Ramachandra Guha > Quotes > Quote > Premanand liked it

Ramachandra Guha
“டால்ஸ்டாய் மேற்கொண்ட பல மாறுதல்களில் மிகவும் துன்பம் தருவதாக இருந்தது அவர் சிற்றின்ப நுகர்வை முற்றாக ஒதுக்கித் தள்ளியதுதான். அவரது இளமைக்காலத்தில் (அவரது வார்த்தைகளிலேயே), ‘தீவிரமாகப் பெண்களைத் துரத்துபவராக’ இருந்தவர். அவரது மனைவி ஒரு டஜன் தடவைக்குமேல் கருவுற்றார். தனது பண்ணைத்தோட்டத்தில் வேலைசெய்த குடியானவப் பெண்களுடன் அவருக்குத் தொடர்பிருந்தது. ‘கட்டுப்பாடற்ற இச்சை’ கொண்ட ஒரு மனிதரான அவர் நடுவயதில் மற்ற இன்பங்களைப்போல பாலியல் உறவையும் துறக்க முனைந்தார்.

டால்ஸ்டாய் எளிய வாழ்வைக் கைக்கொண்டது பரவலாகப் பேசப்பட்டது; பலர் அவரைப் பின்பற்றவும் செய்தனர். ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் அவரைப் பின்பற்றியவர்கள் ராணுவசேவையில் இணைய மறுத்தனர்; கைத்தொழில், வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தினர்; சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தனர்; சமய சகிப்புத்தன்மை பற்றிப் போதனை செய்தனர். தமது குருநாதர் எழுதியவற்றைப் படித்தும் அவரைப் பின்பற்றியும் இந்த டால்ஸ்டாயர்கள் டால்ஸ்டாய் தனது தாய்மண்ணில் செய்ததாக நம்பப்படுவனவற்றைத் தாமும் தமது நாடுகளில் செய்ய முனைந்தனர்.”
Ramachandra Guha, Gandhi Before India

No comments have been added yet.