Vaikom Muhammad Basheer > Quotes > Quote > கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர் liked it

Vaikom Muhammad Basheer
“கன்னியாகுமரிமுதல் காஷ்மீர் வரையிலும் கராச்சிமுதல் கல்கத்தாவரையிலும் - அப்படி பாரதத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பெண்களும் ஆண்களுமான அந்த அத்தனை நண்பர்களையும் நான் இன்று நினைவு கூர்கிறேன். நினைவு . . . ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும், பாரதத்தைக் கடந்தும் உலகைக் கடந்தும் சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல் . . . அன்பு, என்னையறிந்து அன்பு காட்டுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? அறிதல், எனக்குத் தோன்றுவது ரகசியங்களின் அந்தத் திரையை விலக்குவதுதான். குறைகளையும் பலவீனங்களையும் களைந்து பார்த்தால் என்ன மிச்சமிருக்கப்போகிறது? வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்பு காட்டவும் அன்பு காட்டப்படவும்.”
Vaikom Muhammad Basheer, பஷீர் கதைகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது கதைகள்

No comments have been added yet.