Arthamulla Hindu Matham, Vols. 1-10 Quotes
Arthamulla Hindu Matham, Vols. 1-10
by
Kannadasan1,436 ratings, 4.09 average rating, 79 reviews
Arthamulla Hindu Matham, Vols. 1-10 Quotes
Showing 1-30 of 51
“என் பொருள் எங்கே என்று கேட்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்; யாசிப்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“குடும்பக் கோபம் தணியும்; தொழிலின் கவலை தணியும்; கடன் கவலை தணியும்; ஆனால், பகை உணர்ச்சி மட்டும் சீக்கிரம் தணியாது. ஒரு தடவை யார் மீதாவது பகை ஏற்பட்டு விட்டால், அது திடீர் திடீர் என்று தோன்றும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“வறுமையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறெதுவும் கிடையாது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது. எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு ‘அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும். எதிர்த்தால் வேரொடு பிடுங்க முயலும். பக்குவமற்ற நிலை என்பது இரண்டு ‘எக்ஸ்ட்ரீம்’ நிலை. ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும். பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“எது நடக்கக்கூடாது’ என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ, நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக, அது நடந்தே விடுகிறது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“காட்டில் முளைத்த மரமும் கவலையுறும் காலம் இலையுதிர் காலம். ஆற்று மணலும், கவலைப்படும் காலம், கோடைக் காலம். பகுத்தறிவற்ற விலங்குகளும் கவலைப்படும் காலம், அவை பயப்படும் காலம். இவற்றுக்கெல்லாம் யார் ஆறுதல் கூறப்போனார்கள்? மானிட ஜாதி ஆறுதல் தேடுகிறது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“வசதியுள்ளவர்கள் பாரியாகலாம், பச்சையப்பராகலாம், அழகப்பராகலாம். மன நிலையில் தெளிவுள்ளவர்கள் தலைவர்களாகலாம். உடல் நிலையில் வலுவுள்ளவர்கள் தொண்டர்களாகலாம். ஒன்றும் முடியாதவர்கள், நான்கு சுவர்களுக்குள் அடங்கியுள்ள தங்கள் குடும்பத்தை நாணயமான முறையில் காப்பாற்றலாம்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“குடும்பத்தைக் கோவில் ஆக்கிக்கொள்ள முடியாதவர்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட இடங்களே, கோயில்கள். மனத்தைக் குளிப்பாட்டி மகேஸ்வரனைக் காணச் சக்தியற்ற உள்ளங்கள், உடலைக் குளிப்பாட்டி உமாபதியைக் காண ஏற்படுத்தப்பட்டவையே பொதுக் குளங்கள். அடக்க ஒடுக்கத்தோடு ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திப்பதால், மனோதத்துவப்படி அந்த அடக்கம் பிறர்க்கும் வரும் என்பதைக் காட்டுவதற்காகவே, தேர்த்திருவிழாக்கள். தனிமையில் ஒருமுகப்படுத்த முடியாத மனது, சந்நிதானத்தில் ஒருமுகப்படுத்தப்படுகிறது. சிந்தனைக் குழப்பங்களில் ஆழ்ந்துவிடாமலிருக்கத் தேங்காய் உடைப்பதிலும், தீபாராதனை காட்டுவதிலும் சிந்தனை திருப்பி விடப்படுகிறது. குறைந்த பட்சம், மனிதனை மனிதனாக வைப்பதற்கே இந்துமதம் பெருமுயற்சி எடுத்தது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்து விட்டால் ‘சமதர்மம்’ என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபடப் போகிறது?”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும். தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது; திட்டமிடுவதாகும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“எதிரே வந்த மாலைகளைப் பார்த்துப் பின்னாலே திரும்பிப் பார்த்தேன். அங்கேயும் மாலைகள் வந்து கொண்டிருந்தன. நான் நின்று விடவில்லை.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“நீ எதை விரும்புகிறாயோ அதை ஒரு கட்டத்தில் வெறுக்கவும், எதை வெறுக்கிறாயோ அதை ஒரு கட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனுடைய லீலை!” என்றேன் நான். “ஒன்றை விரும்பும் போதே, ஒரு நாள் வெறுக்க வேண்டி இருக்கும் என்று எண்ணி கொண்டு விட்டால், விருப்பு வெறுப்புகள்”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“பிற உயிர்களின் அழுகை ஒலி, எப்போது உன் ஆன்மாவுக்குள் இருந்து நீ அழுவது போலவே கேட்கிறதோ, அப்போது தான் நீ பக்குவம் பெற்ற ஞானி ஆகிவிட்டாய் என்று அர்த்தம்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“ஆண்மையினைச் சோதித்த அனுபவமே ஞானம்”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டுவிட்டதென்று கருதுங்கள். வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள். புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள். ‘நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“துன்பங்களிலெல்லாம் குறைந்தபட்சத் துன்பம் நமக்கு வந்ததுதான்’ என்று கருதினால், எந்தத் துன்பமும் துன்பமாக இருக்காது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“நாற்பது வரையிலே ஒலி எழும்பும் வீணைகள், நாற்பதுக்கு மேலேதான் எதிரொலியைக் கேட்கத் தொடங்குகின்றன”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“பகையில் நிதானம் வந்தால், நட்பு சந்நிதானமாகி விடும். அந்தச் சந்நிதானத்தில் பகைவன் பக்தனாவான்; நீ தெய்வமாவாய்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“பகையிலே தாறுமாறாக வந்து விழும் வார்த்தைகள், பிறகு நட்பு வரும்போது குறுக்குச் சுவராகித் தடைக்கல்லாகி விடும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“புலன்களை அடக்கி, ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால், பகை உணர்ச்சி அழியும்; பகைவன் பணிவான்; உள்ளம் ஒரு முகப்படும்; உடல்நிலை ஒரே சீராக இருக்கும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கும் பகை உணர்ச்சி எதிரியைத் தாக்காது; உன் உடலைத்தான் தாக்கும். பிறருக்குப் பகைவன் என்று தன்னை வரித்துக்கொண்டு விட்டவன், தானே தனக்கு எதிரியாகிறான்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“அறிவால் உணர்ந்து விடு; இல்லையேல் அனுபவம் காட்டிவிடும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“காரணத்தோடு வரும் துன்பங்களை, விவேகத்தோடு சமாளிக்க வேண்டும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“ஜன்னலின் அளவைப் பொறுத்தே காற்று வருகிறது. ஜன்னல்கள் இல்லாத வீடு சுகாதாரத்தைக் கெடுக்கிறது. அதுபோல், சூழ்நிலைகளைப் பொறுத்துத் துன்பம் வருகிறது; அந்தச் சூழ்நிலைகளை நீக்கிக்கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத்தான் இருக்கிறது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“ஒரு கட்டம் வரையில் இனிப்பை ருசி பார்த்த பிறகு அதுவே கசப்பாகி விடுகிறது. கசப்பை உணரத் தொடங்கும்போது, வாழ்க்கை வெறுப்பாகி விடுகிறது. வெறுப்பே வளர்ந்து வளர்ந்து, இதயம் நெருப்பாகி விடுகிறது. இந்த வளர்ச்சிக்கு ஆசைதான் காரணமாகி விடுகிறது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“வாழ்ந்துக்கொண்டே சாவது லௌகீகமாகி விட்டால், செத்தவன் போல் வாழ்வதுதான் ஞானமாகி விடுகிறது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“இத்தோடு போதும்’ என்று எதையும் விடமுடிவதில்லை. நினைவுகள் பின்னிப் பின்னி இழுக்கின்றன. மனித வீணையில் விநாடிக்கு விநாடி சுதிபேதம். ஆயிரக்கணக்கான சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஆண்டவனிடத்தில் ஐக்கியமாவதற்கு இந்துமதம் வழி காட்டுகிறது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“அழுவதன் மூலம் தடுக்கக்கூடியது ஏதுமில்லை; சிரிப்பதன் மூலம் அடையக்கூடியது ஏதுமில்லை; துடிப்பதன் மூலம் எந்தப் பரிகாரமும் கிடைப்பதில்லை.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
