Savaging the Civilized Quotes
Savaging the Civilized: Verrier Elwin, His Tribals, and India
by
Ramachandra Guha121 ratings, 4.22 average rating, 19 reviews
Savaging the Civilized Quotes
Showing 1-5 of 5
“உண்மையிலேயே பின் தங்கியவர்கள் யார்? எளிமையாக, உண்மையாக, நேர்மையாக மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களா அல்லது செல்வம், ஆதிக்கம் என்று பைத்தியம் பிடித்து, போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நவநாகரிக முன்னேற்றத்தின் பிரதிநிதிகளா? இவர்களின் சாதனைக்கு அடையாளம்தானே ஹைட்ரஜன் குண்டு.”
― Savaging the Civilized: Verrier Elwin, His Tribals, and India

“ரோட்டரி கிளப்பில், எல்வின் பேசினார்
"இந்தியாவில் வறுமை நமக்குப் பழக்கப்பட்டுவிட்டது. அதனாலேயே அது என்னவென்று நாம் மறந்து போகிறோம். ஒருநாள் நடந்த நிகழச்சியை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு குடும்பம் கண்ணீருடன் எங்களிடம் வந்தது. அவர்களுடைய குடிசை தீயில் எரிந்துவிட்டது. அவர்களிடமிருந்த எல்லாப் பொருட்களும் தீக்கிரையாகிவிட்டன. மீண்டும் அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப எவ்வளவு பணம் தேவை என்று கேட்டேன். 'நான்கு ரூபாய்கள்' என்று சொன்னார்கள். 'ப்ரேவ் நியு வேர்ல்ட்' நாவலின் ஒரு பிரதியின் விலை நான்கு ரூபாய்.
அதுதான் வறுமை.
ஒரு தடவை, பஸ்தார் மாநிலத்தில், மரண தண்டணை விதிக்கப்பட்ட ஒரு மரியாவிடம், அவனைத் தூக்கிலிடும் முன்னால் "உன் கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார்கள். நகரத்துப் பாணியில் செய்யப்பட்ட சில சப்பாத்திகளும், மீன் குழம்பும் வேண்டும் என்று கேட்டான். அவனுக்கு அதைக் கொடுத்தார்கள், அதில் பாதியை அவன் மிகவும் அனுபவித்துச் சாப்பிட்டான். மீதம் உள்ளதை ஒரு இலையில் சுருட்டி, ஜெயிலரிடம் கொடுத்து, "எனது மகன் சிறைக் கதவுக்கு அந்தப்புறம் காத்திருக்கிறான், அவன் இதுநாள்வரை இப்படிச் சுவையான உணவைச் சாப்பிட்டதில்லை. அவன் இப்போதாவது இதைச் சாப்பிடட்டும்" என்று சொன்னான்.
அதுதான் வறுமை.
உங்கள் சின்னக் குழந்தைகளை அழகின் வடிவமாக இருக்கும் வயதில் சாகக் கொடுப்பது வறுமை. உங்கள் மனைவி சீக்கிரம் கிழவியாகிப் போவதையும், வாழ்க்கையின் பாரம் தாங்காமல் உங்கள் அம்மாவின் முதுகில் கூன் விழுவதைக் காண்பதும்தான் வறுமை. அகங்காரம் பிடித்த அதிகாரியின் முன்னால் பாதுகாப்பின்றி நிற்பது, சுரண்டல்காரர்கள், ஏய்ப்பவர்கள் முன்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் நிற்பது, அதுதான் வறுமை. நீதிமன்றத்தின் வாசலில் பலமணிநேரம் காத்திருந்தும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுவது, அதிகார வர்க்கம் செவிடாக, பெரியவர்களும் வசதி படைத்தவர்களும் குருடாக இருப்பதைக் காண்பது, அதுதான் வறுமை.
எப்போதாவது கிடைக்கும் தீயில் சுட்ட எலிக்காகக் குழந்தைகள் சண்டையிடுவதைப் பார்த்திருக்கிறேன். வயதான பெண்கள், விசிறிப் பனைமரத்தின் தண்டுப் பாகத்தை, களைப்புடன் இடித்து மாவாக்குவதைப் பார்த்திருக்கிறேன். ஆண்கள் மரங்களின் மீது ஏறி, செவ்வெறும்புகளைப் பிடித்து, மிளகாய்க்குப் பதிலாக உண்பதைக் கவனித்திருக்கிறேன்.
பட்டினி, அவநம்பிக்கை, சொந்தங்களை இழப்பது, எதுவும் பயனில்லை என்று உணர்வது. அதுதான் வறுமை. அது ஒன்றும் அழகானதில்லை.”

“பஸ்தாரில் ஒரு பழங்குடி மனிதன் அவரிடம் சொன்னான்: "மோட்டார் கார்களோ, தார்ச்சாலைகளோ இல்லாத காலத்தில், முரியா மக்கள் நேர்மையாக, உண்மையாக, நல்லவர்களாக இருந்தார்கள்.”
― Savaging the Civilized: Verrier Elwin, His Tribals, and India
― Savaging the Civilized: Verrier Elwin, His Tribals, and India
“எல்வின் புனேவில் காந்தியைப் பார்க்கச் சென்றார். பழைய பேஷ்வாக்களின் நகரத்தை, காந்தி தனது தற்காலிகத் தலைமையகம் ஆக்கி இருந்தார்; எல்வினுடைய திருமணப் பிரச்சனையை முடித்து கொஞ்சநாள் கழித்து, மிக வசதியான தொழில் அதிபருடைய ஒரு மாளிகையில் தீண்டாமைக்கு எதிராக உண்ணா நோன்பைத் துவங்கினார். எல்வின் வரும்போது உண்ணாவிரதம் முடிந்துவிட்டது. ஆனால் மாளிகையை பார்த்ததும் எல்வின் திடுக்கிட்டார். "பளிங்கு மாளிகையில் காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது, இயேசு கிறித்து சிலுவையில் அறையப்படுவதற்காக ரோல்ஸ் ராய்ஸ் காரில் போவது போல் இருக்கிறது" என்று எல்வின் பத்திரிக்கையாளர் ஃப்ராங்க் மொரேஸிடம் சொன்னார். அவர் காந்தி இருந்த மாளிகையை வெளியிலிருந்துதான் கண்டார். வீட்டின் எஜமானி தாக்கர்செ ஒரு கிறித்தவரை வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. அவர் சர்வண்ட்ஸ் ஆப் இந்தியா சொசைடிக்குச் சென்றார். அங்கே அவரைப் போன்ற தீண்டத்தகாதவர்கள் எப்போதும் வரவேற்கப்பட்டார்கள். அங்கே அவர் சரோஜினி நாயுடுவைச் சந்தித்தார். தாழ்த்தப்பட்ட இந்துக்களும் பளிங்கு மாளிகையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எங்களை அனுமதித்தாலும்கூட நாங்கள் உபயோகித்த மண் பாத்திரங்களை எல்லாம் எஜமானி உடைத்து நொறுக்கிவிடுவார். நாங்கள் போன பிறகு தனியாக தீட்டுக் கழிக்கும் சடங்குகள் செய்வார் என்று சரோஜினி நாயுடு சொன்னார்.
இந்த சம்பவம் பற்றிச் சொல்லும்போது எல்வின் "நான் என் வாழ்வின் இறுதிவரை பாபுவிடம் விசுவாசமாக இருப்பேன். ஆனால் அவருடைய தொண்டர்கள் சிலர் விசுவாசமாக இருப்பதைக் கடினமாக்குகிறார்கள்.”
― Savaging the Civilized: Verrier Elwin, His Tribals, and India
இந்த சம்பவம் பற்றிச் சொல்லும்போது எல்வின் "நான் என் வாழ்வின் இறுதிவரை பாபுவிடம் விசுவாசமாக இருப்பேன். ஆனால் அவருடைய தொண்டர்கள் சிலர் விசுவாசமாக இருப்பதைக் கடினமாக்குகிறார்கள்.”
― Savaging the Civilized: Verrier Elwin, His Tribals, and India
“பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குள் வேறுபாடு காட்டமாட்டார்கள். அதுபோலவே எந்த நூலாசிரியனும் தனது நூல்களில் வேறுபாடு காட்டமாட்டான். இரண்டு குழந்தைகளைப் பெற்ற நானும் நடுநிலை வகிக்கிறேன் என்றே நம்புகிறேன். ஆனால் ஒரு நூலாசிரியனாக நடுநிலை வகிக்கவில்லை. 'வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்' என் நூல்களில் இன்றும் நான் விரும்புகிற நூல். என்றும் அப்படியே இருக்கும்.”