வீரான்குட்டி கவிதைகள் Quotes

Rate this book
Clear rating
வீரான்குட்டி கவிதைகள் வீரான்குட்டி கவிதைகள் by Veerankutty
7 ratings, 4.57 average rating, 0 reviews
வீரான்குட்டி கவிதைகள் Quotes Showing 1-9 of 9
“நீ எங்கே என்று கேட்டதும்
நாலாதிசைகளிலும் விரல்நீட்டி
என்னைச் சுற்றலில் விட்டது
மரம்

உன்னைத் தேடுகிறேன் என்றறிந்ததும்
எப்போதும் முன்னால் நடக்கும் நட்சத்திரங்கள்
வெகுவாகப் பின்னால் போய்விட்டன
வழிகாட்ட வேண்டிய சுமை நீங்கி.
காற்று வளையமாய்ச் சுழற்றியது.

கடைசியில் கதறியபடி
கடற்கரை சென்றேன்
உதடு திறக்கும் முன்பே
நீ எங்கே என்று
ஆயிரம் நாக்குகள் ஒருசேர நீட்டி
திரும்பக் கேட்கிறது கடல்.”
Veerankutty, வீரான்குட்டி கவிதைகள்
“கனமேறிக் கிடக்கும் சொற்களை லேசாக்கி, அதனைப் பறக்கவிடும் அனுபவம்.”
சுஜா, வீரான்குட்டி கவிதைகள்
“உன்னைப் புதைத்த இடத்தில்
முளைத்த செடி நிறைய
எவ்வளவு பூக்கள்!
அவ்வளவு அதீத
காதல் ரகசியங்களைக் கொண்டிருந்ததா
உனது
பயணம்?
நம்பவே முடியவில்லை.”
Veerankutty, வீரான்குட்டி கவிதைகள்
“அருகருகே இருக்கும்
இரண்டு உதடுகள்
வீணாக்கிவிட்ட
முத்தங்களைப் பற்றி
கடவுள் கேட்கும்போது
நீ என்ன சொல்வாய்?
நான் என்ன சொல்வேன்?”
Veerankutty, வீரான்குட்டி கவிதைகள்
“புரியவேயில்லை
அவளுக்கு
பட்டாம்பூச்சியின்
படத்தைக் காட்டி
சித்ரசலபம் என்று
டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

முடிவில்
வருத்தத்துடன்தான் என்றாலும்
அவளும்
சித்ரசலபம் என்று
சொல்லத் தொடங்கினாள்.
பட்டாம்பூச்சி என்பது
அதனை
அதன் வீட்டில்
அழைக்கும் பெயர்
என்று
சமாதானம் செய்துகொண்டு.”
Veerankutty, வீரான்குட்டி கவிதைகள்
“காயங்கள் பட்டாலென்ன
உதடுகளுடன்
எப்போதும் வசிக்க முடிந்ததல்லவா?
புல்லாங்குழல் பாடுகிறது.”
Veerankutty, வீரான்குட்டி கவிதைகள்
“காணும் முன்பு
எத்தனை பெரியவராய் இருந்தோம்
பரஸ்பரம் நாம்!
கண்டுகழித்ததும் சிறிதானோம்
பேசத் தொடங்கியபோது அற்பமானோம்
இனி ஒன்றாக நடக்கத் தொடங்கினால்
குறைந்து குறைந்து
இருக்கிறோம் என்றே
சொல்ல முடியாத அளவுக்கு
முழுதுமாய்த் தீர்ந்துவிடுவோமோ
நாம் ஒருவருக்கு ஒருவர்?

கடவுள் காணக் கிடைக்காதது
சாலவும் நன்றல்லவா?”
Veerankutty, வீரான்குட்டி கவிதைகள்
“சொல்
இரண்டுபேர் காதலிக்கத் தொடங்கும்போது
அவர்களை மட்டுமாக்கி
சுற்றியுள்ள உலகம்
சட்டென்று எங்கே
போய்த் தொலைகிறது?”
Veerankutty, வீரான்குட்டி கவிதைகள்
“கல்லிடம் கேள்
எவ்வளவு காத்திருந்து
ரத்தினமாகியதென்று
நீர்த்துளியிடம் விசாரி
எத்தனை காலக் காத்திருப்பு
முத்தாவதற்கென்று
உதடுகள் இருந்திருந்தால்
அவை சொல்லியிருக்கும்
‘அன்புடன் ஒரு கை தொடுவதற்கு
எடுத்துக்கொள்ளும் நேரம்’ என்று.”
Veerankutty, வீரான்குட்டி கவிதைகள்