மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India] Quotes

Rate this book
Clear rating
மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India] மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India] by S. Ramakrishnan
287 ratings, 4.18 average rating, 32 reviews
மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India] Quotes Showing 1-4 of 4
“பங்காளதேஷ் உருவாவதற்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் விஷயத்தில் மட்டும் கைகட்டி மௌனம் சாதிப்பதுதான் கவலைக்குரியது.”
s.ramakrishnan, Maraikkappatta India
“ஆகஸ்ட் 15-ம் தேதி அஷ்டமி என்பதால் அன்று சுதந்திரம் பெறக்கூடாது. ஆகஸ்ட் 17-ம் தேதி சுதந்திரம் பெற வேண்டும் என்று ஜோதிடர்கள், நேருவைச் சந்தித்து வலியுறுத்தினர். தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று நேரு மறுத்துவிட்டார். ஆனாலும், கடைசி வரை அஷ்டமி அன்று சுதந்திரம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து இருக்கின்றன.”
s.ramakrishnan, Maraikkappatta India
“மண்புழுக்கள்கூட தன் உடலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓர் இடம்விட்டு மற்றோர் இடம் ஊர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை என்று நினைக்கிறார்கள்.”
s.ramakrishnan, Maraikkappatta India
“1934-ல் பீகாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தைப் பற்றி குறிப்பிட்ட காந்தி, “அது, மக்களின் பாவத்துக்கு கடவுள் அளித்த தண்டனை” என்று கூறியதைப் பகிரங்கமாகக் கண்டித்த தாகூர், மகாத்மா பட்டத்துக்கு காந்தி தகுதியானவர் அல்ல, அதைத் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.”
s.ramakrishnan, Maraikkappatta India