ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் [Azhwargal Ore Eliya Arimugam] Quotes
ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் [Azhwargal Ore Eliya Arimugam]
by
Sujatha153 ratings, 4.22 average rating, 11 reviews
ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் [Azhwargal Ore Eliya Arimugam] Quotes
Showing 1-3 of 3
“திருமகளான ஆண்டாளின் பாசுரங்களைப் பார்ப்போம்.”
― ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்
― ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்
“இந்த இடத்தில் முலை என்ற வார்த்தை பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஆழ்வார் பாடல்களில் சரளமாகப் பழகுவது இந்தக் காலத்தில் சற்று விகற்பமாகப்படும். ஆழ்வார் பாடல்களில், ஏன், சங்கப்பாடல்களில்கூடப் பயன்படும்போது அவற்றை அந்தக் காலகட்டத்தின் கோணத்திலிருந்துதான் பார்க்கவேண்டும். அந்தக் காலத்தில் இந்தச் சொல்லுக்கு விரசமற்ற அர்த்தம் இருந்திருக்கிறது. கை, கால் போல மற்றொரு உடலுறுப்பாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அதை மூடி மறைத்து, அதைப் பற்றி அதிகம் வெட்கப்படுவதெல்லாம் பிற்கால வழக்குகள். முலை போல, கொங்கை என்று சொல்லும் ஆழ்வார் பாடல்களில் வரும். ‘கொத்தலர் பூங்குழல் நப்பின்னைக் கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா’ என்ற ஆண்டாளின் வரிகளை ஆபாசமான வரிகள் என்று சொல்வது தவறானது. வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் காலத்துக்கேற்ப மாறுவது எல்லா மொழிகளிலும் உண்டு. உதாரணமாக, ‘நாற்றம்’ என்பது புறநானூற்றுக் காலத்தில் மணம் என்றுதான் அர்த்தம் கொண்டிருந்தது. வாசனை அறியும் புலனறிவுக்குப் பயன்பட்டது. இப்போது துர்நாற்றத்துக்கு மட்டும் அது பயன்படுகிறது. அதுபோலத்தான் கொங்கை என்ற சொல் அந்த நாட்களில் மற்றொரு உறுப்பாகத்தான் பழகி வந்தது. இதை ஆபாசமானது என்று சொல்வது கால வழு. அனக்ரானிசம்.”
― ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்
― ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்
“உளன் கண்டாய் நல்நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (2180) பகவான் என்றும் உள்ளவன். அவனை நினைத்துப் பார்த்தால் போதும். பாற்கடலுக்கோ வேங்கடத்துக்கோ போக வேண்டியதில்லை. உன் உள்ளத்திலேயே கோவில் கொண்டிருக்கிறான் என்று நெஞ்சே அறிந்துகொள்.”