Kota Shivarama Karanth > Quotes > Quote > Premanand liked it
“சீர்திருத்தத்துக்கு ஒரு கருவியாய் நாடக வடிவைப் பயன்படுத்தும் என் யோசனை பொய்யாய்ப் போனதில் நான் ஏமாற்றமுற்றேன். தொழில்முறை நாடகக்குழுக்களைக் கூர்ந்து பரிசீலித்ததில் அவர்களுக்கு இந்த நோக்கில் சற்றும் ஆர்வமில்லை என அறிந்து கொண்டேன். நாடக அரங்கம் அவர்களுக்குப் பிழைக்கும் வழி. சில தொழில்முறைக் கலைஞர்கள் இசை வல்லுநர்களாக இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. எவ்வகைக் கலையிலும் திறம்பட நிகழ்த்துதல் என்பது அந்தக் கலைஞனின் தெளிவிலும் அனுபவத்திலும்தான் அமைந்திருக்கிறது. தெளிவுற அறிதல் என்பது அறிவின் அகலத்திலும் ஆழத்திலும் எடைபோட்டு ஒப்பிடும் திறமையிலும் உள்ளது. ஒரு சாதாரண நடிகனாக இருந்தாலும் பல்வகைப் பாத்திரங்களில் நடிக்க நேரும்போது, அவன் பாத்திரத்தின் பின்புலத்தைச் சற்றேனும் புரிந்துகொள்ள வேண்டும். சரியாக இன்னொரு மனிதனைப்போல் எவனும் அழுவதுமில்லை, சிரிப்பதுமில்லை. ஒரு நாடோடியின் கோபத்துக்கும் துரியோதனனின் கோபத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. துரியோதனன் அரச குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய கோபத்தில் அவனுடைய தன்னம்பிக்கை மிளிர வேண்டும். மேலும் ஒரு மனிதன் எல்லாச் சூழல்களிலும் ஒரேமாதிரி சிரிப்பதுண்டா? அல்லது அழுவதுண்டா?
ஒரு புராணக்கதை நாடகமாக நடிக்கப்படும்போது, நடிகன் நம் தொன்மையான நாகரிகத்தோடு நெருக்கம் பாராட்ட வேண்டும். சமூக நாடகங்களில் கூட நடிப்பது எளிதல்ல. வெவ்வேறு சமூகப் படிநிலைகளிலும் பின்புலத்திலும் வாழும் மக்களின் இதயங்களில் நடிகன் நுழையும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆற்றலை ஒருவன் பெற வேண்டுமானால், அவன் வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால் நம் நடிகர்களில் பெரும்பாலானோருக்கு படிக்கும் பழக்கமில்லை. பலரும் படிப்பு வாசனை அற்றவர்கள். தங்கள் குறுகிய புரிதல் காரணமாக சமூக சீர்திருத்தத்தில் எழும் பிரச்னைகளை அவர்கள் உணர்வதில்லை. நாம் வாழும் முறைமைக்கும் நம் பேச்சுக்கும் இடையில் தொடர்பிருந்தாலன்றி நம் சொற்களில் உறுதி இருக்காது. இதயத்திலிருந்து வருவது எதுவோ அதுவே இதயங்களைத் தொடும். தொழில்முறை நடிகர்களிடம் இத்தகைய இதயம் இல்லை. நாடகம் ஒரு பொழுதுபோக்கு என்ற முறையில் நடிக்கும் தொழில்முறை சாரா நடிகர்களிடம் இதுவே உண்மையாகும்.”
― ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu

No comments have been added yet.