ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் Quotes

Rate this book
Clear rating
ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் (Aanava Kolai Saamikalum Perumitha Kolai Ammankalum) ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் by ஆ. சிவசுப்பிரமணியன்
26 ratings, 4.00 average rating, 6 reviews
ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் Quotes Showing 1-6 of 6
“நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் ஆறு. இராமநாதன் ‘கொலைச் சாமி’ என்று இத்தெய்வங்களைக் குறிப்பிடுவார்.”
ஆ. சிவசுப்பிரமணியன், ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
“குற்றக் கடவுளர் (Criminal Gods) என்ற சொல்லாட்சியைத் தமிழ் அறிஞர் மு. அருணாசலம் உருவாக்கியுள்ளார்.”
ஆ. சிவசுப்பிரமணியன், ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
“சைவ, வைணவக் கடவுளர்கள் ஆகம விதிமுறைகளுக்கு ஆட்பட்டவர்கள். நாட்டார் தெய்வங்கள் ஆகம விதிகளுக்கு உட்படாதவை. பொங்கல் இடுதலையும், படையல் சோற்றையும் உயிர்ப் பலியையும் ஏற்பவை. சாமியாடிகளின் வழியே தம்மை வணங்குவோருடன் உரையாடுபவை.”
ஆ. சிவசுப்பிரமணியன், ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
“தங்கள் அருஞ்செயல்களால் சிலர் தெய்வமானார்கள். தங்களை மீறிய ஊழ்வினைக்கு ஆட்பட்டதனால் சிலர் தெய்வங்களானார்கள். இங்கே வாழ்க்கை முடியாது இறந்ததனால் சிலர் தெய்வங்களானார்கள்.”
ஆ. சிவசுப்பிரமணியன், ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
“பொதுவாகக் கொலைப்பட்டுத் தெய்வமானவளுக்கு ஆட்டைப் பலிகொடுக்கும்போது ஆட்டின் தலை மேலாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளுவார்கள். வேள்வி அல்லது சிவன் அருளால் உருப்பெற்ற நாட்டார் தெய்வமாக இருந்தால் பலி ஆட்டின் தலைகீழாக இருக்கும். கால் மேலே இருக்கும். இப்படியொரு நடைமுறை உண்டு. இங்கு அந்தப் பழைய நடைமுறையே தொடர்கிறது. இவை இரண்டும் பாதாதிகேசம், கேசாதிபாதம் முறைகள் எனப்படுகின்றன.”
ஆ. சிவசுப்பிரமணியன், ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
“புதுப்பெட்டி அம்மனுக்குப் பலிகொடுக்கும் முறை வித்தியாசமானது. இக்கோயிலுக்கு ஆட்டைப் பலிகொடுக்கிறார்கள். ஆனால் மற்ற கோயில்களைப் போலல்ல. ஊர் இளைஞர்கள் சிறிய கட்டைக் கம்பால் ஆட்டை அடித்தே கொல்லுகிறார்கள்.”
ஆ. சிவசுப்பிரமணியன், ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்