ஒரு புளியமரத்தின் கதை Quotes
ஒரு புளியமரத்தின் கதை
by
Sundara Ramaswamy1,564 ratings, 4.05 average rating, 169 reviews
ஒரு புளியமரத்தின் கதை Quotes
Showing 1-10 of 10
“வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிகக் குறைந்த நாட்கள்தானே! வேகமாக மறைந்துவிடும் நாட்களும் அவைதானே!”
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]

“அநேகமாக எல்லோருக்குமே திருட வேண்டும் என்ற ஆசை ஒரு சமயத்தில் அல்லது மற்றொரு சமயத்தில் ஏற்பட்டாலும் பிறர் பார்வையில் செய்யக்கூடாத காரியமாகத்தான் அது இன்றும் இருந்துவருகிறது.”
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
“எந்த அமைப்பிலும் சிறு குறைகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்.”
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
“எல்லாம் ஒரு காலம். மேலே ஒருத்தன் பகடையெ உருட்டிப் போட்டுக்கிட்டே இருக்கான். யாருக்கு எப்பம் பூ விழுது எப்பம் காய் விழுதுனு ஒரு பயலாலே கண்டுக்கிட முடியாது.”
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
“ஒவ்வொன்றும் என் ஆசைப்படி எப்படி இருந்திருக்க வேண்டும் அல்லது எப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேனோ அவ்வாறே நிகழ்ந்த தாயும், இருந்ததாகவும் சொல்வதில் அப்பொழுது என் மனசு மிகுந்த திருப்தி அடைந்தது.”
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
“ஒரு கிளையை இழந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டது புளியமரம். மிகவும் நல்ல விஷயம் அது.
எதையேனும் ஒன்றை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடுவது என்பது எப்போதுமே புத்திசாலித்தனமான காரியம்தானே?
பைத்தியம் என்பதும் ஒருவன் தன் அறிவை இழந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டதன் விளைவுதானே?
இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு.
இழந்தும் பெற்றும்தான் வாழ முடியும் போலிருக்கிறது.
நெருக்கடியில், சோதனை காலத்தில், தன்னில் சிறிது இழந்து, மற்றொன்றில் சிறிது பெற்று, பெற்றதையும் தன்னில் சீரணம் செய்து கொண்டு அழிந்து போகாமல் நிலைத்துவிடும் காரியம், மதங்களுடைய காரியமாகவும் நாகரிகங்களுடைய காரியமாகவும் பாஷைகளுடைய காரியமாகவும் இருந்து வந்திருக்கிறது அல்லவா?”
― ஒரு புளியமரத்தின் கதை

“உலகில் மனிதச் சந்தை இத்தனை விரிந்து கிடப்பதும் அப்போது அதற்குத் தெரியாது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கே உரித்தான விசித்திரமான மனசுகளும் உண்டு என்பதும் அப்போது அது அறிந்திராத ஒன்று.”
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
“ஜனங்களுக்கு ஏற்படுகிற திடீர் ஆவேசத்தை விடவும் அதிகமாக இருந்தது அவர்களுடைய ஞாபக மறதி. யார் அந்த எம்.கே. காந்தி என்று அவர்கள் எந்த நிமிஷத்திலும் கேட்டுவிடலாம்”
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
“அன்றும் இன்றும் - அவர்களுடைய சொந்தச் சரக்காகவே என் மனசுக்குப் பட்டிருக்கிறது. இதேபோல் அநேக விஷயங்களில் புதுச் சரடு விடுவதற்கு ஏதாவது ஒன்று அவர்களுக்கு உதயமாகிக் கொண்டுதான் இருந்தது.”
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
― ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
“ஒரு பொறுப்புள்ள மனிதனாகவும், சீரழியும் நிலைமைகளுக்குக் கவலைப்படுபவனாகவும் காட்டிக்கொள்ள வேண்டியது எனக்கு அந்த வயசில் ஏதோ ஒருவிதத்தில் தேவையாக இருந்தது.”