிய வாழ்க்கைக்கு ஆகாரத்தைவிட விஷமே விருப்பமான வஸ்து, ஆகாரம் தராத விடுதலையை தரக்கூடியது.”
― Chikaveera Rajendra
― Chikaveera Rajendra
“சிறு குழந்தை ஒன்றை ஒரு நாய் துரத்தும் பொழுது அது பயப்படுவதைப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு சந்தோஷம். பெண்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் மத்தியில் ஒரு பாம்பை தூக்கி எறிந்து அவர்கள் பயந்து அலறுவதைக் கேட்பதில் ஒரு ஆனந்தம். தோட்டத்திலிருந்து ஊருக்குள் வருபவர்களுக்கு எதிராக முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு போய் பிசாசுபோல் கத்தி அவர்கள் பயந்து ஓடுவதைப் பார்ப்பதில் ஒரு குதூகலம்.”
― Chikaveera Rajendra
― Chikaveera Rajendra
“லிங்கராஜன் இதுவரை குழந்தைகளைக் கவனிக்காமலிருந்தது அவர்களின் மீது பிரியம் இல்லாததால் அல்ல. சீட்டாட்டத்தில் அமர்ந்தவர்கள் அம்மா இறந்த செய்தி வந்தாலும் எழுந்திருக்கமாட்டார்கள். சிம்மாசனத்தைக் கைப்பற்ற முயலும் வியவகார விளையாட்டு, சீட்டாட்டத்தைவிட அதிகமாக மெய்மறக்கச் செய்யும் விளையாட்டு. சீட்டாட்டத்தில் பணம் தான் போகும். இந்த விளையாட்டில் உயிரே போய்விடும். சிறிது கவனம் பிசகினாலும் வம்சமே நிர்மூலமாகிவிடும்; மற்றவர்களுக்குத் தான் செய்ய நினைத்திருந்த கேட்டை தனக்கே மற்றவர்கள் செய்து விடுவார்கள்.”
― Chikaveera Rajendra
― Chikaveera Rajendra
