டாலர் தேசம் [Dollar Dhesam] Quotes

Rate this book
Clear rating
டாலர் தேசம் [Dollar Dhesam] டாலர் தேசம் [Dollar Dhesam] by Pa Raghavan
546 ratings, 4.35 average rating, 55 reviews
டாலர் தேசம் [Dollar Dhesam] Quotes Showing 1-7 of 7
“அமெரிக்கப் பண்ணைகளின் விளைச்சலுக்கு அடிமைகளின் வியர்வை மட்டுமல்ல; ரத்தமும் உரமாகியிருக்கிறது. ரத்தம் சொட்டச்சொட்ட வேலை பார்க்க நேர்ந்த தமது சக அடிமைகள் குறித்து டக்ளஸ் விவரிக்கும் இடங்கள் எப்பேற்பட்டக் கல் மனத்தையும் உடைத்து சுக்குநூறாக்கிவிடக்கூடியது.”
Pa Raghavan, Dollar Desam
“ஆரம்பக் காலத்தில் அவர்கள் கஷ்டத்தால் விரக்தியடைந்திருந்தார்கள். இப்போது காட்சிப் பொருளாகி விரக்தியடைந்திருக்கிறார்கள். ஆயிரம் சொன்னாலும் இதுதான் அமெரிக்காவின் மிக முக்கியமான அவமானச் சின்னம்”
Pa Raghavan, Dollar Desam
“நவீன அமெரிக்காவை உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவரான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் இப்படிச் சொன்னார்: ‘பிரிட்டிஷ்காரர்கள், மன்னரின் ரசிகராக இருக்கிறார்கள். அமெரிக்கர்களோ அதிபரின் சக ஊழியர்களாக இருக்கிறார்கள்.”
Pa Raghavan, Dollar Desam
“இங்கிலாந்திடம் வலிமை இருந்தது என்றால், அமெரிக்க வீரர்களிடம் தேசப்பற்றும் விடாமுயற்சியும் இருந்தது.”
Pa Raghavan, Dollar Desam
“சரித்திரம் என்பது விஞ்ஞானமோ, கணிதமோ இல்லை. இதில் தீர்வுகள் சாத்தியமில்லை. உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்டுவதே ஒரு நேர்மையான சரித்திர நூலின் ஆகப்பெரிய நோக்கமாக இருக்கமுடியும்”
Pa Raghavan, Dollar Desam
“ஒவ்வொரு தேசத்தின் சரித்திரத்திலும் கோடிக்கணக்கான வலிகள் மிகுந்திருக்கின்றன. போராட்டங்களில் பல நூறு வருஷங்களை மக்கள் கழித்திருக்கிறார்கள். சோறுக்கும் நீருக்கும் வேலைக்கும் - மேலான நிம்மதிக்கும் எத்தனையோ பாடுகள் பட்டிருக்கிறார்கள். இதனிடையே சூழ்ச்சிகளும் அரசியல் காய் நகர்த்தல்களும் யுத்த முஸ்தீபுகளும் ஒரு பக்கம். மண்ணாசைதான் காரணம் என்றில்லை. பிறரை அச்சுறுத்திக்கொண்டிருப்பதனாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற மனநோயும் ஒரு காரணம்.”
Pa Raghavan, Dollar Desam
“அவர்”
Pa. Raghavan, Dollar Desam