S. Ramakrishnan > Quotes > Quote > Diana liked it

S. Ramakrishnan
“சிலசமயம் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கு ஈரவேஷ்டி காற்றில் உலர்வதுபோல மனது மெல்ல எடையற்றுப்போவதை உணர்ந்திருக்கிறான். சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று தரைமண் எடுப்பதுபோல மூச்சுத் திணறச்செய்வதாக இருக்கும். சில நேரம் உடல் எங்கும் கண்கள் முளைத்துவிட்டது போலவும் தோன்றும்.
வாசிப்பில் ஆழ்ந்துவிட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை பக்கிரி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது. தன்னிடம் இருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை, அது ஒரு மணம், பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது, அதை மலரச் செய்வது, வாசனையைக் கமழவிடுவதுதான் இசையா?
ஒரு நாள் மோகனம் வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென மனதில் இறந்துபோன அம்மாவின் முகம் தோன்றி மறைவதை உணர்ந்தான். இவ்வளவு சந்தோசமான ராகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் மனம் ஏன் என்றோ இறந்துபோய்விட்ட அம்மாவின் மீதான துயரத்தைப் பீறிடச் செய்கிறது. மனம் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதற்குத் துயரம் தேவையானது தானா. அவனுக்குப் புரியவில்லை. ஆனால் துக்கம் பாரம் ஏறுவதாகயிருந்தது.
அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மோகனத்தில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தான். தனது துக்கம் இசையின் வழியே கரைந்து கேட்பவர்களின் மனதை ஈரமாக்கியதை உணரந்தபடியே அவன் மோகனம் வாசித்து முடித்தான்.”
S. Ramakrishnan, சஞ்சாரம் [Sancharam]

No comments have been added yet.