நளபாகம் Quotes
நளபாகம்
by
Thi. Janakiraman138 ratings, 4.12 average rating, 23 reviews
நளபாகம் Quotes
Showing 1-3 of 3
“அதாவது நாம எல்லோருமே நம்பிக்கிட்டும் இருக்கிறோம். நம்பாமயும் இருக்கிறோம். சாமியில்லேன்னு ஒரு நம்பிக்கை. சாமியிருக்குமோன்னும் ஒரு சந்தேகம். சாமின்னு சொல்லுங்கோ - இல்லாட்டி, நீங்க சொன்னீங்களே சித்தே முன்னே காரணம்னு - அது இருக்குமோன்னு சந்தேகம். இருக்கும்னும் ஒரு நினைப்பு. அந்த மாதிரியே சாமிக்கும் நமக்கும் நடுவிலே இருக்கறவங்க வேண்டாம்னு ஒரு நினைப்பு ஒருபோது. இருக்கட்டுமே, இருந்தா நல்லதுதானேன்னு ஒருபோது நினைப்பு. மனுஷங்களே அதாவது கூட இருக்கிறவங்களே அவங்க அறிவாலெ பரிவாலெ நம்ம பிரச்சனைகளைத் தீர்த்துடுவாங்கன்னு ஒருபோது நினைப்பு. அவங்களாலே முடியாதோன்னு ஒரு சந்தேகம் ஒருபோது. இப்படி மாறி மாறி ஊஞ்சலாடறதுதான் நம்ம விவகாரம்லாம். கூட்டத்திலெ பேசறதுதான் கடைசி முடிவுன்னு எல்லாரும் நினைக்கிறாங்க.
நீங்க கூட என்னைப் பத்தி அப்படி நினைச்சிட்டு இருக்கீங்க. ஆனா என்னைக் கேட்டா அப்படியும் இப்படியுமா ஊஞ்சலாடிக்கிட்டே இருக்கறதுதான் நிசம், நடப்பு, முடியற காரியம்னு படுது. புகையிலெ ரொம்ப கெடுதல்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. நேத்திக்கி ஒரு ஆராய்ச்சிக்காரன் எழுதியிருக்கான். அதுலெ புரதம் எல்லாம் இருக்கு - அப்படி ஒண்ணும் கெடுதல் இல்லேன்னு. புகையிலைக்கே ஒரு மனசு இருந்து, சில சமயம் நல்லது பண்ணுவோம், சிலசமயம் கெடுதல் பண்ணுவோம்னு தோணுதோ என்னமோ... இப்ப உங்ககிட்ட குங்குமம் வாங்கிட்டுப் போனா நல்லதுன்னா என் தம்பி நினைக்கிறான். எங்க தாயாரும் நினைக்கிறாங்க. அவங்க திருப்தியாகவே இருக்கட்டும். அண்ணா என்னோட வாதாடிக்கிட்டிருக்கிறீங்க? நான் நாளைக்கு இந்தக் குங்குமத்திலே நம்பறேனோ இல்லியோ-இன்னிக்கி நம்பறேன்-“ என்று சிரித்தான் இளங்கண்ணன்.”
― நளபாகம்

“காமேச்வரன் சொன்னான். “அவனவன் இருப்புக்கு
அவனவன்தான் பொறுப்பு. ஐயமோ, பயமோ நோக்காடோ, சாதனையோ, பேரோ, அவப்பேரோ - எல்லாத்துக்கும் அவனவன் தான் பொறுப்பு. இதுக்கெல்லாம் தொடர்பு அவனுக்கும், படைச்சவன்னு சொல்றாங்களே அதுக்கும்தான். மூணாவது ஆளு வந்து எப்படி குறுக்கிட முடியும்? மூணாவது ஆளு வரப்படாதுன்னுதானே நீங்ககூட வேற மாதிரியா சொல்லிட்டு வறீங்க. ஏன் இப்படி திடீர்னு போய் இந்த குங்குமத்துக்கு வந்திட்டீங்க... உங்களுக்கே உங்க பேச்சிலெ நம்பிக்கை இல்லியா? நீங்களா யோசிச்சு சொல்லலியா - யாராவது சொன்னதைத்தான் - திருப்பிச் சொன்னீங்களா!" சொல்லிக்கொண்டே காமேச்வரன் லேசாக நகைத்தான்.”

“அன்னி அன்னி சாப்பாட்டுக்குத் தாளம் போடறவன் தான் ப்ராமணன். அவனுக்கு எப்படி நாப்பது வேலி, நானூறு வேலின்னு சொத்து வரும்? ஆள்றேன், காப்பாத்தறேன்னு சில ஜாதிகள் சொல்லிண்டிருக்கே. அதுகளோட சேர்ந்து இவனும் கொள்ளையடிச்சிருக்கணும். இல்லே, ஆள்றவாளுக்கு மூளை கட்டையா இருந்திருக்கணும் - அதுவும் இல்லே, வட்டிக்குப் பணம் கொடுத்து அப்புறம் ஆளையே முழுங்கியிருக்கணும். இத்தனையும் பண்ணிவிட்டு யாராவது ஒரு சங்கராச்சார்யார் கிட்ட போய் நிக்கணும்... என்ன சிரிக்கிறேள்! இதெல்லாம் இவர் கிட்ட கேட்டது. எனக்கும் நியாயமாத்தான் படறது. அதான் நானும் சொல்றேன். எங்க ஓர்ப்படி சங்கராச்சார்யாரை நினைச்ச போதெல்லாம் தர்சனம் பண்ணக் கிளம்புடுவ. பட்டுப் புடவை கட்டிக்க வாண்டாம், வைரத்தோடு போட்டுக்க வாண்டாம்னு அவர் சொல்றதை மட்டும் கேக்க மாட்டா- நாமெல்லாம் வாங்காட்டா, அந்தத் தொழில் பண்றவன்கள்ளாம் கஷ்டப் படமாட்டானான்னு கேட்பள். எத்தனை கொழுப்பு, எத்தனை திமிர் இருந்தா இப்படிப் பேசச் சொல்லும்; அந்த சங்கராச்சாரியாருக்குத்தான் தைரியம் வராதோ, பட்டுப்புடவை கட்டிண்டு வந்திருக்கே, என்முன்னாலெ நிக்காதேன்னு சொல்றதுக்கு -”
― நளபாகம்
― நளபாகம்