அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam] Quotes

Rate this book
Clear rating
அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam] அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam] by தொ. பரமசிவன்
604 ratings, 4.41 average rating, 81 reviews
அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam] Quotes Showing 1-2 of 2
“தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப்பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது. பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் மிகவிரைவாக வீட்டைச் சுத்தம் செய்து இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன் தைப்பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம். பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) பார்ப்பனர்களாலும், பெருங் கோயில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு வகைகள் என்பது குறிப்பிடத் தகுந்தது. மேற்குறித்த இரண்டு செய்திகளாலும் தைப் பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும் அது பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என் பதனையும் உணர்ந்துகொள்ளலாம்.”
Tho. Paramasivan, Ariyappadatha Tamizhagam (Essays on Tamil Culture)
“அவதானிப்புகள்”
தொ. பரமசிவன் [Tho.Paramasivan], Ariyappadatha Tamizhagam (Essays on Tamil Culture)