Waiting For A Visa Quotes

Rate this book
Clear rating
Waiting For A Visa: Autobiographical notes Waiting For A Visa: Autobiographical notes by B.R. Ambedkar
1,233 ratings, 4.59 average rating, 138 reviews
Open Preview
Waiting For A Visa Quotes Showing 1-13 of 13
“தீண்டத்தகாதவர்கள் பொதுக்குளத்திலுள்ள தண்ணீரை உபயோகிக்கக்கூடாது என்ற பொருளில் ஒவ்வொருவரும் அவரவருடைய மத ஆசாரங்களைப் பின்பற்ற வேண்டுமென்று, கூட்டத்திலிருந்த ஒரு முஸ்லீம் இளைஞர் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார். நான் பொறுமையை இழந்து ஒருவித கோபமான குரலில் கேட்டேன் : "இதைத்தான் உங்கள் மதம் போதிக்கிறதா? முகமதியனாக மாறினால் ஒரு தீண்டத்தகாதவனை இந்தக் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்று தடுப்பீர்களா?" இந்த நேரடியான கேள்விகள் அந்த முகமதியர்களிடம் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு பதிலும் கூறாது மௌனமாக நின்று கொண்டிருந்தனர்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது ஓர் இந்து டோங்காவாலா, ஒரு கடைநிலை வேலைக்காரனைப் போன்ற நிலையிலிருந்தாலும் தான் மற்ற எல்லா தீண்டத்தகாதவர்களையும் விட ஏன் பாரிஸ்டரையும் விடக்கூட உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்டவன் என்பதைத் தெரிந்து கொண்டேன்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“ஒரு டஜன் பார்சிகள் அச்சுறுத்தும் விதத்தில் கையில் கம்புடன் என் முன்னே வரிசையாக நிற்க, மன்னிப்புக் கேட்டு பீதி நிறைந்த பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்ற காட்சி 18 ஆண்டுகள் கடந்த பின்பும் சிறிதும் மங்கவில்லை. அதைத் தெளிவாக என் மனக்கண் முன் கொண்டு வரமுடியும். ஆனால் கண்ணில் கண்ணீர் இல்லாமல் மட்டும் அதை நினைவுகூர முடியாது. இந்துவுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக் காரர்களுக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்பொழுது தான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“என்னுடைய நிலைமை பரிதாபப்படும்படி இருந்தாலும் யாரும் என்னைக் கண்டு பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“இருட்டுக் கொட்டடியில் இருப்பதை உணர்ந்த நான் பேசுவதற்கு யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கினேன். மனித உறவுகள் இல்லாத நிலையில் எனக்குத் துணையெல்லாம் புத்தகங்கள்தான். படித்துக் கொண்டே இருந்தேன். புத்தகத்தில் மூழ்கி எனது தனிமை நிலையை மறந்தேன்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“அங்கே விஷிஸ் என்ற இந்து ஓட்டல்கள் இருப்பது எனக்குத் தெரியும். அவர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள். ஆள்மாறாட்டம் செய்வதே அங்கு தங்கும் இடவசதி பெற உள்ள ஒரே வழியாகத் தெரிந்தது. அதற்கு நான் தயாரில்லை. ஏனெனில் என்னைக் கண்டுபிடித்துவிட்டால் அதனால் ஏற்படும் பயங்கர விளைவுகளை நான் அறிவேன்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“வீட்டில் என் சகோதரிகள்தான் துணிகளை துவைத்துச் சலவை செய்து வந்தனர். சதாராவில் சலவைத் தொழிலாளர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. சலவையாளர்களுக்குப் பணம் கொடுக்க சக்தியற்றவர்களும் அல்ல நாங்கள். ஆனால் நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதால்தான் என் சகோதரிகள் துணிகளைச் சலவை செய்ய வேண்டிய நிலை இருந்தது, எந்த ஒரு சலவையாளரும் தீண்டத்தகாதவர்களின் துணியைச் சலவை செய்ய முன்வரமாட்டார். என் மூத்த சகோதரிதான் எங்களுக்கு முடிவெட்டவும், சவரம் செய்யவும் செய்தார். எங்களுக்கு முடி வெட்டுவதன் மூலம் அவர் ஒரு கைதேர்ந்த முடிதிருத்துபவர் ஆகிவிட்டார். முடிதிருத்தும் தொழிலாளிகள் சதாராவில் இருக்கத்தான் செய்தனர், அவர்களுக்கு கொடுக்கப் பணமும் எங்களிடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அந்த முடிதிருத்துபவர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு முடிதிருத்த சம்மதிக்க மாட்டார்கள்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“தீண்டத்தக்கவர்களின் குழந்தைகள் பள்ளியில் இருக்கும் போது தாகம் ஏற்பட்டால் தண்ணீர் குழாய்க்குச் சென்று குழாயைத் திறந்து தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ள முடியும். இதற்கு வேண்டியதெல்லாம் ஆசிரியருடைய அனுமதி மட்டுந்தான். ஆனால் என்னுடைய நிலைமை மாறானது. யாராவது தீண்டத்தக்கவர்கள் குழாயைத் திறக்காவிட்டால் நான் குழாயைத் தொடமுடியாது, எனது தாகத்தைத் தணித்துக் கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் ஆசிரியரின் அனுமதி மட்டும் போதாது. பள்ளிக்கூடப் பணியாளும் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதிரி வேலைகளுக்கு அவனைத்தான் ஆசிரியர் பயன்படுத்தி வந்தார். பணியாள் எங்கேயாவது சென்றிருந்தால் எனக்குத் தண்ணீர் கிடைக்காது. நிலைமையைச் சுருக்கமாக இப்படிக் கூற முடியும். பணியாள் இல்லை என்றால் தண்ணீரும் இல்லை.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“பள்ளியில் எனது வகுப்பு மாணவர்களிடையே எனது தகுதி வரிசைப்படி நான் உட்காரக்கூடாது, ஒரு மூலையில் தனியாகத் தான் உட்கார வேண்டும். வகுப்பில் நான் உட்காருவதற்காக என்னிடம் தனியாக ஒரு சாக்குத் துணி இருக்கும். பள்ளியைச் சுத்தம் செய்யும் வேலைக்காரன் நான் உபயோகித்த சாக்குத் துணியைத் தொடமாட்டான். அந்தச் சாக்குத்துணியை மாலையில் வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டு, மறுநாள் காலையில் திரும்பவும் பள்ளிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை எங்கள் மனம் அசைப்போட்டுக் கொண்டே இருந்தது. எங்களிடம் ஏராளமாக உணவுப் பொருள்கள் இருந்தன. பசியால் வயிறு 'கபகப' என்று எரிந்து கொண்டிருந்தது. இருந்தும் உணவு உட்கொள்ளாமல் தூங்கச் செல்ல வேண்டியிருந்தது. ஏனென்றால் தண்ணீர் கிடைக்காததால் இந்த நிலைமை. நாங்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்ததால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. இதுதான் எங்கள் மனத்தில் பதிந்த கடைசிச் சிந்தனை.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“எங்களுக்குப் பசி அதிகமாக இருந்ததால் உணவு உட்கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் மீண்டும் தண்ணீர் பிரச்சினை எழுந்தது. தண்ணீர் கிடைப்பதற்குச் சாத்தியம் இருக்கிறதா என்று எங்கள் வண்டிக்காரனைக் கேட்டோம். நாங்கள் மஹர் என்ற உண்மையை இந்துவான சுங்க தண்டலரிடம் சொன்னால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது என்று வண்டிக்காரன் எங்களை எச்சரித்தான். ''முகமதியர்கள் என்று கூறுங்கள், உங்கள் அதிர்ஷ்டத்தைப் பார்க்கலாம்'' என்றான் அவன்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“அங்கே வாடகைக்குப் பல வண்டிகள் இருந்தன. நாங்கள் மஹர்கள் என்று ரயில் நிலைய அதிகாரிக்கு நான் சொன்ன பதில் வண்டிக்காரர்களைச் சென்றடைந்து விட்டது. அவர்களில் யாரும் தீட்டுப்படத் தயாராக இல்லை. அத்துடன் தீண்டத்தகாதவர்களைப் பயணிகளாக ஏற்றிச் செல்வதன் மூலம் தங்களைத் தாழ்த்திக் கொள்ளவும் விரும்பவில்லை. நாங்கள் இருமடங்கு வாடகை கொடுக்க முன்வந்தும், பணத்தால் பலன் ஒன்றும் இல்லை என்பதைக் கண்டோம்.”
B.R. Ambedkar, Waiting For A Visa: Autobiographical notes
“நாங்கள் நன்கு ஆடையணிந்த சிறுவர்களாக இருந்தோம். எங்களின் உடையிலிருந்தோ எங்களின் பேச்சிலிருந்தோ நாங்கள் தீண்டத்தகாத சிறுவர்கள் என்று யாரும் கண்டு பிடித்துவிட முடியாது.”
B.R. Ambedkar, Waiting For A Visa